என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "துணிகரம்"
- இளையான்குடி அருகே வீட்டின் முன்பு பெண்ணிடம் 10 பவுன் தாலி செயின் பறிக்கப்பட்டது.
- போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இளையான்குடி
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள பஞ்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரபாண்டி. இவரது மனைவி நாகவள்ளி (வயது57). இவர் சம்பவத்தன்று வீட்டின் முன்பு நின்றிருந்தார். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 வாலிபர்கள் நின்றிருந்தனர். இதை பார்த்த நாகவள்ளி அவர்களிடம் விசாரித்தார்.
அப்போது அவர்கள் அந்த பகுதியில் திருட வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து நாகவள்ளி இங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தார். உடனே மர்மநபர்கள் நாகவள்ளியை கீழே தள்ளி அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்து நாகவள்ளி கொடுத்த புகாரின்பேரில் சாலை கிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக நகை பறிப்பு, வழிப்பறி, திருட்டு ேபான்றவை அடிக்கடி நடந்து வருகிறது. பூட்டி இருக்கும் வீட்டை ேநாட்டமிடும் கொள்ளை யர்கள் கைவரிசை காட்டுவதும், தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பதும் நடந்து வருகிறது. இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- லாரியை திருச்சியை சேர்ந்த டிரைவர் ராஜலிங்கம் ஓட்டி வந்தார்.
- டிரைவர் ராஜலிங்கம் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே மொரட்டாண்டியில் உள்ள சர்வீஸ் ரோட்டில் இரவு நேரங்களில் லாரிகளை நிறுத்திவிட்டு டிரைவர்கள் ஓய்வெடுப்பது வழக்கம். அதுபோல நாமக்கலில் இருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு வானூர் பகுதிக்கு ஒரு லாரி வந்தது. இந்த லாரியை திருச்சியை சேர்ந்த டிரைவர் ராஜலிங்கம் (வயது 56) ஓட்டி வந்தார். நாமக்கலை சேர்ந்த பிரகாஷ் (25) கிளினராக லாரியில் வந்தார். பொருட்களை இறக்கிவிட்டு தனியார் கம்பெனிைய விட்டு வெளியே வருவதற்கு நள்ளிரவாகி விட்டது. இதனால் லாரியை மொரட்டாண்டியில் உள்ள சர்வீஸ் ரோட்டில் நிறுத்திவிட்டு டிரைவர் மற்றும் கிளினர் ஓய்வு எடுத்துள்ளனர்.
அதிகாலை 3 மணியளவில் லாரி அருகே 2 மர்மநபர்கள் வந்தனர். லாரியில் உறங்கி கொண்டிருந்த ராஜலிங்கம், பிரகாஷை எழுப்பி, கையில் உள்ள பணத்தை கொடுங்கள், இல்லையெனில் கத்தியால் குத்திவிடுவோம் என கத்தியை காட்டி மிரட்டினர். இதில் பயந்து போன டிரைவர் ராஜலிங்கம், தன்னிடம் இருந்த ரூ.4,500 பணத்தை கொடுத்துவிட்டார். கிளினர் பிரகாஷ், தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் பிரகாஷின் கையில் கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இது குறித்து டிரைவர் ராஜலிங்கம் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். கத்தியால் வெட்டியதில் கையில் காயத்துடன் வந்த கிளினர் பிரகாஷை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த வானூர் போலீசார் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- மதுரையில் காற்றுக்காக கதவை திறந்து வைத்திருந்தபோது வீடு புகுந்து நகை-பணம் திருட்டு நடந்தது.
- மர்ம நபர் அங்கிருந்த பொருட்களை திருடிக்கொண்டு தப்ப முயன்றார்.
மதுரை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள சனம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி நாகஜோதி (48). இவர்கள் அதிக வெப்பம் காரணமாக இரவில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
குடும்பத்தினர் அயர்ந்து தூங்கிய நிலையில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த ரூ.47 ஆயி ரத்து 500 மற்றும் செல்போனை திருடி கொண்டு தப்பினார்.
இது குறித்த புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு திருட்டு
சிலைமான் செல்வராஜ் நகர் புவனேஸ்வரி காலனியை சேர்ந்த வேலு மகன் சுந்தர் (34). இவர் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். காற்று வாங்குவதற்காக கதவை திறந்து வைத்திருந்த போது வீடு புகுந்த மர்ம நபர் 8 பவுன் தங்க நகை மற்றும் பணம் ரூ.5 ஆயிரத்தை திருடி கொண்டு தப்பினார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து திருடியவர் கைது
மதுரை துரைசாமி நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த முருகன் மகன் சரண்ராஜ் (36). சம்பவத் தன்று மாலை இவர் வெளியே சென்றார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பொருட்களை திருடிக் கொண்டு தப்ப முயன்றார்.
இந்த நேரத்தில் வெளியே சென்ற சரண்ராஜ் அந்த மர்ம நபரை பொதுமக்களு டன் சேர்ந்து விரட்டி பிடித்தார். பின்னர் அவர் எஸ்.எஸ்.காலணி போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் கீழவெளி வீதி லட்சுமிபுரம் 8-வது தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் அகிலன் (40) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
- வெங்கடேசன் (வயது 26) இவர் கடந்த 5 வருடமாக சின்னசேலம் ெரயில் நிலையம் அருகே டீக்கடை நடத்தி வருகிறார்
- வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று, மறுநாள் காலை கடையை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பைத்தந்துறை கிராமத்தைச் சேர்ந்த கடம்பன் மகன் வெங்கடேசன் (வயது 26) இவர் கடந்த 5 வருடமாக சின்னசேலம் ெரயில் நிலையம் அருகே டீக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 3-ந்தேதி வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை கடையை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடை உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ,17 ஆயிரம் பணம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் வெங்கடேசன் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அப்துல் ரஷித் (வயது 61). இவர் திருவெண்ணைய்நல்லூரில் உள்ள இந்தியன் வங்கியில் 8 பவுன் தங்க நகையை இன்று காலை 11.30 மணியளவில் அடமானம் வைத்து ரூ.2 லட்சத்து 36 ஆயிரம் பெற்றார்.
- வீட்டில் வந்து ஸ்கூட்டியை திறந்து பார்த்த போது பணம் வைத்திருந்த கைப்பையை காணவில்லை. இதனைக் கண்டு அப்துல் ரஷித் அதிர்ச்சியடைந்தார்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் பள்ளி வாசல் வீதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஷித் (வயது 61). இவர் திருவெண்ணைய்நல்லூரில் உள்ள இந்தியன் வங்கியில் 8 பவுன் தங்க நகையை இன்று காலை 11.30 மணியளவில் அடமானம் வைத்து ரூ.2 லட்சத்து 36 ஆயிரம் பெற்றார். பணத்தை கைப்பையில் வைத்து வங்கியிலிருந்து வெளியில் வந்தார். அங்கு நிறுத்தியிருந்த அப்துல் ரஷித் (வயது 61). இவர் திருவெண்ணைய்நல்லூரில் உள்ள இந்தியன் வங்கியில் 8 பவுன் தங்க நகையை இன்று காலை 11.30 மணியளவில் அடமானம் வைத்து ரூ.2 லட்சத்து 36 ஆயிரம் பெற்றார்.இவரது வங்கி கணக்குப் புத்தகத்தை வங்கியிலேயே வைத்து விட்டு வந்தது அப்போது தான் அவருக்கு நினைவுக்கு வந்தது. மீண்டும் வங்கிக்குள் சென்று வங்கி புத்தகத்தை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார். வீட்டில் வந்து ஸ்கூட்டியை திறந்து பார்த்த போது பணம் வைத்திருந்த கைப்பையை காணவில்லை. இதனைக் கண்டு அப்துல் ரஷித் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக திருவெண்ணைய்நல்லூர் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்படி சம்பவ நடந்த இந்தியன் வங்கிக்கு போலீசார் விரைந்து வந்தனர். அங்குள்ள சி.சி.டி.வி. வீடியோக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
பட்டப்பகலில் வங்கி வாசலில் பணம் கொள்ளை போன சம்பவம் திருவெண்ணைநல்லூர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தினமும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
- வீடு திரும்பினர் அப்போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்து.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கொள்ளர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். கூலித் தொழிலாளி. இவரும் இவரது மனைவியும் தினமும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு கூலி வேலைக்கு நேற்று சென்றனர். பின்னர் மாலையில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்து. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த 2 பேரும் வீட்டின் பூட்டைத் திறந்து உள்ளே சென்ற பார்த்தனர். வீட்டிற்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தை கண்டனர். மேலும், பீரோவில் வைத்திருந்த 5 சவரன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.55 ஆயிரம் பணம் ஆகியவை திருடு போய் இருந்தது.
இதுகுறித்து மணிவண்ணன் கொடுத்த புகாரின் பெயரில் ரோசனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை சேகரித்தனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் திருட்டுச் சம்பவம் நடந்தது திண்டிவனம் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கேப் ரோட்டை சேர்ந்தவர் நிஷார் (வயது 34).
இவர் நாகர்கோவில் அலெக் சாண்டரா பிரஸ் ரோட்டில் செல்போன், கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்யும் கடை வைத்து உள்ளார். தினமும் காலை யில் கடையை திறந்து விட்டு இரவு பூட்டுவது வழக்கம்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு நிஷார் வேலை விஷயமாக கோவைக்கு சென்றார்.இதனால் கடையை அவரது உறவினர் கவனித்து வந்தார். நேற்று இரவு அவர் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இன்று காலை கடைக்கு வந்த போது ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்த போது அங்கு இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் லேப்-டாப் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
மேலும் மேஜையில் இருந்த ரூ.30 ஆயிரமும் மாயமாகி இருந்தது. இது குறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் ஜெசி மேனகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் கடையில் பதிவாகி இருந்த கைரேகை களை பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டது. தொடர்ந்து தனிப் படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதி யில் கொள்ளையர்கள் கை வரிசை காட்டி இருப்பது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் இரணி யல் அருகே உள்ளது திங்கள் நகர். இங்குள்ள இரணியல் சாலையில் ஒரு வணிக வளாகத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது.
அதன் அருகே பல்வேறு கடைகளும் உள்ளன. இதனால் அங்கு எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிக மாக இருக்கும். இன்று காலை அந்த வழியாக வந்த வர்கள், ஏ.டி.எம். அறை கதவு சரியாக மூடப்படாமல் இருப்பதை பார்த்தனர்.
சந்தேகத்தின் பேரில் ஏ.டி.எம். மையம் அருகே அவர்கள் சென்ற போது அந்த எந்திரம் சேதப்படுத் தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து வங்கி யின் மேலாளர் ஹசீந்தருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டார். அப்போது ஏ.டி.எம். எந்தி ரத்தின் முன்பக்க கதவை யாரோ மர்ம மனிதர்கள், கம்பியால் நெம்பியிருப்பது தெரிய வந்தது.
எனவே நள்ளிரவுக்கு மேல் யாரோ சிலர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அவர், இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.
அவர்கள், கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வரும் பகுதியின் கீழ் உள்ள இடம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த போலீ சார், அதுகுறித்து ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடம் வந்து தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் வங்கி ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்திருப்பது அந்தப் பகுதியில் பரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்