search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடன் செயலி"

    • நேரில் சென்றும், தொலைபேசி அழைப்புகள் மூலமாகவும் பலமுறை மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.
    • தேஜஸ் திருப்பி செலுத்த வேண்டிய தொகை சுமார் ரூ.46000 என தெரிகிறது.

    சீனாவை மையமாக கொண்டு செயல்படும் கடன் செயலிகளின் மூலம் கடன் பெறுவதும், அவற்றை திருப்பிச் செலுத்த முடியாமல் அந்த நிறுவன முகவர்களால் மிரட்டலுக்கு ஆளாவதும், அதனால் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில், கர்நாடகாவின் எலஹங்காவில் உள்ள நிட்டே மீனாட்சி கல்லூரியில் பொறியியல் படிப்பில் 6-வது செமஸ்டர் படித்து வந்த தேஜஸ் (22) எனும் பொறியியல் மாணவர், இரு தினங்களுக்கு முன்பு ஜலஹள்ளியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

    'ஸ்லைஸ் அண்ட் கிஸ்' (Slice and Kiss) எனப்படும் ஒரு சீன செயலி மூலம் மாணவர் தேஜஸ் கடனாக பணம் பெற்றிருக்கிறார். ஆனால் அந்த தொகையை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. கடன் விவரத்தை அறிந்த தேஜஸின் தந்தை கோபிநாத், மகன் சார்பில் தொகையை தவணை முறையில் திருப்பித் தருவதாக ஒப்புக்கொண்டார். ஆனாலும் கடன் வழங்கிய முகவர்கள் தேஜஸின் வீட்டிற்கு நேரில் சென்றும், தொலைபேசி அழைப்புகள் மூலமாகவும் பலமுறை மிரட்டல் விடுத்திருக்கின்றனர். அவர் பெற்ற கடனை உடனே திருப்பி செலுத்தத் தவறினால், அவரது செல்போனில் உள்ள அந்தரங்கப் புகைப்படங்களை அம்பலப்படுத்துவதாக அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தேஜஸ் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டிருக்கிறது.

    "நான் என்ன செய்தாலும் அம்மாவும் அப்பாவும் என்னை மன்னிக்கவும். இதை தவிர எனக்கு வேறு வழியில்லை. என் பெயரில் உள்ள மற்ற கடன்களை என்னால் செலுத்த முடியவில்லை. இது எனது இறுதி முடிவு. குட்பை." என்று தேஜஸ் தற்கொலைக்கு முன் எழுதியிருக்கும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    இறப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு, கோபிநாத் நிலுவையில் உள்ள கடனை அடைக்க கூடுதல் அவகாசம் கோரியிருந்தார். ஆனால் கடன் வழங்கியவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

    தேஜஸ் திருப்பி செலுத்த வேண்டிய தொகை சுமார் ரூ.46000 என தெரிகிறது.

    • மேலும் 61 கடன் செயலிகள் சட்டவிரோதமாக இயங்கி வருவதை ‘சைபர் கிரைம்' போலீசார் கண்டறிந்து உள்ளனர்.
    • தற்போது ‘ஸ்மார்ட்' செல்போன்களில் கடன் செயலிகள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

    சென்னை :

    சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பதிவுகளில் அவதூறு தகவல்கள், சட்டவிரோத கருத்துகள், பதிவுகளை 'சைபர் கிரைம்' போலீசார் கண்காணித்து அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் கடந்த 3-ந் தேதி வரையில் 'பேஸ்புக்', 'இன்ஸ்ட்ராகிராம்', 'டுவிட்டர்', 'யூடியூப்' போன்ற சமூக வலைத்தளங்களில் இருந்து 40 சட்டவிரோத பதிவு கள், கருத்துகள் 'சைபர் கிரைம்' போலீசார் நடவடிக்கை மூலம் நீக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் முக்கிய பிரமுகர்கள் பற்றி 386 அவதூறு 'வீடியோ' பதிவுகள் இருப்பதை 'சைபர் கிரைம்' போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்த 'வீடியோ' பதிவுகளை முடக்க வேண்டும் என்று 'யூடியூப்' நிறுவனத்துக்கு 'சைபர் கிரைம்' போலீசார் கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பி உள்ளனர்.

    தற்போது 'ஸ்மார்ட்' செல்போன்களில் கடன் செயலிகள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த செயலி மூலம் கடன் வாங்கி கூடுதல் வட்டியை கட்ட முடியாமல் பலர் பரிதவிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே 'சைபர் கிரைம்' போலீசார் நடவடிக்கையால் 221 சட்டவிரோத கடன் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன.

    ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் மேலும் 61 கடன் செயலிகள் சட்டவிரோதமாக இயங்கி வருவதை 'சைபர் கிரைம்' போலீசார் கண்டறிந்து உள்ளனர். அந்த செயலிகளையும் முடக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர். தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய்குமார், போலீஸ் சூப்பிரண்டுகள் தேவரானி, ஸ்டாலின், அசோக்குமார் ஆகிய அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    • கடன் செயலி மூலம் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மக்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் கும்பல் ஈடுபட்டுள்ளது.
    • கேரள கும்பலிடம் கிடைத்த சில தகவல்களின் படி கும்பல் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் 200 பேரிடம் கைவரிசை காட்டியுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பொங்குபாளையத்தை சேர்ந்த 32 வயது பெண் கடந்த டிசம்பர் மாதம் 15ந் தேதி 'பைசா ஹோம்' என்ற கடன் செயலியை பதிவிறக்கம் செய்து 3 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார். அந்த பணத்தை குறிப்பிட்ட சில நாட்களுக்குள் அப்பெண் செலுத்தினார். தொடர்ந்து கடன் பெற தகுதியுடையவர் என்று எஸ்.எம்.எஸ்., வந்தது. இதையடுத்து கடன் செயலி மூலம் 15 ஆயிரம் ரூபாயை கடன் பெற்றார்.

    இந்தநிலையில் தவணை காலம் முடியும் முன்னரே பணத்தை திருப்பி செலுத்த கூறி எஸ்.எம்.எஸ்., வந்தது. பணத்தை செலுத்தாவிட்டால் சமூகவலைதளங்களில் ஆபாச படங்களை வெளியிடுவோம் என்று அந்த பெண்ணை மிரட்டியதுடன் அந்த பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஆபாசமான பதிவுகளை அனுப்பி உள்ளனர்.

    இது தொடர்பாக அந்த பெண் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சஷாங் சாயிடம் புகார் செய்தார். எஸ்.பி., உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் தனிப்படை போலீசார் விசாரித்தனர்.

    விசாரணையில் திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட காதர்பேட்டை மற்றும் பி.என்., ரோடு புஷ்பா சந்திப்பு அருகே அறை எடுத்து கால் சென்டர் அமைத்து ஒரு கும்பல் குற்ற செயல்களில் ஈடுபட்டது தெரிந்தது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த முகமது அஸ்கர், (வயது 24), முகமது ஷாபி(36), முகமது சலீம்(37), அனீஷ் மோன் (33) மற்றும் அஸ்ரப்( 46) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் வெளிநாட்டு கடன் செயலி மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு கடன் வழங்குவதாகவும், புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டியும் பணம் பறித்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் பயன்படுத்திய ஹைடெக்கான 11 சிம் பாக்ஸ், 500 சிம் கார்டுகள், 6 மோடம், 3 லேப்டாப், யு.பி.எஸ்., மற்றும் பேட்டரி, 20 ஏ.டி.எம்., கிரெடிட் கார்டுகள், யூரோ டாலர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து கைதான 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இக்கும்பல் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் 200 பேரின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டு பண மோசடியில் ஈடுபட்ட புதிய தகவல் தெரியவந்துள்ளது.

    கடன் செயலி மூலம் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மக்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் இக்கும்பல் ஈடுபட்டுள்ளது. கேரள கும்பலிடம் கிடைத்த சில தகவல்களின் படி இக்கும்பல் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் 200 பேரிடம் கைவரிசை காட்டியுள்ளனர்.

    இதில் ஏராளமான மோசடி நபர்கள் தொடர்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இக்கும்பலிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் எண், ஐ.எம்.இ., உள்ளிட்ட விபரங்களை டெல்லியில் உள்ள தேசிய சைபர் கிரைமிடம் ஒப்படைக்கப்பட்டு முதல்கட்டமாக விசாரிக்கப்பட்டது.

    அதில் மேற்கொண்ட விபரங்கள் 200 மோசடி புகார்களில் பொருந்துவது தெரிய வந்துள்ளது. 200 பேரின் ஆபாச படங்களை வெளியிட்டு பணம் பறித்துள்ளனர். தற்போது இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது. இந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்த எஸ்.டி.பி. என்ற பெயரை கொண்ட கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரின் உண்மையான பெயர், முகவரி உள்ளிட்டவை குறித்து விசாரணை நடக்கிறது.

    இதுதவிர இந்த நபர் மூலமாகவே திருப்பூர் தேர்ந்தெடுக்கப்பட்டு சிம் பாக்ஸ், சிம் கார்டு மாற்றுவது உட்பட அனைத்து உத்தரவுகளையும் இக்கும்பல் பெற்று செயல்படுத்தி வந்துள்ளனர். கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்த எஸ்.டி.பி. என்ற பெயரை கொண்ட கேரள மாநிலத்தை சேர்ந்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஒரு கட்டிடத்தில் கால்சென்டர் அமைத்து கடன் செயலி மோசடி கும்பல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
    • கடன் பெற்றவர்கள் கடனை 2 வாரத்தில் செலுத்தியும், அனுப்பிய பணம் எங்களது வங்கி கணக்கிற்கு வரவில்லை.

    திருப்பூர்:

    ஆன்லைன் கடன் செயலி மூலம் பொதுமக்களுக்கு கடன் வழங்கும் கும்பல், பின்னர் அவர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

    இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஏராளமானோர் போலீசில் புகார் செய்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் ஆன்லைன் கடன் செயலியால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட எஸ்.பி.,சசாங் சாயிடம் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து பொதுமக்களை ஏமாற்றி பணமோசடி மற்றும் ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டுகும்பலை பிடிக்க சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் சித்ரா தேவி தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் மோசடி கும்பல் யாரென்று விசாரணை நடத்தி வந்தனர்.

    அப்போது அந்த கும்பல் திருப்பூர் காதர்பேட்டையில் இருந்து பொதுமக்களை தொடர்பு கொண்டு பேசி வருவது செல்போன் சிக்னல் மூலம் கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் காதர்பேட்டை சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு கட்டிடத்தில் கால்சென்டர் அமைத்து கடன் செயலி மோசடி கும்பல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த கும்பலை சேர்ந்த 5பேரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கேரள மாநில கோழிக்கோடு பகுதியை சேர்ந்த முகமது அஸ்கர் (வயது24) முகமது ஷாபி (36), முகமது சலீம், (37)அனிஸ்மோன் (33), அஷ்ரப் (46) என்பது தெரியவந்தது. 5பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்க பயன்படுத்திய 6 இணையதள மோடம், 3 லேப்டாப்கள், 11 சிம் பாக்ஸ்(ஒரு பாக்சில் 100 சிம்கார்டுகள்), மற்றும் 500 சிம்கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், திருப்பூர் காதர்பேட்டையில் கால்சென்டர் அமைத்திருந்த அவர்கள் ஒரு நாளைக்கு 3500 பேரை தொடர்பு கொண்டு கடன் செயலி மூலம் ரூ.3000 முதல் ரூ.15000 வரை கடன் வழங்குவதாக கூறியுள்ளதுடன், இதற்காக இ.மெயில் முகவரி, ஆதார் கார்டு எண், புகைப்படம் ஆகியவற்றை வாங்கியுள்ளனர். பணம் தேவைப்பட்டவர்கள் மோசடி கும்பல் என்பது தெரியாமல் தங்களது ஆவணங்களை கொடுத்து கடன் பெற்றுள்ளனர்.

    அப்படி கடன் பெற்றவர்கள் கடனை 2 வாரத்தில் செலுத்தியும், அனுப்பிய பணம் எங்களது வங்கி கணக்கிற்கு வரவில்லை. எனவே பணத்தை திரும்ப அனுப்புங்கள். இல்லையென்றால் உங்களின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து உங்களது உறவினர்கள், நண்பர்களின் வாட்ஸ்அப் மற்றும் இணையதளங்களில் பதிவேற்றி விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் பலர் மோசடி கும்பலிடம் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளனர். தொடர்ந்து மிரட்டல் விடுக்கவே பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் எஸ்.பி.யிடம் புகார் செய்துள்ளனர். எஸ்.பி. அமைத்த தனிப்படை போலீசாரின் பிடியில் தற்போது 5பேரும் சிக்கிக்கொண்டனர். இந்த கும்பல் தமிழகம் முழுவதும் பலரிடம் பேசி பணம் பறித்து ஏமாற்றியுள்ளனர். அவர்கள் புகார்கள் கொடுக்கும் பட்சத்தில் 5 பேர் மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சசாங் சாய் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடன் செயலி மூலம் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த 5பேரை கைது செய்துள்ளோம். தமிழகம் முழுவதும் அவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம். இந்த சம்பவம் சங்கிலி தொடர்போல் நீள்கிறது. மோசடி கும்பலின் வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடன் செயலி மூலம் பணம் பெற வேண்டாம். அப்படி யாராவது போன் செய்தால் 1930 என்ற போன் நம்பரை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். கைதானவர்கள் 2 மாதமாக திருப்பூர் காதர்பேட்டையில் தங்கியிருந்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×