search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய பொருளாதார வளர்ச்சி"

    • இந்தியாவின் ஜி.டி.பி. ரூ.43.84 லட்சம் கோடியாக இருந்தது.
    • காலாண்டில் சுரங்கம், கட்டுமானம், வா்த்தகம் உள்ளிட்ட துறைகளின் உற்பத்தி மதிப்பும் அதிகரித்தது.

    புதுடெல்லி:

    கடந்த 2023-24-ம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 8.2 சதவீதம் வளா்ச்சி அடைந்ததாக தேசிய புள்ளியியல் அலுவலக (என்.எஸ்.ஒ.) புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2022-23-ம் நிதியாண்டில், இந்தியாவின் ஜி.டி.பி. வளா்ச்சி 7 சதவீதமாக இருந்தது. இது 2023-24-ம் நிதியாண்டில் 8.2 சதவீதமாக வளா்ச்சியடைந்துள்ளது. இதற்கு உற்பத்தித் துறை சிறப்பாகச் செயல்பட்டது முக்கிய காரணம். இந்த வளா்ச்சி இந்தியாவின் பொருளாதார மதிப்பு 3.5 டிரில்லியன் டாலரை (சுமாா் ரூ.292 லட்சம் கோடி) எட்ட உதவியதுடன், அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார மதிப்பு 5 டிரில்லியன் டாலரை (சுமாா் ரூ.417 லட்சம் கோடி) எட்ட வழியமைத்துள்ளது.

    கடந்த 2022-23-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில், இந்தியாவின் ஜி.டி.பி. ரூ.43.84 லட்சம் கோடியாக இருந்தது. இது 2023-24-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் ரூ.47.24 லட்சம் கோடியாக 7.8 சதவீதம் வளா்ச்சியடைந்தது.

    கடந்த 2022-23-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் உற்பத்தித் துறையின் மொத்த மதிப்பு 0.9 சதவீதமாக இருந்தது. இது 2023-24-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் 8.9 சதவீதமாக வளா்ச்சி அடைந்தது.

    இதேபோல 2022-23-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2023-24-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் சுரங்கம், கட்டுமானம், வா்த்தகம் உள்ளிட்ட துறைகளின் உற்பத்தி மதிப்பும் அதிகரித்தது.

    2022-23-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் வேளாண் துறையின் உற்பத்தி மதிப்பு 7.6 சதவீதமாக இருந்தது. இது 2023-24-ம் நிதியாண் டின் 4-வது காலாண்டில் 0.6 சதவீதமாக கடுமையாக சரிந்தது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2022-23 நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் 6.2 சதவீதம் உள்நாட்டு மொத்த உற்பத்தி இருந்தது.
    • 2022-23 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் இருந்த நிலையில், தற்போது 2023-24 நிதியாண்டில் 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டின் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம் என தேசிய புள்ளியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவின் ஆண்டு பொருளாதார வரள்ச்சி 8.2 சதவீதமாக உள்ளது.

    அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3-வது காலாண்டின் பொருளாதார வளர்ச்சி 8.6 ஆக இருந்த நிலையில் கடைசி காலாண்டின் வளர்ச்சி .4 சதவீதம் குறைந்துள்ளது.

    2022-23 நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் 6.2 சதவீதம் உள்நாட்டு மொத்த உற்பத்தி இருந்தது. தற்போது 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2022-23 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் இருந்த நிலையில், தற்போது 2023-24 நிதியாண்டில் 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    2023-24 நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.

    சீனாவின் பொருளாதார வளர்ச்சி ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் 5.3 சதவீதம என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகரித்து வரும் கடன் சுமை, வருமானத்தில் மெதுவான வளர்ச்சி ஆகியவற்றால் தனியாரின் நுகர்வு குறைந்து விடும்.
    • கொரோனாவுக்காக அளிக்கப்பட்ட நிதி ஆதாரங்கள் வாபஸ் பெறப்பட்டதால், அரசின் நுகர்வும் மெதுவாகவே இருக்கும்.

    புதுடெல்லி:

    உலக வங்கி தனது அறிக்கையில், ''அதிகரித்து வரும் கடன் சுமை, வருமானத்தில் மெதுவான வளர்ச்சி ஆகியவற்றால் தனியாரின் நுகர்வு குறைந்து விடும். கொரோனாவுக்காக அளிக்கப்பட்ட நிதி ஆதாரங்கள் வாபஸ் பெறப்பட்டதால், அரசின் நுகர்வும் மெதுவாகவே இருக்கும். குறைவான பொருளாதார வளர்ச்சிக்கு இதுவே காரணங்கள்'' என்று கூறியுள்ளது.

    அதே சமயத்தில், நடப்பு கணக்கு பற்றாக்குறை 3 சதவீதத்தில் இருந்து 2.1 சதவீதமாகவும், பணவீக்கம் 6.6 சதவீதத்தில் இருந்து 5.2 சதவீதமாகவும் குறையும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

    • கடந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்தது.
    • மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.157 லட்சத்து 60 ஆயிரம் கோடியாக இருக்கும்.

    புதுடெல்லி:

    நடப்பு நிதிஆண்டில் (2022-2023) இந்திய பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசின் தேசிய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது.

    கடந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    உற்பத்தி துறையின் செயல்பாடு மந்தமாக இருப்பதே பொருளாதார வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு காரணம் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.157 லட்சத்து 60 ஆயிரம் கோடியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

    ×