என் மலர்
நீங்கள் தேடியது "பேனர் கிழிப்பு"
- பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- காரை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனரை மர்மநபர்கள் கிழித்ததால் ஆத்திரமடைந்த அக்கட்சியினர் சாலையின் குறுக்கே காரை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரை சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைவிட்டனர்.
- தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகரமன்ற உறுப்பினர் சலீம் டிஜிட்டல்பேனர் அமைத்திருந்தார்.
- இதனை தொடர்ந்து தலைமறைவான ராஜியை வலை வீசி தேடி வருகின்றனர்.
கடலூர்:
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகரமன்ற உறுப்பினர் சலீம் டிஜிட்டல்பேனர் அமைத்திருந்தார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி 12வது ஆண்டு விழா வரும் ஜனவரி 15-ந்தேதி தைப்பொங்கல் அன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகரமன்ற உறுப்பினர் சலீம் டிஜிட்டல்பேனர் அமைத்திருந்தார். அந்த டிஜிட்டல் பேனர் கிழிக்கப்பட்டிருந்தது.இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் (பொ)நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குவிரைந்து சென்று இது குறித்துவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் விசாரணையில் பண்ருட்டி போலீஸ் லைன் 3-வது தெரு ராஜி என்பவர் இந்த பேனரை குடிபோதையில் கிழித்தது தெரிய வந்தது இதனை தொடர்ந்து தலைமறைவான ராஜியை வலை வீசி தேடி வருகின்றனர்.
- டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனரை நேற்று இரவு மர்ம நபர்கள் யாரோ கிழித்துள்ளனர்.
- மறியலுக்கு முயன்றனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே கோலியனூர் கடைவீதியில் பா.ம.க. சார்பில் மாநில வன்னியர்சங்க தலைவர் காடுவெட்டி குரு பிறந்தநாளையொட்டி டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனரை நேற்று இரவு மர்ம நபர்கள் யாரோ கிழித்துள்ளனர். இன்று காலை அங்கு சென்ற பா.ம.க.வினர் பேனர் கிழிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி யடைந்தனர். சிறிதுநேரத்தில் அந்த பகுதியில் பாட்டாளி இளைஞர் சங்கத்தினர், வன்னியர்சங்கத்தினர் மற்றும் பா.ம.க.வினர் ஏராள மானோர் திரண்டனர்.
அவர்கள் மறியலுக்கு முயன்றனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்த வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமை யிலான போலீசார் அங்கு விரைந்தனர். அங்கு திரண்ட பா.ம.க.வினரிடம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவி த்தனர். இதனை த்தொடர்ந்து பா.ம.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். என்றாலும் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான விதிமுறைகள் அடங்கிய பிளக்ஸ் பேனர் பேரூராட்சி நிர்வாகம் மூலம் வைக்கப்பட்டிருந்தது.
- இந்த பிளக்ஸ் பேனரை மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சி அலுவ லகம் முன்பு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான விதிமுறைகள் அடங்கிய பிளக்ஸ் பேனர் பேரூராட்சி நிர்வாகம் மூலம் வைக்கப்பட்டிருந்தது. இந்த பிளக்ஸ் பேனரை மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு வேலூர் பேரூராட்சி அலுவ லகம் முன்பு வைக்கப்பட்டி ருந்த பிளக்ஸ் பேனரை கிழித்து சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.புகாரின் அடிப்படையில் வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கிழித்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கட்சி நிர்வாகிகள் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
- போலீசார் பேனரை கிழித்த நபர்கள் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
விக்கிரவாண்டியில் நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றி கழகம் சார்பில் பிரம்மாண்ட மாநாடு நாளை மறுநாள் 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அக்கட்சி நிர்வாகிகள் சார்பில் திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே திருப்பூர் கரட்டாங்காடு பஸ் நிறுத்தம் பகுதியில் இருபுறமும் தமிழக வெற்றி கழகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட பேனரை மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர். 2 நாட்களில் மாநாடு நடைபெற உள்ள நிலையில் பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் அக்கட்சி நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கட்சி நிர்வாகிகள் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். போலீசார் பேனரை கிழித்த நபர்கள் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.