search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீழடி"

    • கீழடி ஊராட்சியில் இலவச தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
    • முடிவில் விழா ஒருங்கிணைப்பாளர் கருணாகர சேதுபதி நன்றி கூறினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் கீழடிஊராட்சியில் பாண்டிய மண்டல பேரமைப்பு மற்றும் வைகை உழவர் பிரிவு பசுமை பூமி இணைந்து நடத்திய மூன்றாம் ஆண்டு விதைதிருவிழா நடந்தது. சிவகங்கை அரசுமருத்துவ கல்லூரி டாக்டர் சரோஜினி தொடங்கி வைத்தார். கீழடி ஊராட்சி தலைவர் வெங்கிட சுப்பிரமணியன் வரவேற்றார். அருட்தந்தை ஜெகத்கஸ்பர், சூழலியல் எழுத்தாளர் நக்கீரன், தாளான்மை ஆசிரியர் பாமயன் ஆகியோர் இயற்கை பாதுகாப்பு பற்றியும் பாரம்பரிய நெல் விதைகளை பற்றி பேசினார்கள்.

    விழாவில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள், பொதுமக்களுக்கு தென்னை கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. பாரம்பரிய அரிசி வகைகளில் தயாரான உணவுகள் வழங்கப்பட்டது. பாரம்பரிய நெல் வகைகள், வேளாண் பொருள்கள், இயற்கையான மருத்துவ குணமுடைய தாவரங்கள், சிறுதானிய பொருட்கள் கண்காட்சி நடந்தது. முடிவில் விழா ஒருங்கிணைப்பாளர் கருணாகர சேதுபதி நன்றி கூறினார்.

    • சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தில் தமிழர்கள் நாகரிகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சிபடுத்தப் பட்டுள்ளது.
    • இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தில் தமிழர்கள் நாகரிகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சிபடுத்தப் பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர். கீழடி அருங்காட்சியகத்தை ஏராளமான திரைப்பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும், வெளிநாட்டு தூதுவர்களும் பார்த்து செல்கின்றனர்.

    இந்நிலையில் இன்று தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான சூர்யா தனது மனைவி ஜோதிகா, தந்தை சிவக்குமார் மற்றும் உறவினர்களுடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அப்போது மதுரை எம்.பி. சு.வெங்க டேசன் உடன் இருந்தார். அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை தொல்லியல் துறை அதிகாரிகள் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா ஆகியோருக்கு விளக்கி கூறினர். அதனை அவர்கள் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.

    • அரசு பள்ளி மாணவர்கள் கீழடிக்கு சுற்றுலா சென்றனர்.
    • முதல்-அமைச்சரின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் யூனியன் கவுன்சிலர் தென்பழஞ்சி சுரேஷ் ஏற்பாட்டின் பேரில் தென்பாண்டி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்பு மொழி தலைமையில் மாணவர்கள் 130 பேர், வேடர் புளியங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முத்துப்பிள்ளை, சத்தியபாமா ஆகியோர் தலைமையில் 230 மாணவர்கள் 4 பஸ்களில் கீழடிக்கு சுற்றுலா சென்றனர். அங்குள்ள தொல்லியல் அருங்காட்சியத்தை பார்வையிட்டனர்.

    பின்னர் அவர்கள் முதல்-அமைச்சரின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் வகையில் திருப்பாலையில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டனர். பகுதி அமைப்பாளர் சாரதி, ராஜா, நாகேந்திரன் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

    • கீழடி அருங்காட்சியகத்தை பார்த்து மெக்சிகோ தூதர் வியப்படைந்தார்.
    • கல்மண்டபம் முன்பு போட்டோ எடுத்து கொண்டார்.

    மதுரை-ராமேசுவரம் சாலையில் சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை இந்தியாவிற்கான மெக்சிகோ நாட்டு தூதர் பெடரிக்கோ சலாஸ் லோட்பி பார்வையிட்டார். இந்த அருங்காட்சியகம் மார்ச் 5 முதல் திறக்க பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    தினமும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், வரலாற்று ஆய்வாளர்கள் அருங்காட்சியகத்தில் ஆய்வின் போதுகிடைத்த காட்சிபடுத்தப்பட்ட அரிய பொருட்களை பார்வையிட்டு செல்கின்றனர்.

    உலகதரத்தில் உள்ள கீழடி அகழ்வைப்பகத்தையும் அகழ்வாராய்ச்சி நடந்த அகரம், கொந்தகை, மணலூர் பகுதியை பார்வையிட்ட இந்தியாவுக்கான மெக்சிகோ நாட்டு துாதர் பெடரிக்கோ சலாஸ் லோட்பி காட்சிப்படுத்தப்பட்டுள்ள 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்களை கண்டு ரசித்து வியந்தார்.

    அருங்காட்சியகத்தை சுற்றி பார்த்த தூதர் கல்மண் டபம் முன்பு போட்டோ எடுத்து கொண்டார். பின்னர் 7-ம் கட்ட அகழாய்வு நடந்த தளம், திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற் றப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

    அவரை கீழடி ஊராட்சி தலைவர் வெங்கடசுப்ரமணியன் வரவேற்று அகழ்வைப்பகத்தில் உள்ள காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை பற்றி எடுத்துக்கூறினார்.

    • செட்டிநாடு கலைநயத்துடன் கீழடி அகழ் வைப்பக கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
    • சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை அரசு முதன்மைச் செயலாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கீழடி அகழ் வைப்பகக் கட்டிடத்தில், தொல்பொருட்களை காட்சிப்படு த்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர்(பொறுப்பு) மணிவண்ணன் முன்னிலையில் சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    வரலாற்று சிறப்பு மிக்க சிவகங்கை மாவட்டத்தில் சங்ககால தமிழர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் பயன்ப டுத்திய பொருட்களை உலகத்தமிழர்கள் பார்த்து, அறிந்து கொள்ளும் வகையில் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகிறது.

    கீழடி அகழாய்வுப் பணியில் கிடைக்கும் தொல்பொருட்களை பார்க்கின்ற வகையில், தமிழர்கள் 4 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்னதாகவே, நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்ப டுத்துவதற்கு ஏதுவாகவும், அந்த பொருட்களை உலகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வருகை புரியும் பொது மக்கள் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், செட்டிநாடு கலைநயத்துடன் ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் புதிய அகழ் வைப்பக கட்டிடம் அமைப்பதற்கு தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

    இந்த கட்டிடத்தின் கட்டுமானப்பணிகள் தற்போது நிறைவுற்றுள்ளது.அகழாய்வு பணிகளின் போது கிடைத்த தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாக, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    சங்க காலத்தமிழர்களின் பெருமைகளை பறைச்சாற்றும் வகையில் உலகளவில் புகழ் பெறவுள்ள கீழடி அகழ் வைப்பக கட்டி டத்தில் நடைபெற்று வரும் நிறைவுப்பணிகள் தொடர்பாக இன்றையதினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டு அதற்கான அனைத்துப்பணிகளும் நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது தொல்லியியல் துறை ஆணையர் (முழு கூடுதல் பொறுப்பு)சிவானந்தம், கீழடி கட்டட மையம் மற்றும் பாதுகாப்பு கோட்ட (சென்னை) செயற்பொ றியாளர் மணிகண்டன், மாவட்ட வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கீழடி அகழ் வைப்பக கட்டுமான பணிகள் இந்த மாத இறுதியில் முடிவடையும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
    • தமிழர்கள் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்ன தாகவே நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கீழடி அகழ் வைப்பக கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து அரசு முதன்மைச் செயலாளர்- சிறப்பு செயலாக்க திட்டம், டி.உதயசந்திரன்,கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    வரலாற்று சிறப்பு மிக்க சிவகங்கை மாவட்டத்தில் சங்ககால தமிழர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை உலகத்தமிழர்கள் பார்த்து, அறிந்து கொள்ளும் வகையில், அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக அவர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்தாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அகழாய்வுப் பணியில் கிடைக்கும் தொல்பொருட்களை பார்த்த வகையில் தமிழர்கள் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்ன தாகவே நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது.

    அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாகவும், அந்த பொருட்களை பொதுமக்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வகையிலும், கீழடியில் செட்டுநாடு கலைநயத்துடன் கூடிய ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் புதிய அகழ் வைப்பக கட்டிடத்தின் கட்டுமானப்பணிகள் மட்டும் தற்போது நிறைவடைந்து உள்ளது.

    அகழாய்வின் போது கிடைத்த தொல் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாக, அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அவ்வாறு நடைபெற்று வரும் பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, தொல்லியியல் துறை ஆணையர் (முழு கூடுதல் பொறுப்பு) சிவானந்தம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், மதுரை கோட்ட பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் சத்தியமூர்த்தி, கீழடி கட்டிட மைய செயற்பொறியாளர் மணிகண்டன், கீழடி அகழாய்வு இணை இயக்குநர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×