என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கேரளம்"
- பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சுதீர் போஸ் (வயது53).
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.
பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சுதீர் போஸ் (வயது53). கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். அதற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.
1971-ம் ஆண்டு பிறந்த இவர், பிரபல திரைப்பட தயாரிப்பாளர்களான ஜெஸ்சி மற்றும் பிஜி விஸ்வம்பரன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியதன் மூலம் மலையாள திரையுலகில் கால்பதித்தார். அதன்பிறகு பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
கடந்த 2008-ம் ஆண்டு நடிகர் கலாபவன் மணி, முகேஷ் மற்றும் ரம்பா நடித்த 'கபடி கபடி' திரைப்படத்தை இயக்கி சுதீர் போஸ் இயக்குனரானார். இந்த படத்தில் நாதிர்ஷா இசையமைப்பில் நடிகர் கலாபவன் மணி பாடிய 'மின்னாமினுங்கே' என்ற பாடல் சூப்பர்ஹிட் ஆனது. இதன் மூலம் சுதீர் போஸ் இயக்கிய 'கபடி கபடி' படம் கொண்டாடப்பட்டது.
இவருக்கு ப்ரீதா என்ற மனைவியும், மிதுன் என்ற மகனும், சவுபர்ணிகா என்ற மகளும் உள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருவனந்தபுரம் பதிஞ்சரேனடா பகுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் தான் உடல் நலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
அவரது மறைவுக்கு மலையாள திரையுலக நடிகர்-நடிகைகள், திரைப்பட இயக்குனர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சுதீர் போசின் இறுதிச்சடங்கு வருகிற 5-ந்தேதி நடை பெறும் என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
- அனைத்து கட்சிகளுடன் ஆதரவுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- மத்திய அரசு கேரளம் என அரசியலமைப்பில் மாற்ற பினராயி விஜயன் வேண்டுகோள்.
தமிழ்நாட்டின் அண்டை மாநிலம் "கேரளா" என்று அழைக்கப்பட்டு வருகிறது. இனிமேல் கேரளா மாநிலம் "கேரளம்" என்று அழைக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன். அத்துடன் அதற்கான தீர்மானம் அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் மற்றும் கருவூல பெஞ்ச்கள் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதால் ஒருமனதாக தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது தொழில்நுட்ப காரணத்திற்கான தடைப்பட்டது. அதனால் தற்போது மீண்டும் கொண்டு வரப்பட்டது.
"மொழி அடிப்படையில் கடந்த 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி மாநிலங்கள் உருவாகின. அதனடிப்படையில் கேரளா மாநிலம் பிறந்த தினம் நவம்பர் 1-ந்தேதியாகும். தேசிய சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே மலையாளம் பேசும் சமூகங்களுக்கு ஒன்றுபட்ட கேரளாவை உருவாக்க வேண்டிய தேவை வலுவாக எழுந்தது. ஆனால் அரசியல் சட்டத்தின் முதல் அட்டவணையில் நமது மாநிலத்தின் பெயர் கேரளா என்று எழுதப்பட்டுள்ளது.
இதனால் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 3-ன் கீழ் மாநிலத்தின் பெயரை கேரளம் எனத் திருத்த செய்ய மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் அனைத்து மொழிகளிலும் கேரளம் என மாற்றம் செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
- கேரள திருவனந்தபுரத்தில் மே 22 ஆம் தேதி வரை அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- இதனால் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரள திருவனந்தபுரத்தில் மே 22 ஆம் தேதி வரை அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனக் கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருவந்தபுரம் தற்பொழுது வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
இந்த எச்சரிக்கை திரும்பப் பெறும் வரை கடலோர மற்றும் மலை மாவட்ட மக்களும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
அதிகனமழையின் போது 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இடுக்கி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் வாகனங்கள் பயணிக்க கலெக்டர் தடை விதித்துள்ளார்.
நீர்வீழ்ச்சி, நீர்நிலைகள் தொடர்பான சுற்றுலா தலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிகனமழை எச்சரிக்கையால், எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்களில் சுரங்க பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் கொட்டி வரும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதை அடுத்து, அதை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுஉள்ளனர்.
தொடர் மழையால் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து அங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுஉள்ளது.
- சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது
- கேரளாவில் இருந்து கிளம்புவதற்கு முன்பு கூட கேரள ரசிகர்களை விஜய் சந்த்தித்து பேசினார்.
லியோ வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. கேரள ரசிகர்களின் அன்பு வெள்ளத்தில் நான்கு நாட்களாக மிதந்தார் விஜய். அவர் கேரளாவில் காலடி எடுத்து வைத்ததிலிருந்து ரசிகர்கள் அவரை சூழ்ந்துக் கொண்டனர்.
அவர்களின் அன்பை பெற்ற விஜய், நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்களை சந்தித்து வந்தார். கேரளாவில் இருந்து கிளம்புவதற்கு முன்பு கூட கேரள ரசிகர்களை விஜய் சந்த்தித்து பேசினார்.
அவரின் மனமார்ந்த நன்றியை மலையாலத்திலேயே கேரள ரசிகர்களிடம் கூறினார். படப்பிடிப்பை முடித்து விட்டு விஜய் மற்றும் படக்குழு சென்னை திரும்பினர். அடுத்த கட்டமான படப்பிடிப்பை ரஷ்ஷியாவின் தலை நகரமான மாஸ்கோவில் படம்பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் வெங்கட் பிரபு அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்துடன்," தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" படத்தின் போஸ்டர் ஷூட்டின் போது விஜய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் என்றும் நடிகர் விஜய்க்கும் அதை எடுத்த புகைப்பட கலைஞரான சுதர்ஷனுக்கும் நன்றியை தெரிவித்து வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார். இப்புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இறைச்சி கோழிகளுடன் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
- பறவை காய்ச்சல் எதிரொலி
கன்னியாகுமரி:
கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பறவை காய்ச்சல் பல்வேறு பகுதிகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கேரள அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
முதலில் கோட்டயம் பகுதியில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது திருவனந்தபுரம் மாவட்டத்திலும் இது பரவி உள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள், கோழிகள், வாத்துகள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்தால் உடனே தெரிவிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதற்கி டையில் பண்ணை களில் கோழிகள் பாதி க்கப்பட்ட தால், அங்குள்ள கோழிகள், வாத்துகளை அழிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பறவை காய்ச்சல், பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவது இல்லை என்றாலும், உருமாற்றம் பெற்ற வைரஸ் பரவ வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழக-கேரள எல்லை பகுதியில் உள்ள குமரி மாவட்டம் படர்ந்தாலுமூடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கேரள வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பறவைகள், கறிக்கோழிகள் ஏற்றி வரும் பெரும்பாலான வாகனங்கள் திருப்பி அனுப்பப் பட்டு வருகின்றன. சில வாகனங்களில் கிருமி நாசினி தெளித்து மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.
தற்போது பறவை காய்ச்சல், கேரளாவில் தீவிரமடைந்துள்ளதால், அங்கிருந்து கறிக்கோழிகள், கோழிக் குஞ்சுகள், தீவனம், முட்டை போன்றவை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. படந்தாலுமூடு சோதனை சாவடி யில் 3 குழுக்களும், காக்க விளையில் ஒரு குழுவும் சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்