search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.2000"

    • வங்கிகளில் ரூ.2,000 நோட்டுக்களை செலுத்த 6 மாதங்கள் அவகாசம் வேண்டும் என்று பசும்பொன் பாண்டியன் கூறினார்.
    • ரூ.2000 நோட்டுக்களை வைத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

    ரிசர்வ் வங்கி ரூ. 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இதனால் வீடு மற்றும் கடைகளில் ரூ.2000 நோட்டுக்களை வைத்தி ருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ரிசர்வ் வங்கியின் அறி விப்பை தொடர்ந்து மக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்களை மாற்று வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    அதே நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்ட மறு நிமிடமே அனைத்துக் கடைகள், ஷாப்பிங் மால்கள், பெட்ரோல் பங்க் மற்றும் அரசு போக்கு வரத்துக்கழகம் உட்பட மதுபார், வணிக நிறுவனங்க ளில் ரூ.2000 நோட்டுகளை வாங்குவது இல்லை என்று முடிவு செய்து விட்டனர்.

    ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை திரும்பப்பெறும் முடிவு களை எடுக்கும் போது மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டிருக்க வேண்டும். இந்த தெளிவற்ற, திட்டமிடாத அறிவிப்பால் பொதுமக்கள் அவதிப்படு வதை தடுத்து நிறுத்த ரிசர்வ் வங்கி தெளிவான விளக்க மான அறிக்கையை உடனே வெளியிட வேண்டும்.

    இந்த பிரச்சினைகளில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க 6 மாத காலம் ரூ.2000 நோட்டுகளை வங்கியில் செலுத்துவற்கு அவகாசம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 4 நாட்களாக மல்லிகைப்பூ வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2000 வரை ஏலம் போனது.
    • இனி வரும் நாட்களிலும் இந்த விலை உயர்வு நீடிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளான அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி, நவலடிப்பட்டி, செவ்வந்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் குண்டு மல்லிகை பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இந்த மல்லிகை பூ செடிகளை பட்டம் மாறுவதற்காக விவசாயிகள் கடந்த மாதம் வெட்டி விட்டனர். இதனால் மிக குறைந்த அளவிலேயே மல்லிகை பூ செடிகளில் இருந்து பறிக்கப்பட்டு ஏலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் எருமைப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் பனிப்பொழிவு கடுமையாக இருப்பதால் கடந்த 4 நாட்களாக மல்லிகைப்பூ வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2000 வரை ஏலம் போனது. இனி வரும் நாட்களிலும் இந்த விலை உயர்வு நீடிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    மல்லிகை பூ செடி பயிரிட்டுள்ள விவசாயி ஒருவர் கூறியதாவது:-

    மல்லிகை பூ செடிகள் பட்டம் மாறுவதற்காக கடந்த மாதம் வெட்டி விடப்பட்டது. தற்போது செடிகள் பூக்கும் நிலைக்கு வராமல் உள்ளன. மேலும் இந்த பகுதியில் பனியின் தாக்கம் கடுமையாக இருப்பதால் மல்லிகை பூ வரத்து முற்றிலும் குறைந்தது.கடந்த மாதம் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ வந்த மல்லிகை பூக்கள், தற்போது ஒரு கிலோ கூட வரவில்லை. இதனால் நேற்று வெளியூரில் இருந்து வந்த வியாபாரிகள் ஒரு கிலோ மல்லிகை பூவை ரூ.2000-க்கு ஏலம் எடுத்து சென்றனர். இனிவரும் நாட்களிலும் இந்த விலை நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

    ×