என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மீன் குஞ்சுகள்"
- பெரிய ஏரியில் ஊராட்சி சார்பில் சில மாதங்களுக்கு முன்பு மீன் குஞ்சுகள் விடப்பட்டன.
- இதனை கிராம மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே நெடுமானூரில் உள்ள பெரிய ஏரியில் ஊராட்சி சார்பில் சில மாதங்களுக்கு முன்பு மீன் குஞ்சுகள் விடப்பட்டன. தற்போது இந்த மீன்கள் வளர்ந்து பெரியதாகி விட்ட நிலையில், மீன்களை பிடித்து கிராம மக்களுக்கு வழங்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. பின்னர் அதன்படி ஏரியில் மீன்கள் பிடிக்கப்பட்டன. பிடிக்கப்பட்ட மீன்களை 1300 குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா 2½ கிலோ மீன்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இதனை கிராம மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.
- கடந்த 2017-ம் ஆண்டு கேரள கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி 58 வகை மீன் குஞ்சுகளை பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
- 5 ஆண்டுகளுக்கு, அதாவது 2028-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந்தேதி வரை நீட்டித்து கேரள அரசு உத்தரவிட்டிருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநில கடல் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீன்கள் வரத்து குறைந்தது. இதனால் கடந்த 2017-ம் ஆண்டு கேரள கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி 58 வகை மீன் குஞ்சுகளை பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் பலன்களை ஆய்வு செய்ய நிவுணர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தனர். அதில் கடுமையான தடையை அமல்படுத்தியதன் மூலம் கேரள மாநிலத்தின் மீன்வரத்து கடந்த நிதியாண்டில் 6.9லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
ஆகவே மீன்படி தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதையடுத்து 58 வகை மீன் குஞ்சுகள் பிடிப்பதற்கான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு, அதாவது 2028-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந்தேதி வரை நீட்டித்து கேரள அரசு உத்தரவிட்டிருக்கிறது.
- மீன்வளத்துறை சார்பில் ஆண்டுக்கு 76.73 லட்சம் மீன் குஞ்சுகள் அணையில் விட்டு வளர்க்க முடிவு செய்யப்பட்டது.
- அரசு மீன் விதைப் பண்ணையில் செயற்கை முறையில் கருவூட்டல் செய்யப்பட்டு மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் மீன் வளத்தைப் பெருக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் மீன்வளத்துறை சார்பில் ஆண்டுக்கு 76.73 லட்சம் மீன் குஞ்சுகள் அணையில் விட்டு வளர்க்க முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு வளர்க்கப்படும் மீன்கள் உரிமம் பெற்ற மீன வர்கள் மூலம் பிடிக்கப்பட்டு மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது .
இதற்காக அரசு மீன் விதைப் பண்ணையில் செயற்கை முறையில் கருவூட்டல் செய்யப்பட்டு மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
6 லட்சம் மீன் குஞ்சுகள்
நடப்பாண்டில் முதல்கட்ட மாக அணை யின் நீர்த்தேக்க பகுதியான மாசிலாப் பாளையம் காவிரியாற்றில் மீன்வளத்துறை சார்பில் 6 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது. இதில் ரோகு 4.5 லட்சமும், மிர்கால் 1.5 லட்சம் மீன் குஞ்சுகளும் விடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் வேல்முருகன், உதவி இயக்குனர் கோகுல ரமணன் ஆர்.டி.ஓ. தணிகாசலம், சதாசிவம்
எம்.எல்.ஏ. (பா.ம.க.) மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- மின் நிலைய பராமரிப்புக்காக தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
- காவிரி ஆற்றில் சிறிய வகை மீன் குஞ்சுகள் ஏராளமாக செத்து மிதந்தன.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த செக்கானூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை மின்நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் கதவனை மின் நிலையத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது.
இதனால் காவிரி ஆற்றில் சிறிய வகை மீன் குஞ்சுகள் ஏராளமாக செத்து மிதந்தன. இதனைக் கண்ட அந்த கிராம மக்கள் மீன்குஞ்சுகளை குவியலாக அள்ளிச் சென்றனர். ஒரு சிலர் மீன் குஞ்சுகளை ஆற்றங்கரையில் உள்ள பாறைகளில் காய வைத்து கருவாடாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- ஆறுகளில் நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தின் கீழ் ஆறுகளில் மீன்குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மெலட்டூர் அணையில் 50 ஆயிரம் மீன்குஞ்சுகளும், தென் பெரம்பூர் அணையில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் என மொத்தம் 1 லட்சம் மீன் குஞ்சுகள் ஆற்றில் விடப்பட்டது.
மெலட்டூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் அழிந்து வரும் நாட்டின மீன் இனங்களை பாதுகாத்திடும் நோக்கில் தேசிய மீன்வளம் மேம்பாட்டு வாரியத்தின் வாயிலாக பிரதான் மந்திரி மத்திய சம்படா யோஜனா திட்டத்தில் ஆறுகளில் நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தின் கீழ் ஆறுகளில் மீன்குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தென்பெரம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் நிரஞ்சன் மற்றும் மெலட்டூர், அகரமாங்குடி பகுதி மீனவர்கள் கணேசன், ரமேஷ், கலைஅமுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மீன்வளத்துறை உதவி இயக்குனர் மா சிவக்குமார், மேற்பார்வையில் வெட்டாற்றில் மெலட்டூர் அணையில் 50 ஆயிரம் மீன்குஞ்சுகளும், தென் பெரம்பூர் அணையில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் என மொத்தம் 1 லட்சம் மீன் குஞ்சுகள் ஆற்றில் விடப்பட்டது.
நிகழ்ச்சியில் மீன்வளத்துறை ஆய்வாளர் ஆனந்து மற்றும் நீர்வளத்துறை அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள், உள்நாட்டு மீனவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்