என் மலர்
நீங்கள் தேடியது "ஆண்டாள் திருக்கல்யாணம்"
- விஷ்வசேனர் ஆராதனை, வாசு தேவர் புண்ணியவாகனம், காப்பு கட்டுதல், யக்யோவகி தாரணம் நடைபெற்றது.
- பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, வளையல், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் வருடந்தோறும் ஆடிப்பூரம் திருவிழா சிறப்பாக கொ ண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி இந்தாண்டு ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள், சீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம் நேற்று மாலை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கோவில் வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய ப்பட்டன. விஷ்வசேனர் ஆராதனை, வாசு தேவர் புண்ணியவாகனம், காப்பு கட்டுதல், யக்யோவகி தாரணம் நடைபெற்றது. தொடர்ந்து மகாலெட்சுமி பூஜை, மாங்கல்ய பூஜை நடைபெற்று திருமாங்கல்யம் சூட்டும் வைபவம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, வளையல், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் யுவராஜ் செய்திருந்தார்.
- சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
வந்தவாசி:
வந்தவாசி ஸ்ரீ ரங்கநாயகி சமேத ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இதை தொடர்ந்து மார்கழி மாதம் கடைசி நாளான இன்று ஆண்டாள் திருக்கல்யாணம் வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து ஸ்ரீ ரங்கநாதர் பெருமாளுக்கு அதிகாலை முதல் பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவி யங்களால் சிறப்பு அபிஷே கங்கள் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்க ளால் அலங்கரிக்கப்பட்ட ரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதை தொடர்ந்து ஆண்டாளுக்கும் ஸ்ரீ ரங்கநாதர் பெருமா ளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதையடுத்து ஸ்ரீ ரங்கநாதர் பெருமாளுக்கு மங்கள மேளவாதியங்கள் முழங்க மகா தேவாரதனை காண்பிக்கப்பட்டது. இந்த திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு கோலாட்டம் ஆடி சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ரங்கநாத பெருமாளை தரிசனம் செய்து சென்றனர்.