என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "நிறைவு அத்திகடவு"
- உழைப்பது விவசாயிகள், ஆனால் அனுபவிப்பது வேறு ஒருவர்.
- விவசாயிகளின் கனவை நிறைவேற்ற மாநில அரசு நிதியில் இருந்தே திட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட்டேன்.
அத்திகடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக கோவை அன்னூர் அருகே முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் விவசாயிகள், அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
விழா மேடைக்கு எடப்பாடி பழனிசாமி மாட்டு வண்டியில் வருகை தந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிறகு மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
ஒரு விவசாயியாக தொடங்கி முதலமைச்சராக ஆவேன் என கனவிலும் நினைத்தது இல்லை. ஒரு விவசாயியாக நான் எனது பிறவிப்பயனை அடைந்து விட்டேன்.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு எதுவும் செய்யாமலேயே வந்து திறந்து வைப்பவர்களும் உள்ளனர். விவசாயிகளின் பங்களிப்போது அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டது. உழைப்பது விவசாயிகள், ஆனால் அனுபவிப்பது வேறு ஒருவர்.
விவசாயிகளின் கனவை நிறைவேற்ற மாநில அரசு நிதியில் இருந்தே திட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட்டேன். 3 மாவட்ட விவசாயிகளின் 60 ஆண்டு கால கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது.
என்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது. பணத்திற்கோ, புகழுக்கோ நான் மயங்கமாட்டேன்.
திறமையற்ற அரசு தான் தமிழகத்தில் தற்போது ஆட்சி செய்து வருகிறது. அதிமுக ஆட்சியில் அனைத்து ஏரிகளையும் நிரப்ப அவசியம் என இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
ஆட்சி மாற்றம் காரணமாக வெறும் 15 சதவீத பணிகளை முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அவினாசி திட்ட நீரேற்று நிலையத்தை வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- ஆங்காங்கே சிறு சிறு பணிகள் மட்டுமே உள்ளது.6 பம்பிங் ஸ்டேஷனும் தயார் நிலையில் உள்ளது
ஈரோடு அடுத்த காளிங்கராயன் பாளையத்தில் அத்திக்கடவு -அவினாசி திட்ட நீரேற்று நிலையத்தை வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அத்திக்கடவு-அவினாசி திட்டம் மிக விரைவுபடுத்தி பணிகள் நடைபெற்று வருகிறது.ஜனவரி கடைசியில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு அதன்பிறகு 10 நாட்கள் சோதனை ஓட்டம் நடைபெறும்.பிப்ரவரி 15 ல் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.தற்போது அனைத்து பணிகளும் நிறைவு பெற்றது.
ஆங்காங்கே சிறு சிறு பணிகள் மட்டுமே உள்ளது.6 பம்பிங் ஸ்டேஷனும் தயார் நிலையில் உள்ளது.1045 குளத்தில் 750 குளங்களுக்கு தண்ணீர் செல்ல அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு–ள்ளது.200 குளத்திற்கான பணிகள் இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்படும்.
சோதனையோட்டத்திற்குள் மீதமுள்ள அனைத்து பணிகள் நிறைவு பெறும். தற்போது 99 சதவீத பணிகள் நிறைவடைந்து ள்ளது.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை திறந்து வைக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.