என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலை நிறுத்தம் வாபஸ்"

    • எல்பிஜி டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
    • பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் எல்.பி.ஜி. டேங்கர் லாரி ஸ்டிரைக் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

    நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு தென்மண்டல எல்.பி.ஜி.டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, உள்பட பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கிய இந்த சங்கத்தில் சுமார் 1500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக சுமார் 6 ஆயிரம் டேங்கர் லாரிகள் வாடகைக்கு இயக்கப்பட்டு வருகின்றது.

    குறிப்பாக பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இந்த லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் பழைய ஒப்பந்த காலம் முடிவடைகிறது. அடுத்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 2025-ம் ஆண்டு முதல் 2030-ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளை மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து இருந்தது.

    அதில் பல்வேறு விதிமுறைகள் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு பாதகமாக இருப்பதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக சங்க உறுப்பினர்களுடன் தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டங்களை நடத்தி ஆலோசனை மேற்கொண்டனர். அதை தொடர்ந்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சில விதிமுறைகளை தளர்த்துமாறு சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து விரைவில் உரிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

    இதனால், எல்பிஜி டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    தொடர்ந்து, கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவையில் ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    ஆனால், எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் எல்.பி.ஜி. டேங்கர் லாரி ஸ்டிரைக் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், தென் மாநிலங்கள் முழுவதும் கடந்த 5 நாட்களாக நீடித்து வந்த எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றதால் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    • விசைத்தறி ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18 நாட்க ளாக வேலைநிறுத்த போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் சக்கம்பட்டி பகுதியில் ஏராளமான விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18 நாட்க ளாக வேலைநிறுத்த போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை திண்டுக்கல் தொழி லாளர் நல அலுவலகத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் காட்டன் மற்றும் பாலிஸ்டர் சேலை விசைத்தறி கூடங்க ளில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு 14 சதவீதமும், வீட்டில் விசை த்தறியில் உற்பத்தி செய்யும் ஒப்பந்த தொழிலாளர்க ளுக்கு 10 சதவீதமும் சம்பள உயர்வு கொடுப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

    இருதரப்பு இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இதனைதொடர்ந்து தொழிற்சங்கத்தினர் மற்றும் நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர். எனவே இன்றுமுதல் வழக்கம்போல் விசைத்தறி கூடங்கள் இயங்கும் என எதிர்பார்க்க ப்படுகிறது.

    • காலவரையற்ற வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    • இன்று ஊரக வளர்ச்சிதுறையினர் மீண்டும் பணிக்கு திரும்பினர்.

    ஈரோடு:

    காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்க ப்படுவது போல தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் ஊராட்சி செயலர்களுக்கு வழங்க வேண்டும்,

    100 நாள் திட்ட கணினி உதவியா ளர்களை பணி வரன்முறை செய்ய வே ண்டும், பதவி உயர்வு உள்ளி ட்ட 16 அம்ச கோரிக்கை களை வலியு றுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்க ப்பட்டது.

    இந்த போராட்டத்தின் காரணமாக ஈரோடு மாவ ட்டத்தில் கலெக்டர் அலுவ லகம், 14 ஊராட்சி ஒன்றி யங்கள், ஊராட்சி அலுவலக ங்களில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில் அரசு தரப்பில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகளிடம் சென்னையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க த்தின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு அரசின் உறுதி மொழியை ஏற்று காலவரை யற்ற வேலை நிறுத்த போரா ட்டம் வாபஸ் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.

    இது குறித்து சங்கத்தின் மாநில துணை தலைவர் பாஸ்கர் பாபு கூறியதாவது:- 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கப்பட்டது.

    இதை யடுத்து ஊரக வளர்ச்சிதுறை இயக்கு நரிடம் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் 16 அம்ச கோரிக்கைகள் தொடர்பான அரசாணைகள் ஒரு மாத காலத்திற்குள் முழுமையாக வெளியிடப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

    மேலும் ஊராட்சி செ யலாளர்கள் பணி விதிகள் தொடர்பான அரசாணை 2 நாட்களில் வெளியிடப்படும் என்று கூறியதையடுத்து மாநில செயற்குழு கூட்ட முடிவுகளின் படி காலவரையற்ற வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காலவரையற்ற வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால் இன்று ஊரக வளர்ச்சிதுறையினர் மீண்டும் பணிக்கு திரும்பினர்.

    ×