search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்புரவு தொழிலாளி"

    • பையை எடுத்து திறந்து பார்த்தபோது அதில் வெளிநாட்டு கரன்சிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • பணம் உண்மையான அமெரிக்க டாலரா? அல்லது கலர் ஜெராக்ஸா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தை சேர்ந்தவர் சுலைமான் ஷேக். இவர் பெங்களூருவில் குப்பை அள்ளும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த 1-ந் தேதி இவர் நாகவாரா ரெயில் நிலையத்தில் பிளாஸ்டிக் மற்றும் பாட்டில்களை சேகரித்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு ஒரு கருப்பு பை கிடந்தது. பையை எடுத்து திறந்து பார்த்தபோது அதில் வெளிநாட்டு கரன்சிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அதை யாருக்கும் தெரியாமல் தனது அறைக்கு எடுத்து சென்றார்.

    மேலும் அதிகளவில் இருந்த பணத்தை பார்த்து அச்சமடைந்த சுலைமான் சேட் இதுகுறித்து தான் வேலைபார்க்கும் முதலாளி பாப்பா என்பவரை சந்தித்து இதுகுறித்து தெரிவித்தார். மேலும் அந்த பணத்தையும் சுலைமான் ஷேக் எடுத்து காட்டினார். இதை பார்த்து பாப்பாவும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர்கள் இதுகுறித்து சமூக ஆர்வலர் கலீமுல்லா என்பவரை தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர் சுலைமான் ஷேக் மற்றும் பாப்பா ஆகியோரை பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றார். பின்னர் போலீசார் அந்த கரன்சி நோட்டுகளை ஆய்வு செய்தபோது அது அமெரிக்க டாலர்கள் என்றும், இந்திய மதிப்பில் ரூ.25 கோடி என்பதும் தெரியவந்தது.

    இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் தயானந்தா, ஹெப்பால் போலீசாருக்கு உத்தரவிட்டார். அவர்கள் இந்த பணம் உண்மையான அமெரிக்க டாலரா? அல்லது கலர் ஜெராக்ஸா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்த பணத்துடன் ஒரு கடிதம் இருந்தது. அதில் இந்த பணத்தை நல்ல காரியத்துக்கு பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனவே அது உண்மையான பணமாக இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.

    எனவே பெங்களூருவில் கண்டெடுக்கப்பட்ட அமெரிக்க டாலர்கள் உண்மையானதா என்பதை கண்டறிய டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே அங்கிருந்து வரும் தகவலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • சாலையில் நடந்து சென்றபோது பரிதாபம்
    • விஷப்பூச்சி இவரை கடித்தது. இதனால் அவர் வாயில் நுரைதள்ளி சாலையில் விழுந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி விழமங்கலம் வ.வு.சி. நகரைச் சேர்ந்தவர் வள்ளி (வயது53). இவர் அதே பகுதியிலுள்ள பள்ளியில் துப்புரவு பணி வேலை செய்து வந்தார்.இந்நிலையில் இவர் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வரும் வழியில் விஷப்பூச்சி இவரை கடித்தது. இதனால் அவர் வாயில் நுரைதள்ளி சாலையில் விழுந்தார். சாலையில் மயங்கி கிடந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வள்ளியை பரிசோதித்த டாக்டர், இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் சிவக்குமார் வேட்டியால் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.
    • இது தொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்த பெரிய வேட்டுவபாளையம், அரிஜுன காலனி பகுதியை ேசர்ந்த சிவக்குமார் (வயது 26). இவர் பெருந்துறை பஞ்சாயத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார்.

    இவருக்கு திருமணம் ஆகி அகல்யா என்ற மனைவியும், கோபிகாஸ்ரீ என்ற மகளும், ஸ்ரீவர்ஷன் என்ற மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் சிவக்குமாருக்கும் அவரது மனைவிக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடும்பத் தகராறு ஏற்பட்டு அகல்யா குழந்தைகளுடன் அவரது அம்மாவிடான ஈரோடு கொல்லம்பாளையத்திற்கு சென்று விட்டார். அதில் இருந்து சிவக்குமார் சரியாக வேலைக்கு போகாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார்.

    இதனால் சிவக்குமார் தந்தையும், தாயும் அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்தினர். எனினும் சிவக்குமார் மனைவி மற்றும் குழந்தைகளை நினைத்து புலம்பி கொண்டிருந்தார்.

    மேலும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே சிவக்குமார் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் அவரது தந்தை மாலை கடைக்கு சென்றார். பின்னர் கடையில் இருந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சிவக்குமார் வேட்டியால் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.

    உடனடியாக அவரது தந்தை சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிவகுமாரை கீழே இறக்ககினர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சிவக்குமார் இறந்து விட்டதாக கூறினர்.

    இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×