என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரேக்ளா போட்டி"
- குமாரபாளையத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை யொட்டி ரேக்ளா போட்டிகள் நடத்தப்படுகிறது.
- இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வீரர்கள் பங்கேற்கின்றனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியையொட்டி ரேக்ளா போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வீரர்கள் பங்கேற்கின்றனர்.
ரேக்ளா போட்டி
நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி குமாரபாளையம் கற்பக விநாயகர் ரேக்ளா பந்தய குழு, பவானி குதிரை வண்டி சங்கம், கற்பக விநாயகர் ஆட்டோ டிரைவர் சங்கம் சார்பில் குமாரபாளையம் எடப்பாடி சாலையில் ரேக்ளா போட்டி நடைபெற்றது.
போட்டி தொடங்கும் முன் ரேக்ளா வண்டிகள் வரிசையாக நிறுத்தி வைக்க குலுக்கல் முறையில் டோக்கன் வழங்கப்பட்டது. இதையடுத்து போட்டியை முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பண்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
வழக்கம்போல் இந்த ஆண்டும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 80-க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்றன. அதுபோல் வீரர்களும் திரண்டனர். உள்ளூர் குதிரை, புதிய குதிரை, 43 இன்ச் குதிரை, 45 இன்ச் குதிரை, பெரிய குதிரை என பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவுக்கும் குறிப்பிட்ட கி.மீட்டர் தூரம் எல்லை அமைக்கப்பட்டது.
உற்சாகம்
ரேக்ளா வண்டியில் செல்லும் ஜாக்கிகள் குறிப்பிட்ட எல்லை பகுதிக்கு சென்று கொடியை வாங்கிக்கொண்டு திரும்பி வரவேண்டும் என்பது நிபந்தனை. அதன்படி ஒவ்வொரு வீரர்களும் சென்று கொடியை பெற்றுக் கொண்டு திரும்பி வந்தனர். குதிரைகள் எல்லையை தொடுவதற்காக சீறி பாய்ந்தன. ேபாட்டியை காண சுற்றுவட்டார பகு தியை சேர்ந்த பொதுமக்கள் சாலையோரம் திரண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி னர். மேலும் இளைஞர்கள் திரண்டு ஆரவாரம் எழுப்பி உற்சாகபடுத்தினர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பண்ணன் ஆகியோர் ரொக்க பரிசுகள் மற்றும் கேடயங்கள், கோப்பைகள் பரிசாக வழங்கினர். நிகழ்ச்சியில் நகர அ.தி.மு.க. செயலாளர் பாலசுப்ரமணி, நகராட்சி கவுன்சிலர் பழனிசாமி, நிகழ்ச்சி அமைப்பாளர் சிங்காரவேல் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
- போட்டி 200 மற்றும் 300 மீட்டர் என இரு பிரிவுகளில் நடைபெற்றது.
- முதல் பரிசாக ஒரு பவுன் தங்க நாணயம் வழஙகப்பட்டது.
உடுமலை:
தமிழ்நாடு முன்னாள் முதல்- அமைச்சர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உடுமலை அடுத்த கொடுங்கியம் ஊராட்சி பகுதியில் உடுக்கம்பாளையம் மற்றும் எரிசனம்பட்டி திமுக., கிளை சார்பில் 8- ம் ஆண்டு ரேக்ளா போட்டி நடத்தப்பட்டது.
போட்டிக்கு உடுமலை மேற்கு ஒன்றிய செயலாளர் தி.செழியன் தலைமை வகித்தார்.போட்டியை திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக., அவைத் தலைவர்- முன்னாள் எம்.எல்.ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் பங்கேற்பதற்காக காங்கேயம்,பொள்ளாச்சி, தாராபுரம்,ஒட்டன்சத்திரம்,கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் கொடிங்கியம் பகுதிக்கு சரக்கு வாகனத்தில் வருகை தந்தது.போட்டி 200 மற்றும் 300 மீட்டர் என இரு பிரிவுகளில் நடைபெற்றது.இதில் 200 மீட்டர் பிரிவில் 343 வண்டிகளும் 300 மீட்டர் பிரிவில் 99 வண்டிகளும் கலந்து கொண்டது.
அதற்கு முன்பாக போட்டியில் கலந்து கொள்ள வருகை தந்த உரிமையாளர்கள் நுழைவுக் கட்டணத்தை செலுத்தி டோக்கன் பெற்றுக் கொண்டனர்.அதைத் தொடர்ந்து ஒலிபெருக்கி மூலமாக ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படி மாட்டு வண்டிகள் அழைக்கப்பட்டது.
இதையடுத்து வண்டிகளில் பூட்டப்பட்ட மாடுகள் இலக்கை நோக்கி சீறி பாய்ந்து சென்றது.போட்டியை பொதுமக்கள் பாதுகாப்பாக பார்த்து ரசிக்கும் வகையில் உடுமலை-ஆனைமலை சாலையின் இரண்டு புறங்களில் இரும்பு தடுப்புகள் வைத்து கட்டப்பட்டு இருந்தது.
அங்கு திரண்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் விசில் அடித்தும் கைதட்டியும் மாட்டு வண்டி உரிமையாளர்களை உற்சாகப்படுத்தினார்கள்.
அதன்படி 200 மீட்டரில் முதல் பரிசாக ஒரு பவுன் தங்க நாணயமும்,2-ம் பரிசாக ¾ பவுன் தங்க நாணயமும் 3-ம் பரிசாக ½ பவுன் தங்க நாணயமும், நான்காம் பரிசாக ¼ பவுன் தங்க நாணயமும் வழங்கப்பட்டது. மேலும் ஆறுதல் பரிசாக 5-ம் பரிசு முதல் 10- ம் பரிசு வரை ஒரு கிராம் தங்க நாணயமும் 11-ம் பரிசு முதல் 30-ம் பரிசு வரை கோப்பைகளும், ஆறுதல் பரிசாக கோப்பைகள் வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டது.
இதேபோன்று 300 மீட்டருக்கும் பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. 18 வினாடிகளுக்கும் குறைவாக வந்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ ஜெயராமகிருஷ்ணன் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கினார்.
இதில் உடுமலை ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், எஸ்.கே.எம் தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி, மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீது, மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் ராம்குமார், கிருஷ்ணவேணி,ஊராட்சி மன்ற தலைவர்கள் கலாமணி மோகன்,கிருஷ்ணவேணி சரவணப்பெருமாள்,பாரதி கோவிந்தராஜ்,அபர்ணா ராம்குமார்,பாலதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
போட்டி நடைபெறுவதை யொட்டி உடுமலை -ஆனைமலை சாலையில் வாகனங்கள் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.மேலும் தளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
- முன்னாள் முதல்- அமைச்சர் மு.கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி ரேக்ளா போட்டி நடத்தப்பட்டது.
- போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
உடுமலை :
தமிழ்நாடு முன்னாள் முதல்- அமைச்சர் மு.கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி தி.மு.க. சார்பில் உடுமலை அடுத்த அமராவதி அருகே ரேக்ளா போட்டி நடத்தப்பட்டது. போட்டியை திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., இரா.ஜெயராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் பங்கேற்பதற்காக காங்கேயம், பொள்ளாச்சி, தாராபுரம், ஒட்டன்சத்திரம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் அமராவதி பகுதிக்கு சரக்கு வாகனத்தில் வருகை தந்தது.போட்டி 200 மற்றும் 300 மீட்டர் என இரு பிரிவுகளில் நடைபெற்றது. இதில் 200 மீட்டர் பிரிவில் 293 வண்டிகளும் 300 மீட்டர் பிரிவில் 79 வண்டிகளும் கலந்து கொண்டன.அதற்கு முன்பாக போட்டியில் கலந்து கொள்ள வருகை தந்த உரிமையாளர்கள் நுழைவுக் கட்டணத்தை செலுத்தி டோக்கன் பெற்றுக்கொண்டனர். அதைத் தொடர்ந்து ஒலிபெருக்கி மூலமாக ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படி மாட்டு வண்டிகள் அழைக்கப்பட்டது. இதையடுத்து வண்டிகளில் பூட்டப்பட்ட மாடுகள் இலக்கை நோக்கி சீறி பாய்ந்து சென்றது.போட்டியை பொதுமக்கள் பாதுகாப்பாக பார்த்து ரசிக்கும் வகையில் உடுமலை- அமராவதி சாலையின் இரண்டு புறங்களில் இரும்பு தடுப்புகள் வைத்து கட்டப்பட்டு இருந்தது. அங்கு திரண்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் விசில் அடித்தும் கைதட்டியும் மாட்டு வண்டி உரிமையாளர்களை உற்சாகப்படுத்தினார்கள். போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசாக ஒரு பவுன் தங்க நாணயமும்,2-ம் பரிசாக ½ தங்க நாணயமும் 3-ம் பரிசாக ¼ தங்க நாணயமும், நான்காம் பரிசாக ஒருகிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டது.
மேலும் ஆறுதல் பரிசாக கோப்பைகளும் வழங்கப்பட்டது. போட்டி நடைபெறுவதையொட்டி அமராவதிக்கு சென்ற வாகனங்கள் தம்புரான் கோவில் வழியாக மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.மேலும் அமராவதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
- பா.ஜ.க. சார்பில் வருகிற 19ந் தேதி ரேக்ளா பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டது.
- அனுமதி மறுக்கப்பட்டதாக பல்லடம் டி.எஸ்.பி. மறுப்புக் கடிதம் அனுப்பியுள்ளார்.
பல்லடம் :
பா.ஜ.க. திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பல்லடம் அருகே உள்ள வாவிபாளையம் ஊராட்சி, குள்ளம்பாளையத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் வருகிற 19ந் தேதி, தமிழர்களின் பாரம்பரிய ரேக்ளா பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டது. இதனை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசின் அனைத்து வழிகாட்டு நடைமுறைகளையும் பின்பற்றி இந்த போட்டி நடத்தப்படும் என உறுதிமொழி அளித்து, பல்லடம் போலீசாரிடம் அனுமதிகேட்டு மனு கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் பொருத்தமில்லாத காரணங்களை கூறி போட்டி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாக பல்லடம் டி.எஸ்.பி. மறுப்புக் கடிதம் அனுப்பியுள்ளார்.அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ரேக்ளா பந்தயத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை பா.ஜ.க. கண்டிக்கிறது. இதற்காக சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெறுவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பிறந்த நாள் விழா மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு குதிரை ரேக்ளா போட்டி நடைபெற்றது.
- மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நவலடி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
நாமக்கல்:
நாமக்கல் கிழக்கு மாவட்டம் மற்றும் மோகனூர் ஒன்றிய தி.மு.க. சார்பில், என்.புதுப்பட்டியில், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பிறந்த நாள் விழா மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு குதிரை ரேக்ளா போட்டி நடைபெற்றது.
மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நவலடி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சிறிய, புதிய மற்றும் பெரிய குதிரைகளுக்கான போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டது. பெரிய குதிரை போட்டியில் கரூர், மோகனூர், கோவை குதிரைகள் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தன.
சிறிய குதிரைகளுக்கான போட்டியில், கோவை, மோகனூர், குமாரபாளையம் குதிரைகள் முதல் 3 இடங்களை பிடித்தன. வெற்றி பெற்ற குதிரைகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
எம்.எல்.ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி, இளைஞரணி துணைச்செயலாளர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற குதிரைகளுக்கு பரிசுக்கான ரொக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வேலு பாலாஜி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்