என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமாரபாளையத்தில்களை கட்டிய ரேக்ளா போட்டி
- குமாரபாளையத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை யொட்டி ரேக்ளா போட்டிகள் நடத்தப்படுகிறது.
- இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வீரர்கள் பங்கேற்கின்றனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியையொட்டி ரேக்ளா போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வீரர்கள் பங்கேற்கின்றனர்.
ரேக்ளா போட்டி
நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி குமாரபாளையம் கற்பக விநாயகர் ரேக்ளா பந்தய குழு, பவானி குதிரை வண்டி சங்கம், கற்பக விநாயகர் ஆட்டோ டிரைவர் சங்கம் சார்பில் குமாரபாளையம் எடப்பாடி சாலையில் ரேக்ளா போட்டி நடைபெற்றது.
போட்டி தொடங்கும் முன் ரேக்ளா வண்டிகள் வரிசையாக நிறுத்தி வைக்க குலுக்கல் முறையில் டோக்கன் வழங்கப்பட்டது. இதையடுத்து போட்டியை முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பண்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
வழக்கம்போல் இந்த ஆண்டும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 80-க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்றன. அதுபோல் வீரர்களும் திரண்டனர். உள்ளூர் குதிரை, புதிய குதிரை, 43 இன்ச் குதிரை, 45 இன்ச் குதிரை, பெரிய குதிரை என பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவுக்கும் குறிப்பிட்ட கி.மீட்டர் தூரம் எல்லை அமைக்கப்பட்டது.
உற்சாகம்
ரேக்ளா வண்டியில் செல்லும் ஜாக்கிகள் குறிப்பிட்ட எல்லை பகுதிக்கு சென்று கொடியை வாங்கிக்கொண்டு திரும்பி வரவேண்டும் என்பது நிபந்தனை. அதன்படி ஒவ்வொரு வீரர்களும் சென்று கொடியை பெற்றுக் கொண்டு திரும்பி வந்தனர். குதிரைகள் எல்லையை தொடுவதற்காக சீறி பாய்ந்தன. ேபாட்டியை காண சுற்றுவட்டார பகு தியை சேர்ந்த பொதுமக்கள் சாலையோரம் திரண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி னர். மேலும் இளைஞர்கள் திரண்டு ஆரவாரம் எழுப்பி உற்சாகபடுத்தினர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பண்ணன் ஆகியோர் ரொக்க பரிசுகள் மற்றும் கேடயங்கள், கோப்பைகள் பரிசாக வழங்கினர். நிகழ்ச்சியில் நகர அ.தி.மு.க. செயலாளர் பாலசுப்ரமணி, நகராட்சி கவுன்சிலர் பழனிசாமி, நிகழ்ச்சி அமைப்பாளர் சிங்காரவேல் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்