என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சரிந்தது"
- மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
- கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இதையடுத்து கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மேட்டூர் அணை நீர்மட்டம் 30 அடிக்கும் கீழ் குறைந்தது. இதனால் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10-ந்தேதி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு ஆயிரத்து 827 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று 66.91 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 67.06 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 30.22 டி.எம்.சி.யாக உள்ளது.
- பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், 52.49 அடி உயரத்தில், 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.
- பாப்பநாயக்கன்பட்டி, பீமன்பாளையம், ஏழுபுளி, தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில், 3,600 ஏக்கர் நிலம் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகிறது.
வாழப்பாடி:
கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், 52.49 அடி உயரத்தில், 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.
இந்த அணையால், பாப்பநாயக்கன்பட்டி, பீமன்பாளையம், ஏழுபுளி, தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில், 3,600 ஏக்கர் நிலம் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகிறது.
கரியக்கோயில் ஆற்றில் பனைமடல், ஏ.குமாரபாளையம், கல்யாணகிரி, கொட்டவாடி கிராமங்களிலுள்ள தடுப்பணைகள் மற்றும் கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூர். அபிநவம், புத்திரகவுண்டன்பாளையம் ஏரிகளில் இருந்து ஏறக்குறைய 3000 ஏக்கர் பழைய ஆயக்கட்டு பாசனம் பெறுகின்றன.
கடந்தாண்டு இறுாதியில் பெய்த பருவமழையால் அணையில், 49.98 அடி உயரத்தில் 171 மில்லியன கன அடி தண்ணீர் தேங்கியது. நிலத்தடி நீர்மட்டம் உயரவும், குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென, அணைப்பாசன புதிய ஆயக்கட்டு மற்றும் ஆறு மற்றும் ஏரிப் பாசன பழைய ஆயக்கட்டு விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, கரியக்கோயில் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு அணை வாய்க்கால் பாசனத்திற்காக தொடர்ந்து மார்ச் மாதத்தில் 24 நாட்களுக்கு தலைமை மதகுகள் வழியாக வினாடிக்கு 40 கனஅடி வீதம் கரியக்கோயில் ஆற்றிலும், புதிய ஆயக்கட்டான அணை வாய்க்கால் பாசனத்திற்காக அணையின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் வினாடிக்கு 15 கனஅடி வீதம் 21 நாட்களுக்கு சுழற்சி முறையிலும் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் அணையின் நீர்மட்டம் செவ்வாயக்கிழமை நிலவரப்படி 27.52 அடியாக சரிந்து போனது. தற்போது அணையில் 190 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே எஞ்சியுள்ளது. கோடை தொடங்கிய நிலையிலேயே அணையின் நீர்மட்டம் சரிந்து போனதால், எதிர்வரும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் கடும் வறட்சி நிலவும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வறட்சியை சமாளிக்க கோடை மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
- கடும் உறைபனி- விளைச்சல் குறைந்தது.
- விவசாயிகள் கவலை அடைந்தனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் இறுதியில் இருந்து உறைபனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி கொட்டி வருகிறது. இதனால் வழக்கத்தைவிட கடுமையான குளிரும் நிலவுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் அதிகளவில் தேயிலை மற்றும் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, அவரை, மலைப்பூண்டு போன்ற மலைக்காய்கறிகள் விவசாயம் நடைபெற்று வருகிறது.இதில் கொடி பந்தலில் வளரக்கூடிய ேமரக்காய் கொடிகள் அதிகளவில் விவசாயிகள் பயிரிடுகின்றனர்.
இந்நிலையில் நீலகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடும் குளிர் நிலவுவதால் ேமரக்காய் கொடிகள் அனைத்தும் வாடி வதங்கி காய்ந்து வருகின்றனர். அது மட்டும் இன்றி விளைச்சல் மிகவும் குறைவாக உள்ளது. 20 மூட்டை கிடைத்த இடத்தில் தற்போது 6 முதல் 7 மூட்டை வரை மட்டுமே மேரக்காய் காய்கறிகள் கிடைக்கிறது.
அதுமட்டுமின்றி மேரக்காய்களுக்கு சரியான விலையும் விவசாயிளுக்கு கிடைப்பதில்லை. கடந்த 2 மாதத்திற்கு முன்பு ேமரக்காய் விலை 1 கிலோ ரூ.25-ல் இருந்து ரூ.20 வரையிலும் விற்பனை ஆனது. தற்போது ேமரக்காய் 1 கிலோ ரூ.8 விற்பனை ஆவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் லாபம் ஒன்றும் இல்லாமல் பராமரிப்பு செலவிற்க்கு கூட கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்