search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.5 ஆயிரம் அபராதம்"

    • தீபாவளி பண்டிகையொட்டி நடவடிக்கை
    • ரெயில்வே போலீசார் எச்சரிக்கை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் நேற்று முதல் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். சென்னை மற்றும் பெங்களூரு மார்க்கமாக செல்லும் ரெயில்கள், சென்னையில் இருந்து கோவை, ஈரோடு, சேலம் வழி யாக செல்லும் ரெயில்களில் பட்டாசு உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா? என சோதனையில் ஈடுபட்டனர். பயணிகளின் உடமைகளை தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்க ப்படுகின்றனர்.

    சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் ஆபத்தை ஏற்படுத்தும் பட்டாசுகளை எடுத்து சென்றால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். மேலும் ஜன்னல் அருகே அமர்ந்திருந்த பெண்களை பாது காப்புடன் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தினர்.

    அதிவிரைவு ரெயில்கள், விரைவு ரெயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் வட மாநில இளைஞர்கள் அதிக அளவில் பயணம் செய்வதாகவும் புகார் இருந்தது.

    அதன் பேரில் முன்பதிவு பெட்டிகளில் ஆய்வு நடத்தி அதில் முன்பதிவு டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த வட மாநில இளைஞர்கள், தமிழக இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணம் செய்ய அறிவுறுத்தினர்.

    ரெயிலில் சந்தேக படும்படி யாராவது நடந்து கொண்டால் உடனடியாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    அதேபோல் ரெயிலில் உடன் பயணிக்கும் அடையாளம் தெரியாத பயணிகளிடம் இருந்து உணவு பொருட்கள், தின்பண்டங்கள், குடிநீர், குளிர்பானங்கள் உள்ளிட்டவர்களை வாங்கி சாப்பிட வேண்டாம். பாதுகாப்பான தீபாவளி அனைவரும் கொண்டாட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றனர்.

    • வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினார்.
    • மேட்டுப்பாளையம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் மகாதேவ புரத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி அழகம்மாள் (வயது 60).

    இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் வேலைக்காக சத்தியமூர்த்தி நகர் புற்றுக்கண் மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றார்.அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினார். பின்னர் அவர் அணிந்திருந்த தங்க நகைகள் 4 பவுனை பறித்துக்கொண்டு, அழகம்மாளை தாக்கி கீழே தள்ளி விட்டுச்சென்றார்.

    இதுகுறித்து அழகம்மாள் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அண்ணா மார்க்கெட் வீதியை சேர்ந்த ஹக்கீம் (35) என்பவர் வழிப்பறியில் ஈடுப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது மேட்டுப்பாளையம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

    இதுகுறித்து வழக்கு மேட்டுப்பாளையம் கோர்ட்டில் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    அதில் மூதாட்டியை கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹக்கீமிற்கு நீதிபதி சிவக்குமார் 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக சிவசுரேஷ் வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×