என் மலர்
நீங்கள் தேடியது "மகளிர் பிரீமியர் லீக்"
- கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 30 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசினார்.
- குஜராத் ஜெயண்ட்ஸ் தரப்பில் ஸ்னே ரானா 2 விக்கெட் கைப்பற்றினார்.
மும்பை:
முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. 5 அணிகள் பங்கேற்றுள்ள இந்த சீசனின் துவக்க ஆட்டம் நவி மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 30 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசினார். ஹெய்லி மேத்யூஸ் 47 ரன்களும், நாட் ஷிவர் பிரன்ட் 23 ரன்களும், அமெலியா கெர் ஆட்டமிழக்காமல் 45 ரன்களும் அடித்தனர்.
குஜராத் தரப்பில் ஸ்னே ரானா 2 விக்கெட் கைப்பற்றினார். ஜார்ஜியா, தனுஜா, ஆஷ்லெய் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 207 ரன்கள் எடுத்தது.
- அதிரடியாக ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 65 ரன்கள் குவித்தார்.
மும்பை:
முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 30 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே மும்பை இந்தியன்ஸ்
பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. எந்த வீராங்கனையும் ஒற்றை இலக்கை ரன்னை தாண்டவில்லை. 4 பேர் டக் அவுட் ஆனார்கள். 23 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி திணறியது.
அந்த அணியின் தயாளன் ஹேமலதா மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்தார். கடைசி கட்டத்தில் இறங்கிய மோனிகா படேலும் இரட்டை இலக்கை எட்டினார்.
இறுதியில், குஜராத் அணி 64 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது. ஹேமலதா 29 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மும்பை இந்தியன்ஸ் சார்பில் சைகா இஷாக் 4 விக்கெட்டும், நட் சிவர் பிரண்ட், அமீலியா கெர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம், மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி முத்திரை பதித்து 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- குஜராத் ஜெயண்ட்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது.
- குஜராத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.
ஆண்கள் ஐபிஎல் போன்று பெண்கள் ஐபிஎலாக பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு தொடங்கியுள்ளது. பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கியது.
பெண்கள் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற உள்ள 3வது லீக் போட்டியில் உபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.
இதில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. இதில், குஜராத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில், உ.பி அணி 170 ரன்கள் இலக்குடன் விளையாடி வருகிறது. தற்போது உ.பி அணி 6.1 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது.
- முதலில் ஆடிய குஜராத் அணி 169 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய உத்தர பிரதேச அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு தொடங்கியுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கியது.
இன்று நடைபெற்ற 3-வது லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் ஹர்லின் தியோல் அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உத்தர பிரதேச அணி களமிறங்கியது. அந்த அணியின் கிரன் நவ்கிரே பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 53 ரன்னில் அவுட்டானார்.
கடைசி கட்டத்தில் கிரேஸ் ஹாரிஸ் போராடினார். அதிரடியாக ஆடிய அவர் பந்துகளில் அரை சதம் கடந்து 59 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், உத்தர பிரதேச அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்து திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் குஜராத் அணி பெற்ற 2வது தோல்வி இதுவாகும்.
- கிரண் பேட் செய்த போது அவரது பேட்டில் எம்எஸ்டி 07 என டோனியின் பெயர் மற்றும் ஜெர்ஸி எண் பொறிக்கப்பட்டு இருந்தது.
- உபி வாரியர்ஸ் அணி வீராங்கனை கிரன் நேவ்கிர் அரைசதம் அடித்தார்.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 3-வது லீக் போட்டியில் உபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 170 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய உபி வாரியர்ஸ் அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் உபி வாரியர்ஸ் அணி வீராங்கனை கிரன் நேவ்கிர் அரைசதத்தை கடந்து 53 (43) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். இவர் பயன்படுத்தும் பேட்டில் எம்எஸ்டி 07 என்ற எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் பெயர் மற்றும் அவரது ஜெர்ஸி எண்ணை குறிப்பிடும் வகையில் உள்ளது. அதை வைத்து பார்த்தால் அவரும் டோனியின் கோடான கோடி ரசிகர்களில் ஒருவராக இருப்பார் எனத் தெரிகிறது.
இந்தப் போட்டியில் கிரண் பேட் செய்த போது அவரது பேட்டில் எம்எஸ்டி 07 என டோனியின் பெயர் மற்றும் ஜெர்ஸி எண் பொறிக்கப்பட்டு இருந்தது பெரும்பாலான பார்வையாளர்களின் கவனத்தை பெற்றது. அது சமூக வலைதளத்திலும் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாபூர் பகுதியை சேர்ந்தவர் கிரண். 28 வயதான அவர் இந்திய அணிக்காக 6 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அவரை வாரியர்ஸ் அணி சுமார் 30 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது. டி20 போட்டியின் ஒரே இன்னிங்ஸில் 150+ ரன்களை எடுத்த இந்திய வீராங்கனை அவர் மட்டுமே. 2021-22 மகளிர் சீனியர் டி20 கோப்பை தொடரில் 76 பந்துகளில் 162 ரன்களை அவர் எடுத்திருந்தார். 16 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் இதில் அடங்கும்.
- முதலில் ஆடிய பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
- மும்பை இந்தியன்ஸ் துவக்க வீராங்கனை ஹெய்லி மேத்யூஸ் அதிரடியாக ஆடி ரன் குவித்தார்.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் ஆடிய பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 28 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஷ்ரேயங்கா பாட்டீல் தலா 23 ரன்கள் அடித்தனர். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஹெய்லி மேத்யூஸ் 3 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 34 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. துவக்க வீராங்கனை ஹெய்லி மேத்யூஸ் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். மறுமுனையில் யஷ்திகா பாட்டில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஹெய்லியுடன் நாட் ஷிவர் பிரண்ட் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த மும்பை அணி, 159 ரன்கள் சேர்த்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹெய்லி 77 ரன்களுடனும், நாட் ஷிவர் பிரண்ட் 55 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
- டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
- கேப்டன் மெக் லேனிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 70 ரன்கள் விளாசினார்.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. கேப்டன் மெக் லேனிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 70 ரன்கள் விளாசினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்களும், ஜெஸ் ஜோனாசன் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. வாரியர்ஸ் அணி களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் 211 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய உத்தர பிரதேச அணி 169 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 211 ரன்கள் குவித்தது. கேப்டன் மெக் லேனிங் அதிரடியாக ஆடி 42 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்களும், ஜெஸ் ஜோனாசன் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து, 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. வாரியர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தஹிலா மெக்ராத் மட்டும் போராடினார். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், உத்தர பிரதேச அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. தஹிலா மெக்ராத் 50 பந்துகளில் 90 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.
- சர்வதேச மகளிர் தினத்தன்று மகளிர் பிரீமியர் லீக் போட்டியை இலவசமாக காணலாம்.
- இத்தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்று வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்று வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 4-ம் தேதி தொடங்கிய இத்தொடர் வரும் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தன்று நடைபெறும் குஜராத் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையிலான போட்டியை பெண்கள், சிறுமிகள் மற்றும் ஆண்கள் உள்பட அனைவரும் இலவசமாக காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் பிரீமியர் லீக்கின் அதிகாரபூர்வ டுவிட்டரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஏற்கனவே, மகளிர் கிரிக்கெட் தொடரில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளையும் பெண்கள், சிறுமிகள் இலவசமாக பார்க்கலாம் என பிசிசிஐ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது.
- கடுமையாக போராடிய பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் சேர்த்தது
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 67 ரன்களும், சோபியா 65 ரன்களும் விளாசினர். பெங்களூரு தரப்பில் ஷ்ரேயங்கா பாட்டீல், ஹெதர் நைட் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி கடுமையாக போராடி 190 ரன்களே எடுத்தது. துவக்க வீராங்கனை சோபி டிவைன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 66 ரன்கள் குவித்து வெற்றிக்கான அடித்தளம் அமைத்தார். எலிஸ் பெரி 32 ரன்களும், ஹெதர் நைட் (30 நாட் அவுட்) ரன்களும் எடுத்தனர். இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
- மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் 143 ரன் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது.
- இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் இன்றைய போட்டி விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) சார்பில் முதலாவது மகளிர் பிரீமியர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள பிராபோர்ன், நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம் ஆகிய 2 மைதானங்களில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த 6-வது 'லீக்' ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் 11 ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது.
முதலில் ஆடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது. பின்னர் ஆடிய பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்தது. 2 போட்டியில் தோல்வியை தழுவிய குஜராத்துக்கு முதல் வெற்றி கிடைத்தது. பெங்களூர் அணி ஹாட்ரிக் தோல்வியை தழுவியது.
பெண்கள் பிரீமியர் 'லீக்' போட்டியின் 7-வது 'லீக்' ஆட்டம் டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-மெக் லேனிங் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுமே 2 போட்டிளில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் 'ஹாட்ரிக்' வெற்றியை பெறப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் 143 ரன் வித்தியாசத்தில் குஜராத்தையும், 2-வது போட்டியில் பெங்களூரை 9 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது. டெல்லி அணி முதல் போட்டியில் 60 ரன்னில் பெங்களூரையும், 2-வது ஆட்டத்தில் 42 ரன் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்சையும் வீழ்த்தின.
இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் இன்றைய போட்டி விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- டெல்லி அணி துவக்கம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.
- அதிகபட்சமாக கேப்டன் மெக் லேனிங் 43 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார்.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்று முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, துவக்கம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.
துவக்க வீராங்கனையான கேப்டன் மெக் லேனிங் 43 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார். ஜெமிமா 25 ரன்கள் அடித்தார். மற்ற வீராங்கனைகள் நிலைக்கவில்லை. இதனால் 18 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த அந்த அணி 105 ரன்களில் ஆல் அவுட் ஆனது. மும்பை தரப்பில் சாய்கா இஷாக், இசி வாங், ஹெய்லி மேத்யுஸ் ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 106 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது.