என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநில அளவிலான"

    • பயிர் அறுவடை மகசூலை கணக்கீடு செய்ய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது.
    • மாநில அளவில் அதிக மகசூல் பெரும் முதல் 3 விவசாயிகளுக்கு அடுத்த ஆண்டு பரிசு வழங்கப்படும்.

    ஈரோடு:

    தமிழ்நாடு வேளாண்மை-உழவர்நலத்துறை சார்பாக பாரம்பரிய மற்றும் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியினை நடத்தி வருகிறது.

    இப்போட்டியில் பங்கு பெற பெருந்துறை வட்டாரம் பெத்தாம் பாளையம் கிராமத்தை சேர்ந்த முன்னோடி விவசாயி உதயகுமார் என்பவர் இயற்கை முறையில் தங்க சம்பா என்னும் பாரம்பரிய ரக சாகுபடி செய்திருந்ததால், அவர் போட்டியில் பங்கு கொள்ள வேளாண்மை த்துறை பெருந்துறை வட்டார அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

    அதனைத்தொடர்ந்து பயிர் அறுவடை மகசூலை கணக்கீடு செய்ய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது.

    இந்த பயிர் விளைச்சல் போட்டி திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மாரியப்பன், ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி, உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் ஆசைத்தம்பி, விதை சான்றளிப்புத்துறை உதவி இயக்குநர் மோகனசுந்தரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தாமணி மற்றும் முன்னோடி விவசாயி விவேகானந்தன், பெருந்துறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் குழந்தைவேலு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    அறுவடையின்போது சராசரி பயிர் எண்ணிக்கை, ஒரு சதுர மீட்டரில் உள்ள பயிர் குத்துக்கள், ஒரு கதிரில் உள்ள நெல் மணிகளின் எண்ணிக்கை 1000 நெல் மணிகளின் எடை ஆகிய கணக்கீடுகள் செய்யப்பட்டன.

    மாநில அளவில் அதிக மகசூல் பெரும் முதல் 3 விவசாயிகளுக்கு அடுத்த ஆண்டு பரிசு வழங்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் சசிகலா, துணை வேளாண்மை அலுவலர் அருள்மொழிவர்மன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தமிழக அரசின் விளையாட்டுத்துறை சார்பில் நாமக்கல் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் திருச்செங்கோட்டில் நடைபெற்றது.
    • இதில் பல்வேறு வயது பிரிவின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.

    நாமக்கல்:

    தமிழக அரசின் விளையாட்டுத்துறை சார்பில் நாமக்கல் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. இதில் பல்வேறு வயது பிரிவின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 11 வயது பிரிவின் கீழ் நடந்த போட்டியில், குமாரபாளையம் அருகே தர்மதோப்பு, வாசுகி நகர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் சையத் பாசித் பங்கேற்று விளையாடி, 2-ம் பரிசு பெற்று சாதனை படைத்தார். இவருக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. இவர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளார். இவரை பள்ளியின் தலைமை ஆசிரியை நாகரத்தினம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜீனத், பி.டி.ஏ.தலைவர் தம்பி, ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் உள்பட பலர் வாழ்த்தினர்.

    ×