search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிராக்டர் பேரணி"

    • 44 வது நாளாக விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்
    • உடல்நிலை மோசமடைந்துள்ள போதிலும் பஞ்சாப் அரசு வழங்கும் மருத்துவ உதவியையும் அவர் மறுத்துவிட்டார்.

    பஞ்சாப்-ஹரியானா எல்லையில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று நாடு முழுவதும் டிராக்டர் அணிவகுப்பை அறிவித்துள்ளனர்.

    44 வது நாளாக விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த பேரணி போராட்டம் அறிவிக்கப்பட்டது.

    பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வமான உத்தரவாதம் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானா எல்லைகளுக்கு இடையே விவசாயிகள் கடந்த பிப்ரவரி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா தலைமையில் விவசாயிகள் டெல்லி நோக்கி பலமுறை செல்ல முயன்றனர். ஆனால் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போலீசார் அவர்களை கலைத்தனர். எனவே பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையேயான ஷம்பு மற்றும் கானௌரி எல்லைப் புள்ளிகளில் முகாமிட்டுள்ளனர்.

     

    விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால்[70 வயது], நவம்பர் 26 முதல் பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையேயான கானௌரி எல்லைப் பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். உடல்நிலை மோசமடைந்துள்ள போதிலும் பஞ்சாப் அரசு வழங்கும் மருத்துவ உதவியையும் அவர் மறுத்துவிட்டார். இந்த நிலையில்தான் விவசாயிகள் குடியரசு தினத்தன்று நாடு முழுவதும் டிராக்டர் பேரணியை அறிவித்துள்ளனர்.

     

    முன்னதாக கடத்த 2021 செப்டம்பரில் மத்திய அரசு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் பல சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தியாவின் பொருளாதாரத்தை நவீனமயமாக்க இந்த சட்டங்கள் அவசியம் என்று அரசு கூறினாலும் , இந்த சீர்திருத்தங்கள் பெரிய நிறுவனங்களின் தயவில் இருக்கும்படி விவசாயிகள் தள்ளப்படுவதாக கூறி அவர்கள் போராட்டத்தை துவங்கினர்.

    அவர்களின் ஒரு வருட போராட்டத்தின் பலனாக நவம்பர் 2021 இல் விவசாய சட்டங்கள் திரும்பப்பெறப்பட்டன. 2021 குடியரசு தினத்தை ஒட்டியும் செங்கோட்டையை முற்றுகையிட விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது போலீஸ் உடனான மோதலில் வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது. 

    • மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது.
    • சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர், உழவர் சந்தை அருகே மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது.

    ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் துளசி நாராயணன் கலந்து கொண்டு டிராக்டர் பேரணியை தொடங்கி வைத்தார்.

    இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு டிராக்டர்களில் பேரணியாக சென்றனர். அவர்கள் திருவள்ளூர் உழவர் சந்தையில் இருந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை பேரணி நடத்தினர். இதேபால் ஏராளமானோர் மோட்டார்சைக்கிள்களிலும் பேரணியாக பங்கேற்றனர்.

    எம்.எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அரசு கொள்முதலை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

    சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டத்தை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்60 வயதை பூர்த்தி செய்த அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிர்வாகிகள் பொது மக்களுக்கும் போக்கு வரத்துக்கும் இடையூறாக போலீசாரின் அனுமதி இல்லாமல் பேரணியாக சென்றதாக கூறப்படுகிறது.

    இதை தொடர்ந்து அனுமதி இன்றி பேரணியாக சென்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிர்வாகிகள், விவசாயிகள் உட்பட 90 பேர் மீது திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி வழக்கு பதிவு செய்து உள்ளார். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    • சிறு,குறு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
    • விவசாயிகளுக்கான மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடத்தில் விவசாயிகள் ஐக்கிய சங்கம் சார்பில், விவசாயிகளின் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் செய்ய வேண்டும்.

    சிறு,குறு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கான மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும்.

    60 வயதான விவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ. 6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்லடம் ராயர்பாளையம் பகுதியில் இருந்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை டிராக்டர் பேரணி நடைபெற்றது.

    இதில் 5க்கும் மேற்பட்ட டிராக்டர்கள்,5 கார்கள், 10 மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக சென்றனர். இதில் சுமார் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×