என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோட்டுகள்"

    • மக்கள் குறைவான மதிப்புடைய நோட்டுகளுக்கு திண்டாட வேண்டியுள்ளது.
    • அனைத்து ஏ.டி.எம்.களிலும் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் இந்த முறையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

    வங்கி ஏ.டி.எம்.களில் 500 ரூபாய் நோட்டுகள்தான் பெரும்பாலும் வைக்கப்படுகின்றன. இதனால் மக்கள் குறைவான மதிப்புடைய நோட்டுகளுக்கு திண்டாட வேண்டியுள்ளது.

    எனவே இந்த குறையை போக்குவதற்காக வங்கி ஏ.டி.எம்.களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். ஆபரேட்டர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

    இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அடிக்கடி பயன்படுத்தும் குறைந்த மதிப்பு கொண்ட பணத்தாள்கள் மக்களுக்கு அதிகமாக கிடைக்கும் வகையில் ஏ.டி.எம்.களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை வழக்கமான அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும். இதை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்' என கூறப்பட்டு உள்ளது.

    அந்தவகையில் 75 சதவீத ஏ.டி.எம்.களில் வருகிற செப்டம்பர் 30-ந்தேதிக்குள் குறைந்தபட்சம் ஒரு அறையிலாவது மேற்படி நோட்டுகள் இருப்பதை உறுதி செய்யுமாறு கூறியுள்ள ரிசர்வ் வங்கி, அனைத்து ஏ.டி.எம்.களிலும் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் இந்த முறையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

    • நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கள்ள நோட்டு மாற்றுபவர்களின் நடமாட்டத்தை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
    • அதில், கட்டுகட்டாக ரூ.7 லட்சம் ரொக்கம் இருந்தது. அந்த ரூபாய் நோட்டுகள் உள்பக்கமாக கருப்பு கலர் பேப்பர் வைத்து ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டத்தில் சிலர் கள்ள நோட்டினை புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக கள்ள நோட்டு மாற்றுபவர்களின் நடமாட்டத்தை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

    செல்போனில் பேச்சு

    இந்நிலையில் கொல்லிமலை சோளக்காட்டை சேர்ந்தவர் செல்லத்துரை ( வயது 45). இவரும் கொல்லிமலை எல்லக்கிராய்பட்டியைச் சேர்ந்த சதாசிவம் (42), புத்தூர்பட்டியைச் சேர்ந்த சிலம்பரசன் (36) ஆகிய 3 பேரும், சேந்தமங்கலம் பயணியர் மாளிகை அருகே காரில் வந்துள்ளனர். வெகுநேரமாக அங்கு நின்றபடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தனர்.

    கட்டு கட்டாக..

    இதனால் சந்தேகமடைந்த அப்பகுதியில் இருந்தவர்கள் சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர்கள் வந்த காரை சோதனை செய்தனர். அதில், கட்டுகட்டாக ரூ.7 லட்சம் ரொக்கம் இருந்தது. அந்த ரூபாய் நோட்டுகள் உள்பக்கமாக கருப்பு கலர் பேப்பர் வைத்து ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இரட்டிப்பு பணம் மோசடி

    அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில், ரூ.7 லட்சம் மதிப்பிலான இந்த கள்ள நோட்டுகளை, இரட்டிப்பு பணம் தருவதாக சொல்லி மோசடி செய்து, மாற்றுவதற்காக காத்திருந்ததாக தெரிவித்தனர். ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.2 லட்சம் தருவதாக பல இடங்களில் இதுபோன்ற மோசடியில் இவர்கள் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

    பறிமுதல்

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், ரூ.7 லட்சம் கள்ள நோட்டுகள் மற்றும் அவர்கள் வந்த கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இவர்கள் யாருக்காக இந்த பணத்தை கொண்டு வந்தார்கள்? இதற்கு முன் இவர்கள் மீது கள்ள நோட்டு மாற்றியது தொடர்பாக ஏதேனும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பள்ளிகளுக்கு விலையில்லா நோட்டுகள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • 10 நோட்டுகள் வீதம் வழங்கப்பட உள்ளது.

    புதுக்கோட்டை :

    தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவ-மாணவிகள் கையில் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் இருக்கும் வகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் ஏற்கனவே வந்தன.

    அவை அந்தந்த பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தில் உள்ள குடோனில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா நோட்டுகள் புதுக்கோட்டை வரப்பெற்றன. இதனை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 57 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு தலா 10 நோட்டுகள் வீதம் வழங்கப்பட உள்ளது.

    இதைத்தொடர்ந்து விலையில்லா புத்தக பை, விலையில்லா யூனிபார்ம், ஜாமின்ட்ரி பாக்ஸ், அட்லஸ் ஆகியவை வர உள்ளது. இவை வந்த பின் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வினியோகிக்கப்படும். இதேபோல 6 முதல் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான விலையில்லா காலணிகள் வந்தன. இதனை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட உள்ளது.

    ×