என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வருமானவரி"
- இந்திய விளையாட்டு வீரர்களில் அதிக வருமான வரி செலுத்துவோரின் பட்டியல் வெளியாகி உள்ளது.
- சினிமா நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் போது விராட் கோலி 5-வது இடத்தில் உள்ளார்.
இந்திய விளையாட்டு வீரர்களில் அதிக தொகையை வருமான வரியாக செலுத்துவோரின் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்திய அணியின் சீனியர் வீரரான விராட் கோலி ரூ.66 கோடி வருமான வரி கட்டி வருவதாகவும், சிஎஸ்கே ஜாம்பவான் டோனி ரூ.38 கோடியை கட்டி வருவதும் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஒரு மாதம் ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 2 வாரங்களில் ஹோம் சீசன் தொடங்கவுள்ளது. வங்கதேசம் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மூலமாக இந்திய அணி ஹோம் சீசனை தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் பலரும் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இந்திய விளையாட்டு வீரர்களில் அதிக வருமான வரி செலுத்துவோரின் பட்டியலை ஃபார்சூன் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார். அவர் மொத்தமாக வருமான வரியாக மட்டும் ரூ.66 கோடி கட்டி வருகிறார். அதேபோல் 2-வது இடத்தில் 2020-ம் ஆண்டிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடி வரும் டோனி இருந்து வருகிறார்.
அவர் வருமான வரியாக மட்டும் ரூ.38 கோடி கட்டி வருகிறார். இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 3-வது இடத்தில் இருக்கிறார். அவர் மொத்தமாக ரூ.28 கோடியை வருமான வரியாகவும், இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ரூ.23 கோடி வருமான கட்டுவதன் மூலமாக 4-வது இடத்திலும் இருக்கிறார்.
அதேபோல் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ரூ.13 கோடியை வருமான வரியாகவும், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ரூ.10 கோடியையும் வருமான வரியாக கட்டி வருகிறார். அதேபோல் சினிமா நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் போது விராட் கோலி 5-வது இடத்திலும், டோனி 7-வது இடத்திலும் இருக்கின்றனர். இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாப் 20 இடங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- பொருளாதார வளர்ச்சியையும், நுகர்வோர் செலவு மற்றும் அளவீட்டை அதிகரிப்பதை அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளது.
- வரி பலகைகளில் மறு சீரமைப்பு மற்றும் புதிய வரிமுறையில் வரிவிலக்கு வரம்பை அதிகரிப்பது ஆகியவை கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.
இந்த ஆட்சியின் முதல் பட்ஜெட் அடுத்து மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு சில முக்கிய சலுகைகள் அளிக்கப்படும் எனவும், பழைய மற்றும் புதிய வருமான வரி அமைப்புகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக வரி பலகைகளில் மறு சீரமைப்பு மற்றும் புதிய வரிமுறையில் வரிவிலக்கு வரம்பை அதிகரிப்பது ஆகியவை கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது.
இவை பொருளாதார வளர்ச்சியையும், நுகர்வோர் செலவு மற்றும் அளவீட்டை அதிகரிப்பதை அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் பழைய வருமானவரி அமைப்பின் கீழ் சில வரி அடுக்குகளில் மறுசீரமைப்பு செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ரூ.15 லட்சத்திற்கு மேல் சம்பளம் பெறும் தனி நபர்களுக்கான வரிப்பலகை சரிசெய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தற்போதுள்ள வருமான வரி அமைப்பின் படி ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் பெறுபவர்களுக்கு 5 சதவிதம் வரி விகிதம் பொருந்துகிறது. ரூ.15 லட்சம் வருமானத்திற்கு 30 சதவீதம் வரை வரி உயர்கிறது.
இந்நிலையில் புதிய வருமான வரி அமைப்பின் கீழ், தற்போதுள்ள ரூ.3 லட்சத்தில் இருந்து வருமான வரி விலக்கு வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய நிதிஅமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
- வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
- வருமான வரி கணக்குகளை படிவம் 1 மற்றும் படிவம் 4-ல் தாக்கல் செய்யும் பணியை வருமான வரித்துறை தொடங்கி உள்ளது.
புதுடெல்லி :
ஆன்லைனில் 2022-2023 நிதிஆண்டுக்கான வருமான வரி கணக்குகளை படிவம் 1 மற்றும் படிவம் 4-ல் தாக்கல் செய்யும் பணியை வருமான வரித்துறை தொடங்கி உள்ளது.
இதர படிவங்களில் தாக்கல் செய்வது விரைவில் தொடங்கும் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
படிவம் 1-ஐ மாத சம்பளதாரர்கள் உள்ளிட்ட தனிநபர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பயன்படுத்துகிறார்கள். படிவம் 2-ஐ, வணிக நிறுவனங்கள், தொழில்துறையினர், ரூ.50 லட்சத்துக்கு மிகாத ஆண்டு வருமானம் கொண்ட தனிநபர்கள் ஆகியோர் தாக்கல் செய்கிறார்கள்.
- கடந்த ஆண்டு மார்ச் இறுதி வரை 6.4 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்.
- 80 சி பிரிவின்படி முதலீடுகள் மீதான விலக்குகள் காரணமாக ரூ.84 ஆயிரம் கோடிக்கு வருமானவரி தவிர்க்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 1-ந்தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் பலரும் எதிர்பார்த்த வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்துவதாக அறிவித்தார். இந்தியாவில் 6 கோடிக்கும் அதிகமான வரி செலுத்துவோர் உள்ளனர். இப்போது ரூ.3 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி கடந்த ஆண்டு மார்ச் இறுதி வரை 6.4 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். இதில் 80 சி பிரிவின்படி முதலீடுகள் மீதான விலக்குகள் காரணமாக ரூ.84 ஆயிரம் கோடிக்கு வருமானவரி தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வருமானவரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டதன் காரணமாக சுமார் 1 கோடிக்கும் அதிகமானோர் பயன்பெறுவார்கள் என நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், புதிய வரிவிதிப்பு நடைமுறை மூலம் அனைத்து வரி செலுத்துவோருக்கும் மிகப்பெரிய அளவில் ஆறுதலாக அமைந்துள்ளது.
தனிநபர்கள் ரூ.7 லட்சம் வரை எந்த வரியையும் செலுத்த வேண்டியதில்லை. சேமிப்பின் காரணமாக அவர்கள் போடக்கூடிய விலக்குகளில் அளவை பொருட்படுத்த வேண்டியதில்லை என்றார்.
- திருப்பூா் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சொ.சீனிவாசன் தொடங்கி வைத்தாா்.
- திருப்பூா் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சொ.சீனிவாசன் தொடங்கி வைத்தாா்.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் செயலாளா்களுக்கு வருமான வரிப்பிடித்தம் தொடா்பான பயிற்சி குமரன் மகளிா் கல்லூரியில் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பை திருப்பூா் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சொ.சீனிவாசன் தொடங்கி வைத்தாா். இதில் வருமான வரித்துறை அதிகாரி ஜான்பெனடிக்ட் அசோக், பட்டயக்கணக்காளா் விஷ்ணுகுமாா், தாராபுரம் சரக துணைப்பதிவாளா் மணி ஆகியோா் வருமான வரிப் பிடித்தம் (டிடிஎஸ்) தொடா்பாகவும், டிடிஎஸ் ரிட்டா்ன் பெறுவது தொடா்பாகவும் ஆலோசனைகளை வழங்கினா்.
இதில் திருப்பூா், அவிநாசி, பல்லடம், பொங்கலூா், குண்டடம், மூலனூா், தாராபுரம், காங்கயம், வெள்ளக்கோவில் உள்பட மாவட்டம் முழுவதிலும் இருந்து 150 கூட்டுறவு சங்கங்களின் செயலாளா்கள் பங்கேற்றனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்