என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கடம்பாகுளம்"
- தென்திருப்பேரை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் விவசாயிகள் கூட்டம் நடை பெற்றது.
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தென்திருப்பேரை:
தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆழ்வை ஒன்றிய குழு மற்றும் கடம்பாகுளம் விவசாயிகள் இணைந்து தென்திருப்பேரை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் விவசாயிகள் சங்க தலைவர் குருகாட்டூர் பூலான் தலைமையில், ரவிச்சந்திரன், நயினார் ஆகியோர் முன்னிலையில் விவசாயிகள் கூட்டம் நடை பெற்றது.
கூட்டத்தில் கடம்பாகுளம் பாசனத்தில் தற்போது செய்யப்பட்டுள்ள நெல் பயிர்கள் அறுவடையானதும், எதிர் வரும் மார்ச் மாதத்திற்குள் கடம்பாகுளம் நீர் மட்டம் அறிந்து முன் சாகுபடி செய்ய கடம்பாகுளம் விவசாயிகளை கேட்டுக்கொள்வதும் காலம் தாழ்த்தாமல் முன்சாகுபடி செய்ய தாமிரபரணி நீர் வழங்க அனுமதி கேட்பது மறுக்கும் பட்சத்தில் மேல்முறையீடு செய்வது குறித்தும், மேலும் நெல்கொள் முதல் நிலையம் கூடுதலாக அறுவடை காலத்தில் விரைந்து திறக்க மாவட்ட நிர்வாகத்தினை கேட்டு கொள்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஆழ்வார் திருநகரி சுற்று வட்டாரத்திலுள்ள ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- தென்திருப்பேரை அருகே உள்ள கடம்பா குளத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
- தூர்வாரும் பணி தொடக்க விழாவிற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி பாசனத்தில் தென்திருப்பேரை அருகே உள்ள கடம்பா குளம் கடலில் பாதி கடம்பா என விவசாயிகள் கூறும் அளவிற்கு பெரிய குளமான கடம்பா குளத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
தூர்வாரும் பணி
இந்த குளம் பராமரிப்பு இல்லாமல் தூர்ந்து போய் உள்ள நிலையில் கடைமடை பாசன கால்வாய்களை தூர்வார வேண்டும் என கடந்த 20 வருடங்களுக்கு மேலாக விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் கடம்பாகுளம் பாசன கால்வாய் தூர்ந்து போய் அதன் முழு கொள்ளளவை எட்ட முடியாமல் சிறு மழைக்கு கூட பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கடம்பாகுளம் பாசன விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான உபரிநீர் கால்வாய் தூர் வாரும் பணியின் சீரமைப்பு பணிகள் திட்ட தொடக்க விழா நேற்று கடம்பா குளத்தில் நடைபெற்றது விழாவிற்கு மீன் வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். கனிமொழி எம்.பி. தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று கடம்பா குளம் உபரி நீர் கால்வாய் ரூ.34 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கடம்பா குளம், கால்வாய் குளம், தென்கரை குளம், வெள்ளூர் குளங்களின் கரைகளை பலப்படுத்துதல், கால்வாய் முன்புறம் கரை அமைத்தல், நீர் வரத்து கால்வாய் பலப்படுத்துதல், மடைகளை சீரமைத்தல், சிறு பாலங்கள் அமைத்தல் என பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது.
இத் திட்டத்தை தந்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கும் நன்றினை தெரிவித்து கொள்கிறோம். அதேபோல் துறையூர் அங்கமங்கலம் சாலையை கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.84 லட்சம் மதிப்பில் சீரமைத்து தரப்படும். இப்பணிகளுக்கு மாவட்ட பஞ்சாயத்து நிதியில் இருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். கடம்பா குளம் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதன் மூலம் கடம்பாகுளம் உபரி நீர் வடிகால் ஓடையில் வெள்ளநீர் சீராக செல்லும்.
இதன் மூலம் விளைநிலங்கள் குடியிருப்பு பகுதிகளில் மழைக்காலங்களில் நீர் உட்புகுவது தடுக்கப்படும். ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள ஸ்ரீவைகுண்டம், கால்வாய், வெள்ளூர், ஆதிச்சநல்லூர், புதுக்குடி மற்றும் ஏரல் தாலுகாவில் உள்ள ஆதிநாதபுரம், செம்பூர், வெள்ளமடம், நாசரேத், புரையூர், அங்கமங்கலம், குரும்பூர், குருகாட்டூர், கல்லாம்பாறை, ராஜபதி, தென்திருப்பேரை மற்றும் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள சுகந்தலை, மேலாத்தூர், ஆத்தூர் கஸ்பா ஆகிய கிராமங்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் என கூறினார்
மண்சாலை
மேலும் விவசாயிகள் மணத்தி- ராஜபதி சாலையினை தங்களுடைய நிலத்தின் வழியாக மண் சாலையாக அமைத்துள்ளார்கள். அந்த சாலையினை தார் சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படும். கடம்பா குளம் உபரி நீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மீண்டும் பெருமைமிகு குளமாக மாற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
20ஆண்டு கோரிக்கை
மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் கூறியதாவது:-
விவசாயிகளின் 20 ஆண்டுகால கோரிக்கையான கடம்பா குளம் உபரிநீர் கால்வாய் தூர் வாரும் பணிகள் நேற்று ெதாடங்கி வைக்கப்பட்டுள்ளது. கடம்பாகுளம் தண்ணீர் நிரம்பினால் இப்பகுதி இரு போகம் விளைச்சல் நடைபெறும்.
மேலும் புறையூர் பாலம் சரி செய்யும் திட்டங்களும் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலின் விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயத்திற்கு தனியாக பட்ஜெட் அமைத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தை நிறைவேற்ற காரணமாக இருந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் சண்முகையா எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, ஆவின் தலைவர் சுரேஷ் குமார், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பத்மா, தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புகாரி, ஏரல் தாசில்தார் கண்ணன், ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராஜன், பாலசுப்பிரமணியன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், கூட்டுறவு வங்கி தலைவர் உமரிசங்கர், ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன் குமார், பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த், துணை தலைவர் அமிர்த வள்ளி, பேரூராட்சி உறுப்பினர் ஆனந்த், மற்றும் உறுப்பினர்கள், நகர செயலாளர் முத்து வீர பெருமாள், ஆழ்வை மத்திய ஒன்றிய தி.மு.க. அவை தலைவர் மகரபூசணம், நட்டார், பால்சித்தர், ஆழ்வை ஒன்றிய விவசாய சங்க தலைவர் பூலான், ஆழ்வை நகர தி.மு.க. செயலாளர் கோபிநாத், மாவட்ட பிரதிநிதி பாலசந்திரன், நயினார், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்