என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உஸ்மான் கவாஜா"

    • ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஸ்டார்க் முதல் டெஸ்டில் விளையாடவில்லை.
    • விசா இன்னும் கிடைக்காததால் அவர் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    பெங்களூர்:

    ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இன்று இந்தியா வரவுள்ளது. இந்த மாதம் 9-ந் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வருகிற 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் பிப்ரவரி 17-21 வரை டெல்லியிலும், 3-வது டெஸ்ட் மார்ச் 1 முதல் 5 வரை தர்மசாலாவிலும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 9 முதல் 13 வரை அகமதாபாத்திலும் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் மார்ச் 17, 19 மற்றும் 22-ந்தேதிகளில் மும்பை, விசாகப்பட்டினம், சென்னை ஆகிய இடங்களில் நடக்கிறது. இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிக்காக பெங்களூருவில் பயிற்சி பெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இதனால் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பெங்களூர் வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியின் வேகப்பந்து வீரர் ஸ்டார்க் முதல் டெஸ்டில் விளையாடவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா இந்த அணியுடன் வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    அவருக்கு விசா இன்னும் கிடைக்காததால் அவர் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அவர் தனது இண்ஸ்டாகிராம் பதிவில், எனது இந்திய விசாவுக்காக நான் காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். உஸ்மான் கவாஜாவுக்கு இந்தியா விசா இன்று கிடைத்துவிடும் எனவும், உஸ்மான் நாளை ஒரு விமானத்தில் முன்பதிவு செய்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • ஆஷஸ் தொடரில் மெதுவாக ஓவர்கள் வீசியதாக ஆஸ்திரேலியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான புள்ளிகளையும் ஐசிசி குறைத்துள்ளது.

    சிட்னி:

    சமீபத்தில் நடந்த ஆஷஸ் தொடரில் மெதுவாக ஓவர்கள் வீசியதாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு அபராதத் தொகை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அபராதப் புள்ளிகளை ஐசிசி விதித்துள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 100 சதவீத புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதலிடம் வகிக்கிறது. இந்தியா 66.67 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

    ஆஸ்திரேலியா 30 சதவீத புள்ளியுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 15 சதவீத புள்ளியுடன் 5-வது இடத்திலும் உள்ளன.

    இந்நிலையில், ஐ.சி.சி.யின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்துள்ள ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்டில் இரு நாட்கள் பெய்த மழை காரணமாக 2-வது இன்னிங்சில் எங்களுக்கு பந்துவீச கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படி இருந்தும் ஐ.சி.சி. பந்துவீச்சில் தாமதம் செய்ததாகக் கூறி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இருந்து 10 புள்ளிகளை எங்களிடம் இருந்து பறித்துள்ளது. இது எப்படி நியாயமானது என்று தெரியவில்லை என பதிவிட்டுள்ளார்.

    • பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாசகம் எழுதிய ஷூவை அணிய கவாஜா முடிவு செய்திருந்தார்.
    • பாகிஸ்தான் மோதிய முதல் டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா தனது சட்டையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார்.

    துபாய்:

    பெர்த் நகரில், ஆஸ்தி ரேலியா-பாகிஸ்தான் மோதிய முதல் டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா தனது சட்டையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார்.

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாசகம் எழுதிய ஷூவை அணிய கவாஜா முடிவு செய்திருந்தார்.

     

    இதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தடை விதித்தது. இதையடுத்து அவர் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார். இது ஐ.சி.சி.யின் ஆடை மற்றும் உபகரண விதி மீறல்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து கவாஜாவுக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ஐ.சி.சி. செய்தி தொடர்பாளர் கூறும்போது, "உஸ்மான் கவாஜா, தனிப்பட்ட செய்தியை காட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐ.சி.சி. முன் அனுமதி பெறாமல் கருப்பு பட்டை அணிந்துள்ளார். இது ஒரு விதி மீறல் ஆகும். முதல் கட்ட விதி மீறலையடுத்து கண்டனம் தெரிவிக்கப்படுகிறது" என்றார்.

    இது தொடர்பாக கவாஜா கூறும்போது, "தனிப்பட்ட துக்கத்திற்காக கருப்பு பட்டையை அணிந்ததாக ஐ.சி.சி.யிடம் கூறினேன். ஐ.சி.சி.யால் நான் கண்டிக்கப்பட்டதாக நினைக்கவில்லை" என்றார்.

    • நீங்கள் அவரிடம் சென்று ஜாலியாக ஜோக் அடித்துக் கொண்டே பேசலாம்.
    • முன்பெல்லாம் விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார்.

    ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியானது கடைசியாக சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு தொடர்களிலும் தோல்வியை தழுவியதால் இம்முறை அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணியை வீழ்த்த மும்முறமாக தயாராகி வருகிறது.

    இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தற்போது முழுவீச்சில் தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில் இப்போது இருக்கும் விராட் கோலி மிகவும் வித்தியாசமானவர் என ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் கவாஜா கூறியுள்ளார்.

    இது குறித்து பேசிய அவர் கூறியதாவது:-

    இப்போது இருக்கும் விராட் கோலி மிகவும் வித்தியாசமானவர். முன்பெல்லாம் விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார். ஆனால் இப்போது இருக்கும் விராட் கோலி ஆக்ரோஷமாக இருப்பவர் கிடையாது. எனவே நீங்கள் அவரிடம் சென்று ஜாலியாக ஜோக் அடித்துக் கொண்டே பேசலாம்.

    ஆனாலும் அவர் இப்பொழுதும் நமக்கு எதிராக ரன் அடிக்கக் கூடியவர் என்பதை மறந்து விடக்கூடாது என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • டிராவிஸ் ஹெட் 40 பந்தில் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
    • கவாஜா 147 ரன்களுடன், ஸ்மித் 104 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

    காலே:

    இலங்கை- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கவாஜா , டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். குறிப்பாக டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி அரைசதமடித்து அசத்தினர். அவர் 40 பந்தில் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த லெபுசென் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து கவாஜாவுடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். தொடர்ந்து விளையாடிய இருவரும் சதமடித்து அசத்தினர்.

    இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் எடுத்தது. கவாஜா 147 ரன்களுடன், ஸ்மித் 104 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா, ஜெஃப்ரி வேண்டர்சே தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுக்கு 475 ரன்கள் எடுத்துள்ளது.
    • கவாஜா 204 ரன்னும், ஜோஷ் லிங்கிஸ் 44 ரன்னும் எடுத்துள்ளனர்.

    காலே:

    இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களான கவாஜா, டிராவிஸ் ஹெட் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி அரைசதமடித்து 57 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லபுசேன் 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    3வது விக்கெட்டுக்கு ஸ்டீவன் ஸ்மித் கவாஜாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் நிலைத்து நின்று ஆடி சதமடித்து அசத்தினர்.

    முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்கு 330 ரன்கள் எடுத்தது. கவாஜா 147 ரன்னும், ஸ்மித் 104 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்நிலையில், 2வது நாள் இன்று நடந்து வருகிறது. சிறப்பாக ஆடிய ஸ்மித் 141 ரன்னில் அவுட்டானார். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 266 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய கவாஜா இரட்டை சதமடித்து அசத்தினார். உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுக்கு 475 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. கவாஜா 204 ரன்னும், ஜோஷ் லிங்கிஸ் 44 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    ×