என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டிவி"
- பெற்றோரை நாட்டின் பொது சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.
- 15 வயதுடையவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு போதுமான தூக்கம் இல்லை.
ஸ்டாக்ஹோம்:
குழந்தைகள் செல்போன் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பது தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குழந்தைகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சுவீடனில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளை செல்போன் மற்றும் தொலைக்காட்சியில் இருந்து முற்றிலும் விலக்கி வைக்க வேண்டும் என்றும் குழந்தைகளை செல்போனை பார்க்க அனுமதிக்கக் கூடாது என்றும் பெற்றோரை நாட்டின் பொது சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.
மேலும் 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு மணிநேரம் மட்டுமே செல்போன் மற்றும் தொலைக்காட்சியை பார்க்க அனுமதிக்க வேண்டும்.
6 முதல் 12 வயதுடையவர்கள் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரத்திற்கு பார்க்கலாம். 13 முதல் 18 வயதுடையவர்கள் ஒரு நாளைக்கு 2 முதல் 3 மணி நேரம் வரை மட்டுமே செல்போன் மற்றும் தொலைக் காட்சியை பார்க்க அனுமதிக்க வேண்டும்
குழந்தைகள் தூங்க செல்வதற்கு முன் செல்போன் உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டாம். இரவில் படுக்கையறைக்கு வெளியே செல்போன் மற்றும் டேப்லெட்டுகள் வைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொது சுகாதார மந்திரி ஜாகோப் போர்ஸ்மெட் கூறும்போது, 13 முதல் 16 வயதிற்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 6 மணிநேரம் பள்ளி நேரத்திற்கு வெளியே செல்போன் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதில் செலவிடுகிறார்கள்.
மிக நீண்ட காலமாக, ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற டிஜிட்டல் மீடியா குழந்தைகளின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது. பள்ளி நடவடிக்கைகள், உடல் செயல்பாடு, போதுமான தூக்கம் ஆகியவற்றிற்கு குழந்தைகள் அதிக நேரத்தை செலவிடுவதில்லை. 15 வயதுடையவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு போதுமான தூக்கம் இல்லை என்றார்.
- எல்ஜி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் நான்கு வித அளவுகளில் கிடைக்கின்றன.
- புதிய எல்ஜி டிவிக்களில் 20 வாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
எல்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்தது. எல்ஜி UR7500 சீரிஸ் பெயரில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட் டிவி நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. எனினும், இவற்றில் ஒரே மாதிரியான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. எல்ஜி UR7500- 40 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது.
நான்கு மாடல்களிலும் 4K ரெசல்யூஷன் மற்றும் 60Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் HDR10 ப்ரோ மற்றும் டைனமிக் டோன் மேப்பிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவி-க்களில் ஏஐ சூப்பர் ஸ்கேலிங் 4K, 20 வாட் ஸ்பீக்கர்கள், 2.0 சேனல் உள்ளது. எல்ஜி UR7500 சீரிசில் உள்ள ஏஐ பிராசஸர் 4K ஜென் 6 சிறப்பான வியூவிங் அனுபவத்தை வழங்குகிறது.
இந்த டிவி மாடல்களில் HGiG மோட், ALLM மற்றும் கேம் ஆப்டிமைசர் உள்ளது. இவை கேமிங்கின் போது சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது. மென்பொருளை பொருத்தவரை வெப் ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் நெட்ப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஆப்பிள் டிவி மற்றும் பல்வேறு ஒடிடி ஆப்கள் வழங்கப்படுகின்றன.
கனெக்டிவிட்டியை பொருத்தவரை மூன்று HDMI போர்ட்கள், இரண்டு USB போர்ட்கள், ஈத்தர்நெட் போர்ட், ப்ளூடூத் மற்றும் வைபை வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் இதன் 43 இன்ச் வேரியண்ட் விலை ரூ. 32 ஆயிரத்து 490 என்றும் 50, 55 மற்றும் 65 இன்ச் மாடல்களின் விலை முறையே ரூ. 43 ஆயிரத்து 990, ரூ. 47 ஆயிரத்து 990 மற்றும் ரூ. 69 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் எல்ஜி வலைதளங்களில் நடைபெறுகிறது.
- சோதனை சாவடிகளை தாண்டி இவர்கள் மலை மீது எப்படி டி.வி.க்களை கொண்டு வந்தனர் என தெரியவில்லை.
- கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் முகமது ஆசிப், ஷெஹனாஸ். இவர்கள் திருப்பதி போலீஸ் நிலையம் அருகே உள்ள வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.
அப்போது உள்ளூர் தயாரிப்பு டிவிகள் மீது பிரபல நிறுவனங்களின் ஸ்டிக்கர்களை ஒட்டி விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முகமது ஆசிப், ஷெஹனாஸ் ஆகியோர் ஒரு காரில் போலி டி.வி.களை ஏற்றிக் கொண்டு அலிப்பிரி வழியாக திருப்பதி மலையில் உள்ள ஜி.என்.சி சோதனை சாவடிக்கு வந்தனர்.
தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் முகமது ஆசிப் ஒட்டி வந்த காரை நிறுத்தி விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் டி.வி.க்களை விற்பனை செய்ய வந்ததாக தெரிவித்தனர்.
அவர்கள் மீது சந்தேகம் அடைந்த விஜிலென்ஸ் போலீசார் இருவரையும் பிடித்து திருமலை போலீசில் ஒப்படைத்தனர்.
தடை செய்யப்பட்ட பொருட்களை திருமலைக்கு கொண்டு செல்வதை தடுக்க அலிப்பிரி, ஸ்ரீவாரி மெட்டு, அபாய ஆஞ்சநேயர் சாமி கோவில் ஆகிய 3 இடங்களில் சோதனை சாவடிகள் உள்ளன.
சோதனை சாவடிகளை தாண்டி இவர்கள் மலை மீது எப்படி டி.வி.க்களை கொண்டு வந்தனர் என தெரியவில்லை.
போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் உள்ளூர் தயாரிப்பு டிவிக்கள் மீது பிரபல நிறுவன ஸ்டிக்கர்களை ஒட்டி பொதுமக்களை ஏமாற்றி வந்தது தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்தியாவில் பயன்படுத்தப்படும் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பெரும்பாலும் சீனாவில் இருந்தே வருகின்றன.
- கடந்த 2021-2022ம் நிதியாண்டில் ரூ.16,400 ஆக இருந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கடந்த நிதியாண்டில் ரூ.11,500 ஆக குறைந்துள்ளது.
சென்னை:
இந்தியாவில் செல்போன்கள், டி.வி.க்கள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் கடந்த 2 ஆண்டுகளாகவே விலை உயர்ந்து காணப்படுகின்றன.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் உற்பத்தி குறைந்தது. இதன் காரணமாக விலை அதிகரித்தது.
தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் உற்பத்தி அதிகரித்து உள்ளது. மேலும் சீனாவில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கண்டெய்னரில் கொண்டு வருவதற்கான சரக்கு கட்டணம் தற்போது குறைந்துள்ளது. இது ஏற்கனவே கொரோனா தொற்று பரவலின்போது ரூ.6.55 லட்சம் ஆக இருந்தது. இது தற்போது ரூ.69 ஆயிரம் முதல் ரூ.81 ஆயிரம் ஆக குறைந்துள்ளது.
மேலும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான உதிரி பாகங்களின் விலையும் 60 முதல் 80 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் செல்போன், டி.வி., கம்ப்யூட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலை குறைகிறது.
இதுதொடர்பாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-
இந்தியாவில் பயன்படுத்தப்படும் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பெரும்பாலும் சீனாவில் இருந்தே வருகின்றன. எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான உதிரி பாகங்கள் விலை குறைந்திருப்பதாலும், சீனாவில் இருந்து பொருட்களை கொண்டு வரும் கண்டெய்னர் கட்டணம் குறைந்திருப்பதாலும் இந்த ஆண்டு பண்டிகை காலங்களில் செல்போன், டி.வி., கம்ப்யூட்டர் விலை குறையும். இதன் மூலம் இந்த பொருட்களின் விற்பனை அதிகரிக்கும்.
கடந்த 2021-2022ம் நிதியாண்டில் ரூ.16,400 ஆக இருந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கடந்த நிதியாண்டில் ரூ.11,500 ஆக குறைந்துள்ளது. இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் இது மேலும் குறையும். குறிப்பாக தீபாவளி பண்டிகை முதல் விலை நன்றாக குறையும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் டிவி பாகங்களுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைப்பு.
- எல்இடி டிவிக்களின் 60 முதல் 70 சதவீத உற்பத்தி செலவை ஒபன் செல் பேனல்கள் எடுத்துக் கொள்கின்றன.
உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் டிவி மாடல்களின் விலை ரூ. 3 ஆயிரம் வரை குறையும் சூழல் உருவாகி இருக்கிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் அடிப்படை இறக்குமதி வரி 5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இறக்குமதி வரி குறைப்பு காரணமாக டிவிக்களின் விலை குறையும் என எதிர்பார்க்கலாம்.
ஒபன் செல் பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டு இருப்பதன் மூலம், டிவிக்களின் விலை அதிகபட்சம் ஐந்து சதவீதம் வரை குறையும் என தகவல் வெளியாகி உள்ளது. எல்இடி டிவிக்களை உற்பத்தி செய்வதற்கான 60 முதல் 70 சதவீத கட்டணத்தை ஒபன் செல் பேனல்களே எடுத்துக் கொள்கின்றன. இதுபோன்ற பேனல்களை பெரும்பாலான நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றன.
"தொலைகாட்சிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், டிவி பேனல்களின் ஒபன் செல் பாகங்களுக்கான அடிப்படை சுங்க வரியை 2.5 சதவீதமாக குறைக்க முன்மொழிகிறேன்," என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையின் போது தெரிவித்தார். இந்த அறிவிப்பு உள்நாட்டு சேவை மதிப்பை கூட்டுவதோடு, சந்தை வளர்ச்சிக்கு உதவும் என நுகர்வோர் மின்சாதன மற்றும் வீட்டு உபயோகங்கள் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவர் எரிக் பிரகான்சா தெரிவித்தார்.
பல்வேறு சர்வதேச நிறுவனங்களுக்கான உரிமம் வைத்திருக்கும் சூப்பர் பிளாஸ்ட்ரோனிக், இந்திய சந்தையில், சுங்க வரி 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டு இருப்பதை அடுத்து டிவிக்களின் விலை ஐந்து சதவீதம் வரை குறையும் என தெரிவித்து இருக்கிறது. மத்திய அரசின் சுங்க வரி குறைப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது என பல்வேறு டிவி உற்பத்தியாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இதன் மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் டிவிக்களின் விலை அதிகபட்சம் ரூ. 3 ஆயிரம் வரை குறைக்கப்படலாம் என SPPL தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான அன்வீத் சிங் மர்வா தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்