search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதானி நிறுவனம்"

    • அதானி நிறுவனம் மீது அமெரிக்க அரசின் நீதித்துறை குற்றச்சாட்டு வைத்து வழக்குத் தொடுத்துள்ளது.
    • அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற பெரும் தலைவர்களால் ஆளுமை செய்த கட்சி.

    சிவகங்கை:

    சிவகங்கையில் கார்த்திக் சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வரவேண்டும். அக்கட்சியின் தலைமை அரசுக்கு தலைமைவகிக்க வேண்டும் என்ற இலட்சியம் இருக்கும். அதைத்தான் திருமாவளவன் கூறி வருகிறார். அவரது கருத்து நியாயமானதுதான்.

    அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற பெரும் தலைவர்களால் ஆளுமை செய்த கட்சி. தற்போது அது போன்ற ஆளுமை இல்லாததால் அந்த கட்சி குழப்பத்தில் இருக்கிறது.

    1967-ல் தமிழகத்தில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி மீண்டும் காமராஜர் ஆட்சி அமைப்பது என்பது உடனடியாக நடக்காது. நாங்கள் வளர வேண்டும், கட்சியின் கட்டுமானத்தை வலுப்படுத்த வேண்டும். முதல்கட்டமாக கூட்டணி ஆட்சியில் பங்கு பெறுவதில் தான் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தி வருகிறது. அதற்கு பிறகுதான் தனித்து ஆட்சி அமைக்க பாடுபடுவோம்.

    தமிழகத்தில் நடைபெறும் குற்ற சம்பவங்களில் தனிப்பட்ட விரோதத்தால் நடக்கும் குற்றங்களை காவல்துறை தடுக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அந்தக்குற்றங்கள் பள்ளி வளாகம், நீதிமன்ற வளாகம், மருத்துவமனை ஆகிய இடங்களில் நடந்துள்ளதுதான் கவலையளிக்கிறது. இது குறித்துதான் கேள்வி எழுப்பப்படுகிறது. இதைத் தடுப்பதற்கு தமிழக அரசும், காவல்துறையும் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இச்சம்பவங்கள் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதை கூறுவதில் எந்த கூச்சமும், தயக்கமும் எனக்கு இல்லை.

    அதானி நிறுவனம் மீது அமெரிக்க அரசின் நீதித்துறை குற்றச்சாட்டு வைத்து வழக்குத் தொடுத்துள்ளது. அமெரிக்க பங்குச்சந்தையில் திரட்டிய நிதியை இந்தியாவில் உள்ள அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லஞ்சமாக கொடுத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு குறித்து மத்திய அரசும் பிரதமரும் எந்தக்கருத்தையும் கூறவில்லை. இப்பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்த பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதானி குழுமத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளில் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை.
    • சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவி வருகிறது.

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அதானி குழுமத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளில் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. மின்வாரியம் தொடர்பாக எந்தவித ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவி வருகிறது.

    இது தொடர்பாக என்னிடம் நேரடியாகவோ அல்லது மின் துறை அதிகாரிகளுடனோ கேட்டு தெரிந்துகொண்ட பிறகே பதிவிட வேண்டும்" என்று சொல்லும் அமைச்சர் செந்தில் பாலாஜி, இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டை மறைத்தாலும், இதன் உண்மை நிலை என்ன என்பதை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

    அதுமட்டுமல்லாமல் நீதியரசர்களும் தாமாக முன்வந்து இந்த ஊழல் குற்றச்சாட்டை ஆய்வு செய்து, உண்மையில் ஊழல் நடந்திருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும். அமெரிக்கா நீதிமன்றம் அதானி குழுமத்தின் மீது குற்றம்சாட்டி இருக்கிறார்கள் என்றால் "நெருப்பில்லாமல் புகையாது" என்கின்ற பழமொழிக்கு ஏற்ப, புகாரும், ஊழல் குற்றச்சாட்டும் வரவேண்டியதன் அவசியம் என்ன? என்பது மக்கள் கேள்வியாக உள்ளது.

    எனவே தமிழக அரசு உடனடியாக இதற்கான விளக்கத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அந்த நிறுவனத்துடன் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
    • தமிழ்நாட்டில் மிக குறைந்த விலையில் அதாவது ரூ.2.61 க்கு கொள்முதல் செய்கின்றனர்.

    அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தொடர்பு இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

    இதுதொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து செந்தில் பாலாஜி கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின்சார வாரியத்தை பொறுத்தவரை அதானி நிறுவனத்தோடு எந்த விதமான வணிக ரீதியான தொடர்பும் கடந்த 3 ஆண்டுகளாக இல்லை என்பதை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன்.

    தமிழ்நாட்டின் மின் தேவையை கருத்தில் கொண்டு மத்தியில் இருக்கக்கூடிய மத்திய மின்சாரத்துறை வாரியத்தின் அமைப்புகளோடு 1500 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த நிறுவனத்துடன் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

    சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மத்திய அரசின் நிறுவனம். அந்த நிறுவனம் தான் யாரெல்லாம் மின் உற்பத்தி செய்கிறார்களோ அவர்கள் அந்த நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்கிறார்கள்

    தமிழ்நாட்டில் மிக குறைந்த விலையில் அதாவது ரூ.2.61 க்கு கொள்முதல் செய்கின்றனர்.

    அதனால், தமிழ்நாட்டின் மின்சார வாரியத்திற்கும் அதானி நிறுவனத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன்.

    இதுதொடர்பாக மேலும் சந்தேகம் இருந்தால் அதை தெளிவுப்படுத்த தமிழக அரசு தயாராக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிப்டி 142.3 புள்ளிகள் சரிந்து 24,225.20 புள்ளிகளாக இருந்தது.
    • அதானி குழும பங்குகள் 17 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்தன.

    புதுடெல்லி:

    அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம், அதானி குழுமம் தொடா்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட்டது.

    அதில் 'அதானி குழு மத்தைச் சோ்ந்த 7 நிறு வனங்களும் தங்களது நிதி நிலை அறிக்கையை உண் மைக்கு புறம்பாக வலுவாக காட்டி பங்குகளின் விலையை அதிகரித்து முறைகேடு செய்தது' என்று குறிப்பிட்டு இருந்தது.

    ஆய்வறிக்கை வெளியிட்ட அடுத்த ஒரு மாதத்தில் மட்டும் சுமாா் ரூ. 12.6 லட்சம் கோடி சொத்து மதிப்பை அதானி குழுமம் இழந்தது. மீள் நடவடிக்கைகள் மூலம் தற்போது உலகின் 12-வது பெரிய பணக்காரராக அதானி திகழ்கிறாா்.

    இதற்கிடையே சந்தையில் ஆதாயம் தேட உண்மைகளை திரித்து பொய் தகவல்களைப் பரப்புவதாக ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனத்துக்கு செபி அமைப்பான இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஜூன் 26-ந்தேதி நோட்டீஸ் அனுப்பியது.

    இந்த நிலையில் அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் செபியின் தலைவரும், அவரது கண வரும் பங்குகளை வைத்திருப்பதால் அக்குழுமத்துக்கு எதிரான விசாரணையில் செபி ஆா்வம் காட்டவில்லை என ஹிண்டன்பா்க் மீண்டும் குற்றச்சாட்டை கூறியுள்ளது. அதோடு அதற்கான ஆதாரங்களையும் அந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டது.

    செபி தலைவர் மாதபி பூரிபுச்சுடன் எங்களுக்கு எந்த வணிக உறவும் இல்லை என்று அதானி நிறுவனமும், ஹிண்டன்பர்க் கூறிய குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும் மாதபி பூரியும் மறுப்பு தெரிவித்து இருந்தது.

    அதானி நிறுவனத்துடன் செபி தலைவருக்கு தொடர்பு இருப்பது குறித்து காங்கிரஸ் கருத்து தெரிவித்த போது ஊழலை விசாரிப் பவரே மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றும் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்தது.

    ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான நிலையில் அதானி குழுமத்துடன் அனைத்து நிறுவனங்களின் பங்குகள் இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது.

    வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 436.45 புள்ளிகள் சரிந்து 79,269 புள்ளிகளாக வர்த்தகமானது.

    நிப்டி 142.3 புள்ளிகள் சரிந்து 24,225.20 புள்ளிகளாக இருந்தது.

    ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழும பங்குகள் 17 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்தன.

    அதானி எனர்ஜி 17 சதவீதம் , அதானி டோட்டல் கேஸ் 13.39 சதவீதம், என்டிடிவி 11 சதவீதம் அதானி பவர் 10.94 சதவிகிதம் சரிவை கண்டுள்ளது.

    மேலும், அதானி எனர்ஜி 6.96 சதவீதம், அதானி வில்மர் 6.49 சதவீதம், அதானி என்டர்பிரைசஸ் 5.43 சதவீதம் அதானி போர்ட் 4.95 சதவீதம், அம்புஜா சிமென்ட்ஸ் 2.53 சதவீதம் மற்றும் ஏசிசி 2.42 சதவீதம் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

    • இது வழக்கமான சோதனைதான் என கலால் வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • இமாசல பிரதேசத்தில் நடந்த இந்த சோதனை சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிம்லா :

    இமாசல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்துக்கு உட்பட்ட பர்வானுவில் அதானிக்கு சொந்தமான அதானி வில்மர் குடோன் உள்ளது. மாநிலத்தில் சமையல் எண்ணெய், அரிசி, கோதுமை மாவு, சர்க்கரை போன்ற சமையல் பொருட்களை இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

    இந்த நிறுவனம் ஜி.எஸ்.டி. முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளதாக புகார் எழுந்தது.

    இதைத்தொடர்ந்து குடோனில் மாநில கலால் வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நிறுவனத்தின் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன், அங்குள்ள இருப்புகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

    எனினும் இது வழக்கமான சோதனைதான் என கலால் வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதானி நிறுவனத்தின் மொத்த ஜி.எஸ்.டி.யும் வரிகடன் மூலம் நேர் செய்யப்பட்டதாகவும், பணமாக வழங்கவில்லை என்றும் அதிகாரி ஒருவர் குற்றச்சாட்டு தெரிவித்தார். இந்த சோதனை வழக்கமானது என அதானி நிறுவனமும் தெரிவித்து உள்ளது.

    ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழும விவகாரம் இந்திய அரசியலின் மையப்புள்ளியாக மாறியிருக்கும் இந்த நேரத்தில் இமாசல பிரதேசத்தில் நடந்த இந்த சோதனை சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதானி எண்டர் பிரைசஸ் நிறுவனம் ரூ.20 ஆயிரம் கோடிக்கு பங்குகளை விற்க முதலில் திட்டமிட்டு இருந்தது.
    • முதலீட்டாளர்கள் நலன் கருதி பங்கு விற்பனை ரத்து செய்வதாக அதானி நிறுவனம் அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    ஹிண்டன் பர்க் நிறுவனம் கூறிய முறைகேடு புகாரால் அதானி குழும பங்குகள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. மேலும் உலக பணக்காரர்கள் பட்டியலிலும் 15-வது இடத்துக்கு கவுதம் அதானி தள்ளப்பட்டார்.

    அதானி எண்டர் பிரைசஸ் நிறுவனம் ரூ.20 ஆயிரம் கோடிக்கு பங்குகளை விற்க முதலில் திட்டமிட்டு இருந்தது. முதலீட்டாளர்கள் நலன் கருதி இந்த பங்கு விற்பனை ரத்து செய்வதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

    இதற்கிடையே அதானி குழுமம் விவகாரம் தொடர்பாக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது.

    அதானி குழும நிறுவனங்களில் செய்த முதலீடு கொடுத்த கடன் விவரங்களை அளிக்க வேண்டும் என்று ஆர்.பி.ஐ. வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

    ×