என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சமபந்தி விருந்து"
- கிறிஸ்து நகர் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடந்தது
- இரவு கலை குழுவினர் வழங்கும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
நாகர்கோவில் :
நாகர்கோவில் கிறிஸ்து நகர் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் குடும்ப விழாவையொட்டி முதல் நாளில் திருக்கொடியேற்றம் மற்றும் திருப்பலியுடன் தொடங்கிய பூஜையில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு ஜெபமாலைகள், திருப்பலிகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் 23-ந்தேதி குமரி மண்ணில் தோன்றிய புனிதர் தேவசகாயமே என்ற பிரம்மாண்ட நாடகம் நடந்தது. இதில் ஏராளமான நடிகர்கள் பங்கேற்று நடித்துக்காட்டினர்.
நேற்று இரவு சமபந்தி விருந்து நடைபெற்றது. இதை பங்குத்தந்தை டோனி ஜெரோம் தொடங்கி வைத்தார். இணை பங்குத்தந்தை விஜில் ப்ரைட், துணை தலைவர், டென்னிஸ் பிராங்கிளின், செயலாளர் சார்லட் மேரி, பங்கு பேரவை பொருளாளர் இர்வின் ஜியோ நேவிஸ், துணை செயலாளர் சகாய ஞான திரவியம் மற்றும் பங்கு அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு மக்கள் கலந்து கொண்டனர். இந்த சமபந்தி விருந்தில் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். இன்று (25-ந்தேதி) காலை 10 மணிக்கு நோயாளிகள் திருப்பலி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மாலை ஆராதனையும், தொடர்ந்து கோட்டார் மறை மாவட்ட செயலாளர் அருட்பணி மரிய கிளாட்ஸ்டன், அருட்பணி ஜெனிபர் எடிசன் மறையுரை ஆற்றுகிறார்கள். இன்று மாலையில் கிறிஸ்து அரசர் தேர் பவனி நடைபெறுகிறது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொள்கிறார்கள்.
நாளை (26-ந்தேதி) 10-ம் நாள் திருவிழாவான காலை 7.30 மணிக்கு கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலியும், ஆயர் நசரேத் சூசை மறையுரையும் நடக்கிறது. தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு நன்றி திருப்பலி நடைபெறுகிறது. இரவு கிறிஸ்து அரசர் கலை குழுவினர் வழங்கும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
- அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்
- பூ கரகம் எடுத்து வருதல், வில்லிசை, முத்தாரம்மனுக்கு பட்டு எடுத்து வருதல், அம்மனுக்கு அலங்கார தீபாரதனை நடைபெற்றது
தென்தாமரைகுளம் :
வடக்குதாமரைகுளம் ஸ்ரீஞானமுத்தீஸ்வரர் முத்தா ரம்மன் கோவிலில் 9-வது ஆண்டு தசரா விழா நேற்று முன்தினம் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.
2-ம் நாள் விழாவான நேற்று காலை நையாண்டி மேளம், ஆற்றங்கரை விநாயகர் சன்னதியில் இருந்து ரத வீதி வழியாக பூ கரகம் எடுத்து வருதல், வில்லிசை, முத்தாரம்மனுக்கு பட்டு எடுத்து வருதல், அம்மனுக்கு அலங்கார தீபாரதனை நடைபெற்றது. விழாவையொட்டி நடைபெற்ற சமபந்தி விருந்தினை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் தமிழன் ஜானி, வடக்குதாமரைகுளம் ஊராட்சி தி.மு.க. நிர்வாகிகள் மகேந்திரன், அய்யப்பன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- சமபந்தி விருந்தை வழக்கறிஞர் தாமரைபாரதி தொடங்கி வைத்தார்
- மாலை அணிந்து விரதம் இருக்கும் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்
தென்தாமரைகுளம் :
வடக்குதாமரைகுளம் ஸ்ரீ முத்துமாகாளி தசரா குழுவினரின் காளி பூஜை நிகழ்ச்சியில் தி.மு.க. வர்த்தகர் அணியின் மாநில இணை செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் தாமரைபாரதி கலந்துகொண்டு அங்கு நடைபெற்ற சமபந்தி விருந்தினை தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட பிரதிநிதி தனசம்பத், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ஆர்.டி.ராஜா, ஊராட்சி தலைவர் ஆறுமுகம் பிள்ளை, பண்ணையார் சமுதாய தலைவரும், கிளை செயலாளருமான சுடலைமணி, கிளை செயலாளர் மணி, கிளை பிரதிநிதி இளங்கோ, தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் மாவட்ட துணை ஒருங்கிணைப்பா ளர் சுதன்மணி உட்பட பொது மக்கள் மற்றும் தசராவிற்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- பொதுக்கூட்டத்துக்கு மேலராமன்புதூர் வியாபாரிகள் சங்க தலைவர் நெல்சன் தலைமை தாங்கினார்.
- 3-ம் திருவிழா மேலராமன்புதூர் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் அருகே மேலராமன்புதூரில் உள்ள பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 3-ம் திருவிழா மேலராமன்புதூர் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு மேலராமன்புதூர் வியாபாரிகள் சங்க தலைவர் நெல்சன் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில செயல் தலைவர் டேவிட்சன், மேலராமன்புதூர் ஊர் தலைவர் கென்னடி வாழ்த்துரை வழங்கினர். ஒய்ஸ்மேன் கிளப் குமரி மாவட்ட கவர்னர் பால்டுவின் புரூஸ், அரிமா சங்க மாவட்ட முன்னாள் ஆளுனர் ஜெஸ்டின் பால் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஆலயத்தின் பங்குத்தந்தை மரிய வின்சென்ட் சூசை ஆசியுரை வழங்க சங்கத்தின் துணை தலைவர் ஜெகநாதன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை வியாபாரிகள் சங்க பொருளாளர் சகாய பிரைட்சிங் மற்றும் ராபின் தொகுத்து வழங்கினர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரி நடைபெற்றது. நாளை மறுநாள் (30-ந்தேதி) 9-ம் திருவிழாவை முன்னிட்டு பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மேலராமன்புதூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் சமபந்தி விருந்து நடைபெற உள்ளது.
- வாழைத்தோட்டத்து அய்யன்கோவிலில் சிறப்புவழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது.
- சுதந்திர தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
மங்கலம்:
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் அருகே உள்ள வி.அய்யம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள வாழைத்தோட்டத்து அய்யன்கோவிலில் சிறப்புவழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார், சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விழாயகா பழனிச்சாமி, துணைத்தலைவர் குட்டிவரதராஜன்,சாமளாபுரம் வருவாய்த்துறை ஆய்வாளர் பிரேமா, பள்ளபாளையம் கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரன், திமுக., சாமளாபுரம் பேரூர் செயலாளர் வேலுச்சாமி , துணைச்செயலாளர் தியாகராஜன், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் பெரியசாமி, வினோஜ்குமார், துளசிமணி ஆறுமுகம், கோவில் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் நேற்று சமபந்தி விருந்து நடைபெற்றது.
- பரிமள ரங்கநாதர் கோவிலில் சமபந்தி விருந்தை வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை:
சுதந்திர தின விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பல்வேறு கோவில்களில் நேற்று சமபந்தி விருந்து நடைபெற்றது.
மயிலாடுதுறையில் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, பஞ்ச அரங்கதலங்களில் பிரசித்தி பெற்ற திருவிழந்தூர் பரிமள ரங்கநாதர் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தினை மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தொடங்கி வைத்து உணவு அருந்தினார்.
இதில் நகரசபை தலைவர் செல்வராஜ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சமபந்தி விருந்து உண்டனர்.
- பெசன்ட்நகர் மகாலட்சுமி கோவிலில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பங்கேற்று சமபந்தி விருந்தில் உணவருந்தினார்.
- வடபழனி முருகன் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார்.
சென்னை:
சுதந்திர தினத்தையொட்டி ஆண்டுதோறும் கோவில்களில் சமபந்தி விருந்து வழங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் கோவில்களில் அறுசுவை உணவுடன் கூடிய சமபந்தி விருந்து இன்று நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் இந்த சமபந்தி விருந்து நடந்தது. சென்னையில் 32 கோவில்களில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, கோவில் செயல் அலுவலர் மற்றும் இணை ஆணையர் நித்யா மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பார்த்தசாரதி கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தின்போது 200 பேருக்கு வேட்டி- சேலையும் வழங்கப்பட்டது. பொதுமக்களோடு அமர்ந்து சமபந்தி விருந்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு ஆகியோர் உணவருந்தினர்.
பின்னர் வேட்டி-சேலையை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். வடை-பாயாசம், சர்க்கரை பொங்கல் ஆகியவற்றுடன் சுவையான அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதனை பொதுமக்கள் ருசித்து சாப்பிட்டனர்.
தேனாம்பேட்டை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு பொதுமக்களோடு அமர்ந்து உணவருந்தினார். அடையாறில் உள்ள ஆனந்த பத்மநாபசுவாமி கோவிலில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அமைச்சர் பெரியசாமி, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டு சமபந்தி விருந்தில் மக்களோடு மக்களாக அமர்ந்து உணவருந்தினார்கள்.
பெசன்ட்நகர் மகாலட்சுமி கோவிலில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பங்கேற்று சமபந்தி விருந்தில் உணவருந்தினார். வடபழனி முருகன் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். இதில் கோவில் தக்கார் ஆதிமூலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர். அரண்மனைக்கார தெருவில் உள்ள கச்சாலீஸ்வரர் கோவிலில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தம்புசெட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் துணை சபாநாயகர் பிச்சாண்டி, வில்லிவாக்கத்தில் உள்ள சவுமிய தாமோதர பெருமாள் கோவிலில் அரசு தலைமை கொறடா செழியன் ஆகியோரும் பங்கேற்று சமபந்தி விருந்தில் உணவருந்தினார்கள்.
பார்த்தசாரதி கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் சாதத்துடன் சாம்பார், வத்த குழம்பு, ரசம், உருளை கிழங்கு- பட்டாணி பொறியல், கேரட்- கோஸ் பொறியல், அவியல், சேமியா பாயாசம், மெதுவடை, தயிர் பச்சடி, மோர், ஊறுகாய் ஆகியவற்றுடன் சர்க்கரை பொங்கலும் சேர்த்து வழங்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று அனைத்து கோவில்களிலும் 3 வகையான கூட்டு சமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு மணக்க, மணக்க சிறப்பு சைவ உணவு சமபந்தி விருந்தில் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- மும்மதத்தை சேர்ந்த மூவரும் இணைந்து சர்வ மத பிரார்த்தனையை தொடங்கி வைத்தனர்.
- அனைத்து மதத்தினை சேர்ந்தவரும் இங்கு வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர்.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பள்ளியாடி பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் மத நல்லிணக்க விழா கடந்த 19-ந் தேதி தொடங்கியது.
திருத்தலத்தில் சர்வ மத பிரார்த்தனை மற்றும் சமபந்தி விருந்து விழா நேற்று நடைபெற்றது.சர்வ மத பிரார்த்தனையில் சுவாமிதோப்பு கேப்டன் சிவா திருவடிகள், பள்ளியாடி திருஇருதய ஆலய பங்குத்தந்தை ஆரோக்கியசாமி, சாமியார் மடம் ஜமாத் அப்துல் பஷீர் ஆகிய மும்மதத்தை சேர்ந்த மூவரும் இணைந்து சர்வ மத பிரார்த்தனையை தொடங்கி வைத்தனர்.
பின்னர் பள்ளியாடி பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் சமபந்தி விருந்து தொடங்கி வைக்கப்பட்டது. இந்த சமபந்தி விருந்தானது நேற்று முழுவதும் தொடர்ந்து நடைபெற்றது.
பள்ளியாடி பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் தீப ஒளியினால் இறைவனை பிரார்த்தனை செய்வது இத்திருத்தலத்தின் சிறப்பம்சமாகும். இங்கு எண்ணை, திரி, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி போன்ற பொருட்களால் அனைத்து மதத்தினரும் அவரவர் முறைப்படி பிரார்த்தனை செய்கின்றனர்.
லட்சக்கணக்கான மக்கள் மதம், இனம், மொழி வேறுபாடு இன்றி தரும் காணிக்கை பொருட்களை சேர்த்து சமைத்து இங்கு வரும் பொது மக்களுக்கு சமபந்தி விருந்தாக சிறப்புடன் வழங்கப்படுகிறது. நூற்றாண்டுகள் பழக்கமுடைய மிகப்பெரிய புளிய மரத்தின் கீழ் இத்திருத்தலம் அமைந்துள்ளது சிறப்பம்சமாகும். அனைத்து மதத்தினை சேர்ந்தவரும் இங்கு வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் பழைய பள்ளி அப்பா திருத்தல அறக்கட்டளை பொதுச் செயலாளர் குமார், தலைவர் பால்ராஜ், பொருளாளர் சுந்தர்ராஜ், விளவங்கோடு தாசில்தார் பத்மகுமார், வாழ்வச்ச கோஷ்டம் பேரூராட்சி தலைவர் ஜான் டென்சிங், பள்ளியாடி ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் புகாரி, உட்பட பல்வேறு மதத்தை சேர்ந்த நபர்களும் கலந்து கொண்டு சிறப்பித்த னர்.
மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களும் இங்கு வந்து சமபந்தி விருந்தில் கலந்து கொண்டனர்.
- வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலில் அண்ணா நினைவுதினத்தை முன்னிட்டு பொதுவழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது.
- அய்யம்பாளையம் குருசாமி, கோவில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மங்கலம்:
திருப்பூர் மாவட்டம்,பல்லடம் வட்டம் வி.அய்யம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலில் அண்ணா நினைவுதினத்தை முன்னிட்டு பொதுவழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் ,சாமளாபுரம் பேரூராட்சிமன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, துணைத்தலைவர் குட்டிவரதராஜன், 13-வது வார்டு கவுன்சிலர் பெரியசாமி , வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் முன்னாள் அறங்காவலர் அய்யம்பாளையம் குருசாமி, கோவில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவன்மலை ஊராட்சித்தலைவர் கே.கே.துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு உணவு பரிமாறினர்.
- அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் சிவன்மலை கோவில் ஊழியர்கள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
காங்கயம்:
முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி சிவன்மலை முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடும், சமபந்தி விருந்தும் அன்னதான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார், சிவன்மலை ஊராட்சித்தலைவர் கே.கே.துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு உணவு பரிமாறினர்.
இதில் சிவன்மலை ஊராட்சி துணைத்தலைவர் டி.சண்முகம், ஆதித்தமிழர் பேரவையின் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் சிவன்மலை கோவில் ஊழியர்கள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்