என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கூலித்தொழிலாளி சாவு"
- மது குடிக்கும் பழக்கம் இருப்பதால், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார்.
- வீட்டின் அருகே உள்ள சொந்தமான கிணற்றில் தவறி விழுந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கே.ஜெட்டிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் ராமன் (வயது29). கூலித்தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார்.
இந்த நிலையில் நேற்று மது குடித்துவிட்டு ராமன் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த அவர், வண்டியை நிறுத்திவிட்டு தள்ளாடியபடி நடந்து சென்றார்.
அப்போது அவர் வீட்டின் அருகே உள்ள அவருக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்தார். இதில் நீரில் மூழ்கி ராமன் பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டிற்கு வண்டியில் வந்த மகனை காணவில்லை என்று பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடிபார்த்தபோது, கிணற்றில் அவர் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது அவர்கள் ராமனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இந்த சம்பவம் குறித்து பழனி பாப்பாரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ராமனின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாம்பு ஒன்று பழனிச்சாமியின் இடது காலில் கடித்தது.
- ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 53). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று பழனிச்சாமி வீட்டில் இருக்கும்போது திடீரென பாம்பு ஒன்று பழனிச்சாமியின் இடது காலில் கடித்தது.
இதையடுத்து பழனிச்சாமியின் உறவினர்கள் அவரை மொடக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பழனிச்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் இது குறித்து பழனிச்சாமியின் மகன் நவீன் (23) மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தென்னந்தோப்பில் தேங்காய் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து தவறி விழுந்தார்.
- அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே ஜி.தும்மலப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 34). இவர் ஜி.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் வெட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பா ராத விதமாக மரத்தில் இருந்து தவறி விழுந்தார்.
இதில் அவரது தலை அப்பகுதியில் சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தேவதான ப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சம்பவத்தன்று கடைமடை ரெயில்வே கேட் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.
- எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து அவர் மீது மோதியது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தளவாய் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது65). கூலித்தொழிலாளியான
இவர் சம்பவத்தன்று கடைமடை ரெயில்வே கேட் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முனுசாமி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடன் பிரச்சினை ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
- செல்வராஜ் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.
மாரண்டஅள்ளி,
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள சூடானூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 40).கூலி வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி மலர் (35). இருவருக்கும் திருமணம் ஆகி 22 வருடங்கள் ஆகிறது. இந்த நிலையில் செல்வராஜ்க்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அவருக்கு கடன் பிரச்சினை ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இநநிலையில் கடந்த 12-ம் தேதி செல்வராஜ் மதுவில் விஷம் கலந்து குடித்தார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பஞ்சப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வீட்டில் தனியாக இருந்த கஜேந்திரன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
- ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நந்தி மங்கலத்தை அடுத்த எம்.காரபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 55). கூலித் தொழிலாளியான இவருக்கு அடிக்கடி மதுக்குடிக்கும் பழக்கம் உள்ளது.
கடந்த 3மாதமாக அவர் சற்று மனநிலை பாதிப்புடன் காணப்பட்டார். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த கஜேந்திரன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அறுந்து கிடந்த மின்வயரை தெரியாமல் தொட்டதால் திடீரென்று அதில் இருந்து அவர் மீது மின்சாரம் தாக்கியது.
- இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே பெரியபெலவர்த்தி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது30). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி அருணா என்ற மனைவி உள்ளார். வெங்கடேசன் நேற்று முன்தினம் தனது தோட்டத்தில் நடந்து சென்றார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்வயரை தெரியாமல் தொட்டதால் திடீரென்று அதில் இருந்து அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அருணா மகாராஜா கடை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி பின்னால் மோதியது.
- விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த பூசாரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது27). கூலித்தொழிலாளி. இவருக்கு கவிபிரியா (21) என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் சரவணன் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் அனுமந்த்தீர்த்தம் அருகே ஊத்தங்கரை-சேலம் பைபாஸ் சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி பின்னால் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சரவணன் பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
- குபேந்திரனுக்கு அடிக்கடி மதுகுடிக்கும் பழக்கம் இருப்பதால், மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவார்.
- குடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது வழியில் கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மகேந்திரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குபேந்திரன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரங்கநாயகி (வயது 26). இவர்களுக்கு ரட்சகன் என்ற மகன் உள்ளார். குபேந்திரனுக்கு அடிக்கடி மதுகுடிக்கும் பழக்கம் இருப்பதால், மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவார்.
சம்பவத்தன்று அவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது வழியில் கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானார். இந்த சம்பவம் குறித்து அவரது அண்ணன் அஜித், ரங்கநாயகிக்கு தகவல் தெரிவித்தார். உடனே ரங்கநாயகி அங்கு வந்து கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் அங்கு வந்து குபேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மனைவி இறந்ததால் குடிப்பழக்கம் அதிகம் ஏற்பட்டது.
- மனவிரக்தியில் இருந்த சின்னராஜ் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணை அருகே உள்ள ஆலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 65). கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி இறந்ததால் குடிப்பழக்கம் அதிகம் ஏற்பட்டது.
சம்பவத்தன்று மனவிரக்தியில் இருந்த சின்னராஜ் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி சின்னராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கே.ஆர்.பி. அணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பர்கூர் அருகே வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி கார் விபத்துக்குள்ளானது.
- அப்துல் பாட்ஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மேட்சன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் பாட்ஷ (வயது55).
கூலித்தொழிலாளியான இவர் தனது மனைவி மற்றும் உறவினர்கள் 11 பேருடன் காரில் கேரளா மாநிலம் பாலக்காட்டிற்கு சென்றார்.
அப்போது அந்த கார் வேலூர்-கிருஷ்ணகிரி மாவட்டம் எல்லை பகுதியான பர்கூர் அருகே வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி கார் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அப்துல் பாட்ஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் அப்துல் பாஷாவின் மனைவி வானா கவுசர் (45), அல்டாப் (22), அப்துல் பாஷா, பாத்திமா முனிஷா (55), முகமது அனிஷ் (30) உள்பட 10 பேரும் காயம் அடைந்தனர்.
அவர்களை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சாதாரண வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலையை முடித்து விட்டு கல்வெட்டு பகுதியில் உள்ள பாலத்தின் மேல் தூங்கி கொண்டிருந்தார்.
- தூக்கத்தில் இருந்த கிருஷ்ணப்பா தவறி பாலத்தில் இருந்த கால்வாயில் விழுந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேகேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 50). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று பேகேப்பள்ளி-தாகூர் சாலையில் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
வேலையை முடித்து விட்டு கல்வெட்டு பகுதியில் உள்ள பாலத்தின் மேல் தூங்கி கொண்டிருந்தார். பாலத்தின் அடியில் கால்வாயில் தண்ணீர் அதிகமாக ஓடி கொண்டிருந்தது. அப்போது தூக்கத்தில் இருந்த கிருஷ்ணப்பா தவறி பாலத்தில் இருந்த கால்வாயில் விழுந்தார். இதில் நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து கிருஷ்ணப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்