என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வள்ளி"

    • கோவில்பட்டி புற்றுக்கோவிலில் தைப்பூச சிறப்புப் பூஜை நடைபெற்றது.
    • வள்ளி, தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு 18 வகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோவிலில் தைப்பூச சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 10 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து வள்ளி, தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். இதில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் முருகன் குன்றத்தில் வேல் முருகன் கோவில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் முருகன் குன்றத்தில் வேல் முருகன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் 10 நாட்கள் தைப்பூச திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த

    27-ந்தேதி கொடி ஏற்றத்து டன் தொடங்கியது. இந்த திருவிழா நேற்று வரை 10 நாட்கள் தொடர்ந்து நடந்தது. திருவிழாவையொட்டி தினமும் அதிகாலையில் நிர்மால்ய தரிசனமும் தொடர்ந்து அபிஷேகமும், சிறப்பு வழிபாடும், யாகசாலை பூஜையும் நடந்தது. உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரதீபாராதனையும், பக்தர்களுக்குபிரசாதம் வழங்குதலும்நடந்தது. மாலையில் சமய உரையும், இரவுபஜனையும்நடந்தது.

    பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாக னத்தில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதாளம் முழங்க பவனிவந்தநிகழ்ச்சிநடந்தது.

    10-ம் திருநாளான நேற்று தைப்பூச திருவிழா நடந்தது.

    இதையொட்டி நேற்று காலை 9 மணிக்கு யாக சாலை பூஜையும் 11.30 மணிக்கு வெள்ளி அங்கி சாத்தி அலங்கார தீபாராதனையும் மதியம் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. மாலை6மணிக்கு உற்சவமூர்த்தி கிரிவலம் வருதலும், இரவு 7 மணிக்கு கார்த்திகை பொய்கை திருக்குளத்தில் வேல்முரு கன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு தீர்த்தவாரி ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது.

    முன்னதாகசுவாமிக்கும், அம்பாள்விக்ரகங்களுக்கும் பொய்கைதிருக்குளத்தின் கரையில்வைத்துபால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி, சந்தனம்களபம், குங்குமம், விபூதி, தேன், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் விக்ரகங்களுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. அதன்பிறகு பல வண்ண மலர்களால் அலங்க ரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமியையும், அம்பாளையும் எழுந்தருள செய்து முருகன் குன்றத்தின் மேல் பகுதியில் கோவிலை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • முருகப் பெருமானின் பாதத்தின் கீழ் இந்த யானை இடம் பெற்றுள்ளது.
    • கருவறையை அடைய இங்கு சடாட்சரப்படிகள் என்னும் ஆறுபடிகள் அமைந்துள்ளன.

    முருகனின் அறுபடைத் தலங்களில் திருப்பரங்குன்றம் முதல் படை வீடாகத் திகழ்கிறது.

    சூரனை வென்ற முருகனுக்குப் பரிசாகத் தன் மகள் தெய்வானையை தேவேந்திரன் மணம் செய்வித்த திருத்தலம் இதுவாகும்.

    சைவம் (சிவவழிபாடு), வைணவம் (விஷ்ணு வழிபாடு), காணாபத்யம் (கணபதி வழிபாடு), சாக்தம் (அம்பாள் வழிபாடு),

    சௌரம் (சூரிய வழிபாடு), கவுரமாரம் (முருக வழிபாடு) என்னும் ஆறு வகையான மதங்கள் பழங்காலத்தில் இருந்தன.

    அவற்றை இணைக்கும் தலமாக திருப்பரங்குன்றம் கோவில் திகழ்கிறது.

    இதை கருவறையில் காணலாம்.

    ஐராவதம் என்னும் தேவலோகத்து யானையால் வளர்க்கப்பட்ட தெய்வானையை மணம் செய்த விழா

    பங்குனி உத்திரத்தையொட்டி, இங்கு பிரம்மோற்சவமாக நடக்கிறது.

    முருகப் பெருமானின் பாதத்தின் கீழ் இந்த யானை இடம் பெற்றுள்ளது.

    கருவறையை அடைய இங்கு சடாட்சரப்படிகள் என்னும் ஆறுபடிகள் அமைந்துள்ளன.

    இந்தப் படிகளில் ஏறும்போது "சரவணபவ" என்னும் ஆறெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடியே செல்வது நல்லது.

    • தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.
    • தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.

    தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.

    இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையட்டியோ (ஓரிரு நாள் முன்பின்) தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது.

    இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

    தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

    தைப்பூசத்தன்று முருகப் பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.

    தைப்பூச வழிபாடு:

    நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். தை மாதப் பூச நட்சத்திரம் பெரும்பாலும் பவுர்ணமியில் வரும்.

    முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.

    தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.

    • தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர்.
    • உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம்.

    தைப்பூச சிறப்புகள்:

    சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.

    சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே.

    இக்காரணங்களுக்காகவே சிவன் கோவில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.

    வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை பூச நட்சத்திரத்தன்றுதான் சமாதியானார்.

    இதனைக் குறிக்கும் விதமாக அவர் சமாதியான வடலூரில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

    தைப்பூச விரத முறை:

    தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு திருநீறு, ருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர்.

    தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர்.

    உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம்.

    மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.

    • வடலூரில் தைப்பூசத்தன்று அருட்பெரும் ஜோதி விழா நடைபெறும்.
    • வருட பூசம் தை மாதத்தில் ஏழு திரை விலக்கி ஜோதி தரிசனம் காட்டுவதைக் காணலாம்.

    வடலூரில் தைப்பூசத்தன்று அருட்பெரும் ஜோதி விழா நடைபெறும்.

    மாத பூசத்தில் ஆறு திரை விலக்கிக் காட்டுவார்கள்.

    வருட பூசம் தை மாதத்தில் ஏழு திரை விலக்கி ஜோதி தரிசனம் காட்டுவதைக் காணலாம்.

    1. கறுப்புத்திரை - மாயசக்தி,

    2. நீலத் திரை- திரியா சக்தி,

    3. சிவப்புத் திரை - இச்சாசக்தி,

    4. பச்சைத் திரை- பராசக்தி,

    5. பொன்திரை- ஞானசக்தி,

    6. வெள்ளைத்திரை- ஆதிசக்தி,

    7. பல வண்ணத்திரை- சிற்பசக்தி.

    • கிழக்கு முகமாக நின்று சூரியனை வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க,
    • மற்றவர் முற்றிய புதுநெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர்.

    தைப்பூசத்தில் தான் யாழ்ப்பாண மக்கள் புது நெல்லு (புதிர்) எடுப்பர்.

    தைப்பூசம் முருகனுக்கு உரிய சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

    அன்று அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்து வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள்,

    தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம் என்பவற்றுடன் வயலுக்குச் சென்று,

    கிழக்கு முகமாக நின்று சூரியனை வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க,

    மற்றவர் முற்றிய புதுநெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர்.

    அதனைக் குடும்பத்தலைவி பெற்று சுவாமி அறையில் வைப்பார்.

    அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து உமியை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து,

    வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இட்டு குடும்பத்தினருக்குப் பரிமாறுவர்.

    அந்த அரிசியுடன் வீட்டில் உள்ள அரிசியையும் கலந்து அன்றைய மதிய உணவு சமைக்கப்படும்.

    ஊரில் உள்ள முருகன் கோவில்களில் பால் குடம் எடுத்தும், காவடி எடுத்தும் தமது நேர்த்திகளை நிறைவேற்றுவர்.

    • தை மாதத்தை மகர மாதம் என்று அழைப்பார்கள்.
    • வள்ளல் பெருமான் தைப்பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்.

    வள்ளல் பெருமான் தைப்பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்.

    காரணம் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும் சிறப்பு வாய்ந்த தினமாகும்.

    தை மாதத்தை மகர மாதம் என்று அழைப்பார்கள்.

    மகரம் என்பது முடிந்த நிலையினை குறிப்பதாகும்.

    அகரம்+உகரம்+மகரம்=ஓம்

    தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற நாள் சூரியன் உதிக்கின்ற நேரத்தில் சந்திரனும் வானத்தில் இருக்கும்.

    அப்போது ஞானசபையில் இருந்து அக்னியான ஜோதி காண்பிக்கப்படும். அதாவது சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி

    * சந்திரன் என்பது மனஅறிவு.

    * சூரியன் என்பது ஜீவ அறிவு.

    * அக்னி என்பது ஆன்மா அறிவு.

    சந்திரன் சூரியனில் அடங்கி, சூரியன் அக்னியில் அடங்கி அக்னி ஆகாயத்தில் அடங்கும் என்பதே தைபூசம்.

    மனம் ஜீவனில் அடங்கி, ஜீவன் ஆன்மாவில் அடங்கி, ஆன்மா சிவத்துடன் கலந்து விடும் என்பதை காட்டவே தைபூசம் நமது வள்ளல் பெருமானால் அளிக்கப்பட்டது.

    • முருகன் குறிஞ்சி நிலக்கடவுள், மலையும் மலை சார்ந்த இடங்களின் கடவுள் முருகன்.
    • உருவ வழிபாட்டில் தொன்மையானதும் முருகன் வழிபாடாகும்.

    மனித இனம் முதன் முதலில் தோன்றிய இடம் குறிஞ்சி நிலமாகும்.

    ஆகவே முதன் முதலில் மக்கள் குறிஞ்சி நிலத்திலேயே தெய்வ வழிபாடு தொடங்கினார்கள்.

    ஒரு குழந்தை வடிவம் படைத்து அதை கடவுளாக வழிபாடு செய்தது முருகன் வழிபாடு என சொல்கிறார்கள்.

    உருவ வழிபாட்டில் தொன்மையானதும் முருகன் வழிபாடாகும்.

    முருகன் குறிஞ்சி நிலக்கடவுள், மலையும் மலை சார்ந்த இடங்களின் கடவுள் முருகன்.

    அதனால் முருகனைக் "குறிஞ்சிக் கிழவன்" "மலைகிழவோன்" என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன.

    முருகன் தமிழ்க் கடவுள். முருகனே தமிழ் மொழியை முதன் முதலில் அகத்தியருக்கு அறிவுறுத்தினான் என்பது வரலாறு.

    மேலும் சிவபிரானுக்குப் பிரணவப் பொருளைத் தமிழிலேயே முருகன் உபதேசித்தான்.

    "முருகு" என்ற சொல்லுக்கு அழியாத அழகும், குன்றாத இளமையும், இயற்கை மணமும், எல்லாப் பொருள்களிலும் கடவுள் தன்மை உண்டு என பல பொருள்கள் உண்டு.

    "மு" என்பது திருமாலையும் "ரு" என்பது சிவபெருமானின் அம்சத்தையும் "க" என்பது பிரம்மனையும் குறிக்கும் என்பர்.

    தமிழின் மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் தன்னுடைய கண்களாகவும்,

    தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம் விளங்கும் எழுத்துக்கள் ஆறும் முகங்களாகவும்,

    தனி நிலை எனப்படும் ஆய்தமே ஒப்புயர்வற்றுத் திகழும் வேலாகவும் கொண்டு,

    தமிழ் தெய்வமாகிய முருகன் தமிழ் வடிவாக விளங்குகின்றான்.

    ஞானமே உடலாகவும், இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்னும் முச்சக்திகளே மூன்று கண்களாகவும்,

    இப்பெரிய உலகமே கோயிலாகவும் கொண்டு நிற்கும் ஒப்பற்ற தனிச்சுடராகத் திகழ்பவன் முருகன்.

    சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் நூறாயிரம் சூரியன்கள் ஒரே காலத்தில் ஒளி வீசுவது போன்ற பேரழகு வாய்ந்த தெய்வீக வடிவம் கொண்டவன் முருகன்.

    முருகனை வணங்கினால் எல்லாக் கடவுள்களையும் வணங்கி அடையும் பயன்களை எல்லாம் நாம் ஒருங்கே பெறலாம்.

    மகனுக்கு செய்யும் சிறப்பால், தந்தை தாயாகிய சிவ பெருமானும் உமாதேவியும், தம்பியைப் போற்றுதலால்

    சகோதரனாகிய விநாயகரும், மருமகனை வழிபடுதலால் மாமனாகிய திருமாலும், தலைவனை வணங்குதலால்

    தேவரும், முனிவரும் ஆகிய அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்.

    எனவே முருகன் வழிபாடு மிக்க சிறப்புடையது.

    முருகன் தன் பக்தர்கள் வேண்டும் கோரிக்கைகளை எல்லாம், அவர்கள் வேண்டியவாறே விரும்பிக் கொடுத்து அருளும் தன்மை வாய்ந்தவன்.

    முருகனை அடைந்தால் அவன் நம் துன்பத்தை அழிப்பான்.

    முருகனை அன்புடன் வழிபட்டு முருகா முருகா என எப்போதும் கூறித் தியானிப்பவர்கள்

    என்றும் குறையாத பெரும் செல்வத்தைப் பெறுவார்கள், அவர்களை ஒருேபாதும் எத்தகைய துன்பமும் அணுகாது.

    • முருகன் தரிசனத்தால் நான்கு விதமான நன்மைகளைப் பெறலாம்.
    • .பிறவித் துன்பத்தைப் போக்கவல்லது

    முருகன் தரிசனத்தால் நான்கு விதமான நன்மைகளைப் பெறலாம் என்று "கந்தர் கலிவெண்பா" எடுத்துரைக்கிறது.

    1.பிறவித் துன்பத்தைப் போக்கவல்லது

    2.இடையூறுகள், நோய்கள், பில்லி, சூன்யம் போன்ற ஏவல் வினைகள், பாம்பு, பிசாசு, கொடிய பூதம், பெருந்தீ,

    வெள்ளம், பகைவர்கள் ஆகியவைகளிலிருந்தும் காக்கும்.

    3.தீமை விளைவிக்கும் கொடிய நஞ்சுகொண்ட விலங்குகள் முதலிய எவையாயினும்

    எவ்விடத்தும் எப்போது வந்து எதிர்த்தாலும் எழுந்தருளிக் காப்பார்.

    4.மரண பயத்தை நீக்கும்.

    • “கனககிரி” என்று அழைக்கப்படும் பொன்மலை சுமார் 660 அடி உயரம் உடையது.
    • மலை மீதுள்ள வற்றாதச் சுனைகளின் “நீர்” தீர்த்தமாக கருதப்படுகிறது.

    "கனககிரி" என்று அழைக்கப்படும் பொன்மலை சுமார் 660 அடி உயரம் உடையது.

    இதன் உச்சியில் உள்ள வேலாயுத சுவாமி கோவிலுக்கு செல்ல 200 படிக்கட்டுகள் உள்ளன.

    மலை எறும் வழியில் இடும்பன் சன்னதி உள்ளது.

    மலை மீதுள்ள வற்றாதச் சுனைகளின் "நீர்" தீர்த்தமாக கருதப்படுகிறது.

    கிழக்கு திசை பார்த்தவாறு கோவில் அமைந்துள்ளது.

    கோவில் மகா மண்டபத்தினுள் இடதுபுறம் ஆனந்தமாக தல விநாயகர் காட்சி தருகிறார்.

    கருவறையில் வோலயுத சுவாமி என்ற பெயருடன் மூலவர் கிழக்கு திசை நோக்கி காட்சி தருகிறார்.

    சுமார் 4 அடி உயரமுள்ள திருமேனி, வலக்கரத்தில் தண்டம் தரித்து இடக்கரத்தை இடுப்பில் வைத்த நிலையில் அருட்காட்சி தருகிறார்.

    ருத்ராட்சம் சுற்றி சூரிய சந்திரர்களையும் சூடி விளங்கும் திருமுடியுடன் கூடிய

    அழகன் முருகப்பெருமானின் அலங்கார காட்சி வேறு எந்த திருத்தலத்திலும் காணக்கிடைக்காத அருட்காட்சியாகும்.

    வேல் கொண்ட கையுடன் விளங்கும் இங்குள்ள வேலாயுத சுவாமியை கண்டு தொழ

    "நாலாயிரம் கண் அந்த நான்முகன் படைத்திலனே" என்று தனது கனககிரி திருப்புகழில் ஏங்குகிறார் அருணகிரிநாதர்.

    • நாளடைவில் இந்த பாதயாத்திரை வழக்கம் தமிழர்கள் அனைவரிடமும் பரவி விட்டது.
    • தமிழ்நாட்டில் எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு பழனி முருகன் கோவிலுக்கு உண்டு.

    தமிழ்நாட்டில் எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு பழனி முருகன் கோவிலுக்கு உண்டு.

    அது பழனிக்கு படையெடுத்து வரும் பக்தர்களின் கட்டுக் கடங்காத பாதயாத்திரை கூட்டம்.

    தைப்பூசம் சீசனில் பழனி நோக்கி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நடந்தே பாதயாத்திரையாகச் சென்று முருகனை வழிபடுகிறார்கள்.

    உலகம் முழுவதும் இந்த பாதயாத்திரை பழக்கத்தை ஏற்படுத்தியவர்கள் நகரத்தார்கள் ஆவார்கள்.

    பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நகரத்தார்கள் பழனி கோவிலுக்கு நடந்து வருவதை சில நடைமுறைகளுக்காக கடைப்பிடித்தனர்.

    பாதயாத்திரை வரும் போது ஒவ்வொரு குடும்பத்தினரும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை கவனிப்பார்கள்.

    அதை வைத்து அந்த குடும்பத்தினருடன் திருமண சம்பந்தம் ேபசி முடிப்பார்கள்.

    நாளடைவில் இந்த பாதயாத்திரை வழக்கம் தமிழர்கள் அனைவரிடமும் பரவி விட்டது.

    பாதயாத்திரையின் போது காவடி ஏந்தி செல்வதும், அலகு குத்தி தேர் இழுத்து செல்வதும் முக்கிய அம்சம்.

    முருகனிடம் இடும்பன் வரம் கேட்டபோது, நான் மலைகளை காவடி ஏந்தியது போல

    காவடி ஏந்தி வரும் பாதயாத்திரை பக்தர்களின் வேண்டுதல்களை, நீ நிறைவேற்ற வேண்டும் என்றான்.

    இதை ஏற்று காவடி ஏந்தி பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் வேண்டுதல்களை பழனி முருகன் நிறைவேற்றுகிறார்.

    நோய் தீர வேண்டும், நல்ல வரன் கிடைக்க வேண்டும், வியாபாரம் செழிக்க வேண்டும்,

    குடும்பத்தில் பிரச்சினை தீர வேண்டும் என்று லட்சக் கணக்கானவர்கள் ஆண்டுதோறும்

    பழனி முருகனை நாடி, நடந்தே வருகிறார்கள்.

    சமீப காலமாக சென்னையில் இருந்தும் கேரளாவில் இருந்தும் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது.

    ×