search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது விற்ற முதியவர் கைது"

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
    • திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி சப் இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது பால்னாங்குப்பம் பகுதியில் மது பாட்டில்கள் மறைத்து வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அந்த தகவலின் பெயரில் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது பால்னாங்குப்பம் பெருமாள் கோவில் வட்டம் பகுதியைச் சேர்ந்த புகழேந்தி (வயது 52) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் புகழேந்தியை கையும் களமாக பிடித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவரிடமிருந்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

    • அதன் பேரில் போலீசார் இண்டியம்பாளையம் அடுத்த தொப்பம்பட்டி பகுதியில் ஆய்வு செய்து சோதனை செய்தனர்.
    • சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ரவி (46) என்றும், அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் அனுமதியின்றி மது விற்பனை செய்தது தெரிய வந்தது.

    கோபி

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள இண்டியம் பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் இண்டியம்பாளையம் அடுத்த தொப்பம்பட்டி பகுதியில் ஆய்வு செய்து சோதனை செய்தனர்.

    அப்போது அந்த பகுதியில் ஒருவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தார். தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ரவி (46) என்றும், அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் அனுமதியின்றி மது விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 50 மது பாட்டில்கள் மற்றும் லாட்டரி சீட்டுகளை பறி முதல் செய்தனர்.

    ×