search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National People’s Court"

    • நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீர்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
    • மொத்தம் 3494 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 1281 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீர்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    இந்நிகழ்வுக்கு முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் தலைமை வகித்தார்.கூடுதல் சார்பு நீதிபதி முருகன், குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதி, வழக்குரைஞர் முல்லை ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வில் உரிமையியல் மற்றும் குடும்ப நல வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.மோட்டார் வாகன வழக்குகளுக்கான சிறப்பு சார்பு நீதிபதி தங்கமணி, குற்றவியல் நீதித்துறை நடுவர் முருகேசன், வழக்குரைஞர் மகா சண்முகம் ஆகியோர் கொண்ட இரண்டாவது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டது.இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு ஆகிய வட்டச் சட்டப்பணிகள் குழுவின் அமர்வுகளிலும் விசாரணை நடத்தப்பட்டது.

    இவற்றின் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 3494 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 1281 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, ரூ. 4 கோடியே 23 லட்சத்து 52 ஆயிரத்து 902 அளவுக்கு இழப்பீடு மற்றும் தீர்வு தொகையாக வழக்காடி களுக்கு பெற்றுத் தரப்ப ட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சார்பு நீதிபதியுமான இந்திராகாந்தி, மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    • சிவகங்கை மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,120 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • இதற்கான ஏற்பாடு களை மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் செய்திருந்தனர்.

    சிவகங்கை

    தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 10 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது.

    இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்க ளிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

    தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா, கூடுதல் மாவட்ட நீதிபதி சத்திய தாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்/சார்பு நீதிபதி பரமேஸ்வரி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி இன்பகார்த்திக், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், குற்றவியல் நீதிதுறை நடுவர்கள் அனிதா கிறிஸ்டி, சத்திய நாராயணன், கூடுதல் மகிளா குற்றவியல் நீதிதுறை நடுவர் ஆப்ரின் பேகம் மற்றும் வழக்கறிஞர்கள் வழக்குகளை விசாரித்தனர்.

    இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 100 குற்றவியல் வழக்குகளும், 164 காசோலை மோசடி வழக்குகளும், 185 வங்கிக் கடன் வழக்குகளும், 112 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 86 குடும்பப் பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகளும், 405 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 991 மற்ற குற்றவியல் வழக்குகளும் என மொத்தம் 2,043 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.

    இதில் 1060 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.2 கோடியே 99 லட்சத்து 34 ஆயிரத்து 270 வரை வழக்காடிகளுக்கு கிடைத்தது. அதேபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்கு களில் 850 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப் பட்டது. இதில் 60 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மூலம் ரூ.78 லட்சத்து 14 ஆயிரத்து 850 வரை வங்கிகளுக்கு வரவானது.

    இதற்கான ஏற்பாடு களை மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்குழு பணியாளர்கள்

    செய்திருந்தனர்.

    • கரூரில் 11-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது
    • மேலும் விவரங்களுக்கு கரூர் மாவட்டசட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தொலைபேசி எண்ணில் (0432438670) தொடர்பு கொள்ளலாம்.
    கரூர்:


    கரூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கரூர் மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் 11ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. அதன்படி கரூர் மாவட்டத்திலும் அன்றைய தினம் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளதால் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ள சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திலோ அல்லது கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிலோ தெரிவிக்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு கரூர் மாவட்டசட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தொலைபேசி எண்ணில் (0432438670) தொடர்பு கொள்ளலாம். இதுதவிர, மண வாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள். காசோலை மோசடி வழக்குகள், கடன் தொழிலாளர் நல வழக்குகள் உட்பட அனைத்து வழக்குகளும் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்படும் என்று அவர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


    ×