search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆளுநர்கள் நியமனம்"

    • முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங், மிசோரம் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்
    • மணிப்பூர் கவர்னராக முன்னாள் உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா நியமனம்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு பல்வேறு மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்தார்.

    ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸ் ராஜினாமா செய்ததை அடுத்து மிசோரம் கவர்னராக இருந்த ஹரிபாபு ஒடிசா கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங், மிசோரம் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்

    கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் பீகார் கவர்னராகவும் பீகார் கவர்னராக இருந்த ராஜேந்திர அர்லேகர் கேரளா கவர்னராகவும் மாற்றப்பட்டனர்.

    மணிப்பூர் கவர்னராக முன்னாள் உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    புதிதாக நியமிக்கப்பட்ட கவர்னர்கள்

    ஒடிசா - ஹரிபாபு

    மிசோரம் - முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்

    கேரளா - ராஜேந்திர அர்லேகர்

    பீகார் - ஆரிப் முகமது கான்

    மணிப்பூர் - அஜய் குமார் பல்லா

    • மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுவேன்.
    • எனக்கு கிடைத்த பெருமையாக பார்க்கவில்லை. தமிழினத்திற்கு கிடைத்த பெருமையாக பார்க்கிறேன்.

    திருப்பூர்:

    பா.ஜ.க.வின் முன்னாள் மாநில தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருப்பூரை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து திருப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் , அரசியல் கட்சி நண்பர்கள், தன்னார்வலர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் .

    அப்போது சி.பி. ராதாகிருஷ்ணன், அவரது தாயாரிடம் ஆசி பெற்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்திற்கு மீண்டும் ஒரு ஆளுநரை குடியரசு தலைவரும் பிரதமரும் கொடுத்துள்ளனர். இது தமிழினத்தின் மீதும், பாரம்பரியம் மீதும், கலாச்சாரம் மற்றும் தமிழ்மக்கள் மீதும் எத்தகைய அன்பும் பாசமும் வைத்துள்ளார்கள் என்பதற்கு உதாரணமாக உள்ளது.


    பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அத்தகைய மக்களின் உயர்வுக்கும் முன்னேற்றத்திற்கும் என்னென்ன வழியில் செயல்பட முடியுமோ அதை மனதில் வைத்து பணியாற்றுவேன் . இது எனக்கு கிடைத்த பெருமையாக பார்க்கவில்லை. தமிழினத்திற்கு கிடைத்த பெருமையாக பார்க்கிறேன்.

    மோடிக்கும் குடியரசு தலைவருக்கும் தமிழ் மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக இதை பார்க்கிறேன. மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுவேன் என்றார்.

    • மணிப்பூர் ஆளுநராக இருந்த இல.கணேசன் நாகாலாந்து மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழக பாஜக மூத்த நிர்வாகியான சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா, ஆந்திரா, அசாம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத்தலைவர் திரவுபதி மும்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

    * மணிப்பூர் ஆளுநராக இருந்த இல.கணேசன் நாகாலாந்து மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    * ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழக பாஜக மூத்த நிர்வாகியான சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்.

    * அருணாச்சலப் பிரதேசம் மாநில ஆளுநராக திரிவிக்ராம் பர்னாயக் நியமனம்.

    * சிக்கிம் ஆளுநராக லட்சுமணன் பிரசாத் ஆச்சார்யா நியமனம்.

    * இமாச்சலப்பிரதேச ஆளுநராக பிரதாப் சுக்லா நியமனம்.

    * அசாம் மாநில ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியா நியமனம்.

    * ஆந்திர மாநில ஆளுநராக அப்துல் நசீர் நியமனம்.

    * சத்தீஸ்கர் மாநில ஆளுநராக பிஸ்வா பூஷன் ஹரிச்சந்திரன் நியமனம்.

    * மணிப்பூர் மாநில ஆளுநராக அனுசுயா நியமனம்.

    * மேகாலயா மாநில ஆளுநராக பகு சவுகான் நியமனம்.

    * பீகார் மாநில ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் நியமனம்.

    * மகாராஷ்டிரா மாநில ஆளுநராக ரமேஷ் பைஸ் நியமனம்.

    * லடாக் மாநில ஆளுநராக மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ×