என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் பிரிமீயர் லீக்"

    • லீக் சுற்று முடிவில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
    • புள்ளிபட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டியில் ஆடும்.

    மும்பை:

    முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். புள்ளிபட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டியிலும், 2-வது மற்றும் 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் ஆடும்.

    அதில் வெற்றி பெறும் அணி இறுதிபோட்டிக்கு முன்னேறும். பெண்கள் பிரிமீபர் லீக்கில் இதுவரை 3 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன.

    இந்நிலையில் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - உ.பி. வாரியர்ஸ் அணிகள் இன்று மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் எந்த அணி வெல்லும் என எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது

    • தொடரின் இன்று நடைபெறும் 12வது லீக் ஆட்டத்தில் இதுவரை தோல்வியை சந்திக்காத மும்பை அணியும், குஜராத் அணியும் மோத உள்ளன.
    • தனது வெற்றிபயணத்தை தொடர மும்பை அணி கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி.வாரியர்ஸ், குஜராத் ஜெய்ண்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்று ஆடி வருகின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    2வது மற்றும் 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் ஆடும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

    இந்நிலையில் இந்த தொடரின் இன்று நடைபெறும் 12வது லீக் ஆட்டத்தில் இதுவரை தோல்வியை சந்திக்காத மும்பை அணியும், குஜராத் அணியும் மோத உள்ளன.

    தற்போது வரை இந்த தொடரில் தோல்வியை சந்திக்காத மும்பை அணியை வீழ்த்தி, தொடக்க ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்புடன் குஜராத் அணி ஆடும்.

    அதே வேளையில் தனது வெற்றிபயணத்தை தொடர மும்பை அணி கடுமையாக போராடும். இதனால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    • பெங்களூரு அணி தான் மோதிய 5 ஆட்டங்களிலும் தோற்று புள்ளி எதுவும் பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது.
    • டெல்லியிடம் 2 முறையும் மும்பை, குஜராத், உ.பி. வாரியர்சிடம் தலா 1 முறையும் தோற்று இருந்தது.

    மும்பை:

    முதலாவது மகளிர் பிரிமீயர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள பிரா போர்ன், நவி மும்பையில் இருக்கும் டி.ஒய்.பட்டேல் ஆகிய 2 மைதானங்களில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த 12-வது 'லீக்' ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 55 ரன் வித்தியாசத்தில் குஜராத் ஜெய்ன்ட்சை மீண்டும் வீழ்த்தியது.

    முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய குஜராத் அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 107 ரன்னே எடுக்க முடிந்தது. மும்பை அணி தோல்வியை தழுவாமல் தொடர்ந்து 5-வது வெற்றியை பெற்றது. இதன் மூலம் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

    13-வது 'லீக்' ஆட்டம் டி.ஒய்.பட்டேல் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் அலிசா ஹீலி தலைமையிலான உ.பி. வாரியர்ஸ்-ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    உ.பி.அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி குஜராத்தை 3 விக்கெட் வித்தியாசத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 10 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. டெல்லி (42 ரன்), மும்பை (8 விக்கெட்) அணிகளிடம் தோற்று இருந்தது. பெங்களூருவை மீண்டும் தோற்கடித்து 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உ.பி.வாரியர்ஸ் இருக்கிறது.

    பெங்களூரு அணி தான் மோதிய 5 ஆட்டங்களிலும் தோற்று புள்ளி எதுவும் பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது. டெல்லியிடம் 2 முறையும் மும்பை, குஜராத், உ.பி. வாரியர்சிடம் தலா 1 முறையும் தோற்று இருந்தது.

    தோல்விப் பாதையில் இருந்து மீண்டு உ.பி. அணிக்கு பதிலடி கொடுத்து பெங்களூரு முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    • பெண்கள் பிரிமீயர் லீக் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது.
    • கோப்பையை கைப்பற்றும் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.

    இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.பி.எல். போட்டியை போன்று பெண்களுக்கான பிரிமீயர் லீக் போட்டி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன்படி முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.

    இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோதின. லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணி தலா 12 புள்ளிகள் பெற்றாலும் ரன்-ரேட் அடிப்படையில் முன்னிலை பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடம் பிடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    பெண்கள் பிரிமீயர் லீக் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது.

    இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை அணியை பொறுத்தமட்டில் முதல் 5 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி கண்டு ஆதிக்கம் செலுத்தியது.

    அதன் பிறகு 2 ஆட்டங்களில் தோற்று சற்று சரிவை சந்தித்த அந்த அணி வெளியேற்றுதல் சுற்றில் உ.பி.வாரியர்சை எளிதில் வீழ்த்திய உற்சாகத்துடன் இந்த போட்டியில் களம் இறங்குகிறது.

    இந்த போட்டியில் கோப்பையை கைப்பற்றும் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.

    இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:- மும்பை இந்தியன்ஸ்: யாஸ்திகா பாட்டியா, ஹெய்லி மேத்யூஸ், நாட் சிவெர், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), அமெலி கெர், பூஜா வஸ்ட்ராகர், ஹூமைரா காஸி, அமன்ஜோத் கவுர், இசி வோங், ஜிந்திமணி கலிதா, சாய்கா இஷாக். டெல்லி கேப்பிட்டல்ஸ்: மெக் லானிங் (கேப்டன்), ஷபாலி வர்மா, அலிஸ் கேப்சி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிஜானே காப், ஜெஸ் ஜோனசென், தானியா பாட்டியா, அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், ஷிகா பாண்டே, பூனம் யாதவ் அல்லது தாரா நோரிஸ்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18, கலர்ஸ் தமிழ் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    வதோதரா:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது.

    தொடக்க வீராங்கனை கிரண் நவ்கிரே அதிரடியாக ஆடி 27 பந்தில் அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டானார். ஷ்வேதா ஷெராவத் 37 ரன்னும், சினெல் ஹென்ரி 33 ரன்னும் எடுத்தனர்.

    டெல்லி சார்பில் அன்னபெல் சதர்லேண்ட் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி கேப்பிடல்ஸ் களமிறங்கியது. கேப்டன் மெக் லேனிங் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 69 ரன்னில் அவுட்டானார். ஷபாலி வர்மா 26 ரன்னில் வெளியேறினார்.

    அனபெல் சதர்லேண்ட்-மரிஜானே காப் ஜோடி பொறுப்புடன் ஆடியது.

    இறுதியில், டெல்லி அணி 19.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. சதர்லேண்ட் 41 ரன்னும், மரிஜானே 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • முதலில் ஆடிய பெங்களூரு 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய குஜராத் ஜெயண்டஸ் அணி 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    பெங்களூரு:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கனிகா 33 ரன்கள் எடுத்தார்.

    குஜராத் டாட்டின், தனுஜா கன்வர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி குஜராத் ஜெயண்ட்ஸ் களமிறங்கியது. கேப்டன் ஆஷிக் கார்ட்னர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். லிட்ச்பீல்ட் 30 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், குஜராத் அணி 16.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆனாலும், நடப்பு தொடரில் புள்ளிப் பட்டியலில் குஜராத் அணி கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.

    • பெங்களூரு அணி உள்ளூரில் 4 ஆட்டங்களிலும் வரிசையாக தோற்று இருக்கிறது.
    • போட்டிகளைக் காண வந்த ரசிகர்கள் தோல்வியால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    பெங்களூரு:

    3-வது மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்தது.

    வதோதராவில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் வெற்றி கண்ட பெங்களூரு அணி, அதன்பிறகு உள்ளூரில் 4 ஆட்டங்களிலும் வரிசையாக தோற்று இருக்கிறது.

    இந்நிலையில், தொடர் தோல்வி எதிரொலியாக பெங்களூரு ரசிகர்களிடம் பெங்களூரு அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா மன்னிப்பு கேட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, ஸ்மிருதி மந்தனா கூறுகையில், இந்தப் போட்டியை காண ரசிகர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்து ஆதரவு அளித்தனர். தோல்வியால் மிகுந்த ஏமாற்றம் அடைந்து இருப்பார்கள். பெங்களூரு மைதானத்தில் அவர்களுக்காக ஒரு போட்டியிலும் எங்களால் வெற்றிபெற முடியவில்லை. அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி வரும் ஆட்டங்களில் வெற்றி பெறுவோமென நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • உ.பி.வாரியர்ஸ் அணியுடனான போட்டியின் போது ஹர்மன்பிரீத் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    • அவருக்கு ஆதரவாக சக வீராங்கனை அமெலியா கெர்ரும் நடுவரிடம் ஏதோ கூறினார்.

    லக்னோ:

    மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் தொடரில் லக்னோவில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் உ.பி.வாரியர்சை தோற்கடித்து 4-வது வெற்றியை தனதாக்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பந்து வீசிய மும்பை அணி கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது.

    இதனால் உ.பி.வாரியர்ஸ் அணி பேட்டிங்கின் போது கடைசி ஓவரில் உள்வட்டத்துக்கு வெளியே 3 பீல்டர்களை மட்டுமே நிறுத்த வேண்டும் என்று நடுவர் அஜிதேஷ் அர்கால் மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரிடம் அறிவுறுத்தினார்.

    இந்த முடிவால் அதிருப்தி அடைந்த ஹர்மன்பிரீத் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக சக வீராங்கனை அமெலியா கெர்ரும் நடுவரிடம் ஏதோ கூறினார். அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த உ.பி.வாரியர்ஸ் வீராங்கனை சோபி எக்லெஸ்டோனிடமும் கையை நீட்டி கோபமாக விவாதித்தார். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போட்டி நடுவர், ஹர்மன்பிரீத் கவுருக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதத்தை அபராதமாக விதித்தார்.

    ×