search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாடா குழுமம்"

    • டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.
    • டாடா சன்ஸ் என்பது டாடா குழுமத்தில் இருக்கும் 165 நிறுவனங்களுக்குமான ஒரு ஹோல்டிங் நிறுவனம்.

    டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86) வயது முதிர்வு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். மும்பையில் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதையை செலுத்தப்பட்டது.

    பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.

    2012 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ரத்தன் டாடா உயிரிழந்ததை அடுத்து, டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். டாடா இன்டர்நேஷனல் லிமிட்டெட்-இன் நிர்வாக இயக்குநராக இருந்தவர் நோயல் டாடா. இவர் ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார்.

    இந்நிலையில், நோயல் டாடாவால் ஒரேநேரத்தில் டாடா அறக்கட்டளை மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்க முடியாது என்ற தகவல் தெரிய வந்துள்ளது. ஒரே நேரத்தில் ஒருவர் டாடா அறக்கட்டளை அல்லது டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக மட்டும் தான் இருக்க முடியும்.

    டாடா சன்ஸ் என்பது டாடா குழுமத்தில் இருக்கும் 165 நிறுவனங்களுக்குமான ஒரு ஹோல்டிங் நிறுவனம். இதை தற்போது என்.சந்திரசேகரன் தலைமையிலான இயங்கி வருகிறது, டாடா குழுமத்தின் இயக்கத்திற்கு டாடா சன்ஸ் தலையாய பொறுப்பு வகிக்கிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு டாடா சன்ஸ் தலைவர் பதவிக்கு வர நோயல் டாடா விரும்பினார். ஆனால் ரத்தன் டாடா இவருக்கு பதவியை கொடுக்காமல் சைரஸ் மிஸ்திரிக்கு கொடுத்தார். சைரஸ் மிஸ்திரிக்கும் டாடா நிர்வாகத்திற்கும் பிரச்சனை ஏற்படவே ரத்தன் டாடா மீண்டும் தலைவர் பதவியை ஏற்றார்.

    இதன் பின்பு ரத்தன் டாடா ஓய்வு பெற்ற பின்பு டாடா சன்ஸ் தலைவராக டிசிஎஸ் சிஇஓவாக இருந்த என்.சந்திரசேகரனை ரத்தன் டாடா நியமித்தார்.

    ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸில் டாடா அறக்கட்டளை 66% பங்குகளை வைத்திருக்கிறது, இதில் சர் ரத்தன் டாடா அறக்கட்டளை மற்றும் சர் டோரபஜி டாடா அறக்கட்டளை ஆகியவை முக்கிய அறக்கட்டளைகள் ஆகும். டாடா சன்ஸின் விதிகள் டி, அதன் இயக்குநர்களில் மூன்றில் ஒரு பகுதியை டாடா ட்ரஸ்ட் நியமிக்க அதிகாரம் உள்ளது.

    • டாடா அறக்கட்டளை தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.
    • டாடா குழுமத்தின் வளர்ச்சியில் முக்கிய நபராக விளங்கி வருகிறார்.

    மும்பையில் இன்று நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து, ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் டாடா, டாடா அறக்கட்டளை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    டாடா ஸ்டீல், வாட்ச் நிறுவனமான டைட்டனின் துணைத் தலைவராக நோயல் டாடா உள்ளார். நோயல் டாடா 2000-களின் முற்பகுதியில் இணைந்ததில் இருந்து டாடா குழுமத்தின் வளர்ச்சியில் முக்கிய நபராக விளங்கி வருகிறார்.

    சர் ரத்தன் டாடா டிரஸ்ட் மற்றும் டோராப்ஜி டாடா அறக்கட்டளையின் கூட்டத்தைத் தொடர்ந்து, டாடா டிரஸ்டின் தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டார். டாடா டிரஸ்ட் என்பது அனைத்து 14 டாடா அறக்கட்டளைகளின் செயல்பாடுகளையும் நிர்வகிக்கும் அமைப்பாகும்.

    எப்போதும் ஊடக வெளிச்சத்தில் இருந்து விலகி இருப்பதை விரும்பும் நபராக நோயல் டாடா அறியப்படுகிறார். இவர் 2014 முதல் ட்ரெண்ட் லிமிடெட் தலைவராக பணியாற்றி வருகிறார்.

    2019 இல் சர் ரத்தன் டாடா அறக்கட்டளையின் குழுவில் நோயல் டாடா சேர்ந்தார். இவர் 2018 இல் டைட்டன் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும், மார்ச் 2022 இல் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் அவர் டாடா குழுவிற்குள் தனது பங்கை மேலும் வலுப்படுத்தினார்.

    ட்ரெண்டிற்குச் செல்வதற்கு முன், நோயல் டாடா 2010 மற்றும் 2021 க்கு இடையில் டாடா இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்திற்கு தலைமை தாங்கினார். அவரது பணியின் போது, நிறுவனத்தின் வருவாய் $500 மில்லியனில் இருந்து $3 பில்லியனாக உயர்ந்தது.

    வோல்டாஸ் லிமிடெட் மற்றும் டாடா ஸ்டீல் லிமிடெட் உள்ளிட்ட டாடா குழுமத்தின் பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் நோயல் டாடா உள்ளார். அவரது மூன்று குழந்தைகள் - நெவில், மாயா மற்றும் லியா - டாடா குடும்பத்துடன் இணைக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களின் அறங்காவலர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    டாடா குழுமத்தை நிறுவிய பல ஆண்டுகளுக்குப் பிறகு, 1892 ஆம் ஆண்டில் நோயல் மற்றும் ரத்தனின் பெரியப்பா ஜம்செட்ஜி டாடா அவர்களால் டாடா டிரஸ்ட்ஸ் அமைக்கப்பட்டது. டாடா அறக்கட்டளைகள் கல்வி, சுகாதாரம் மற்றும் வீட்டுவசதி போன்ற பல்வேறு துறைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
    • டாடா குழுமத்தின் புதிய தலைவர் யார் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86). இவர் கடந்த திங்கட்கிழமை சிகிச்சைக்காக மும்பை பிரீச்கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் வயது முதிர்வு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    உடல்நிலை மோசமான நிலையில் கடந்த 9 ஆம் தேதி நள்ளிரவு ரத்தன் டாடா உயிரிழந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்தது. பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.

    2012 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ரத்தன் டாடா உயிரிழந்ததை அடுத்து, டாடா குழுமத்தின் புதிய தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். டாடா இன்டர்நேஷனல் லிமிட்டெட்-இன் நிர்வாக இயக்குநராக இருந்தவர் நோயல் டாடா. இவர் ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார்.

    • ரத்தன் டாடாவிற்கு எற்கனவே பத்ம விபூஷன், பாரத பூஷன் வழங்கப்பட்டுள்ளது.
    • பாரதத்திற்குரிய ரத்தன்-ஐ (ரத்தன் டாடா) விட பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர்கள் யாரும் இருக்கமுடியாது.- சுஹேல் சேத்

    டாடா குழும தலைவர் ரத்தன் டாடா நேற்றிரவு காலமானார். அவரது உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தொழில் அதிபரும் கட்டுரையாளருமான சுஹேல் சேத், ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

    "இதை நான் சொல்லக்கூடாது, இருந்தாலும் மதிப்பிற்குரிய பிரதமர் மோடி, பாரதத்திற்குரிய ரத்தன்-ஐ (ரத்தன் டாடா) விட பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர்கள் யாரும் இருக்கமுடியாது. தனிப்பட்ட உதாரணத்தால் ஊக்கமளித்து, அவர் தனது பொதுசேவை மூலம் மில்லியன் கணக்கானோருக்கு நம்பிக்கையை அளித்தார். மேலும் ஒரு உண்மையான இந்தியன்... அது விருதை அழகாக்க மட்டுமே செய்யும்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், "ரத்தன் டாடாவின் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவருக்கு சொந்தமாக குடும்பம் இல்லை. இன்னும் ஒவ்வொரு இந்தியனும் அவனது குடும்ப உறுப்பினராக இருந்தான். ஒரு மனிதனுக்காக 1.4 பில்லியன் மக்கள் துக்கம் அனுசரிப்பது அரிது.

    அதுதான் ரத்தன் டாடா. தொடர்ந்து இருக்கும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருது பாரத ரத்னா ஆகும். ரத்தன் டாடா பத்ம விபூஷன், பத்ம பூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.

    • சாந்தனு நாயுடு ரத்தன் டாடா அலுவலகத்தின் பொது மேலாளர் ஆவார்.
    • விலங்குகள் மீதான் அன்பின் மூலம் ரத்தன் டாடாவை 2014-ல் சந்தித்தார் சாந்தனு நாயுடு.

    டாடா குழுமத்தின் மரியாதைக்குரிய தலைவரான ரத்தன் டாடா நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முகேஷ் அம்பானி, அதானி உள்ளிட்ட தொழில் அதிபர்கள் தங்களது துக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

    இந்த நிலையில் ரத்தன் டாடாவின் உதவியாளரான ஷாந்தனு நாயுடு தனது இரங்கல் செய்தியை பகிர்ந்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில் "இந்த நட்பு இப்போது என்னுடன் விட்டுச்சென்ற வெற்றிடத்தை, என் வாழ்நாள் முழுவதும் நிரப்ப முயற்சிப்பேன். துக்கம் என்பது அன்புக்குக் கொடுக்க வேண்டிய விலை. குட்பை, மைடியர் கலங்கரை விளக்கம்" என 30 வயதாக ரத்தன் டாடாவின் அலுவலக பொது மேலாளர் சாந்தனு நாயுடு இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவருடன் இணைந்து எடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார்.

    ரத்தன் டாடா உடனான சாந்தனு நாயுடுவின் சாத்தியமில்லாத நட்பு விலங்குகள் மீதான அவர்களின் அன்பின் மூலம் மலர்ந்தது.

    இருவரும் 2014-ல் சந்தித்தனர். நாயுடு இரவில் தெரு நாய்கள் கார்களால் தாக்கப்படாமல் பாதுகாக்க ரிஃப்ளெக்டிவ் காலர்களை உருவாக்கினார். அவரது முயற்சியால் ஈர்க்கப்பட்ட டாடா சன்ஸ் தலைவர் ரத்தன் டாடா சாந்தனு நாயுடுவை தன்னிடம் பணியாற்ற அழைத்தார்.

    • ரத்தன் டாடாவிற்கு நோயல் டாடா என்ற சகோதரர் (Half-brother) உள்ளார்.
    • நோயல் டாவிற்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

    டாடா குழுமத்தின் தலைவராக இருந்தவர் ரத்தன் டாடா. டாடா குழுமத்தின் மதிப்பை 5 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தியவர்.

    தலைசிறந்த தொழில் அதிபராக இருந்த நிலையில், கருணை உள்ளம் கொண்டவராகவும் திகழ்ந்தார். 86 வயதில் காலமான நிலையில், அவருக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தினால் டாடா சாம்ராஜ்யத்தின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    டாடா குழுமம் சாம்ராஜ்யம் சுமார் 3,800 கோடி ரூபாய் ஆகும். தற்போது என். சந்திரசேகரன் டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் பதவியை வகித்து வருகிறார். ரத்தன் டாடாவின் குடும்பத்தைச் சேர்ந்த பலர் டாடா குழுமத்தில் உள்ளனர். அவர்களில் யாராவது ஒருவர் தலைமை பொறுப்பை ஏற்க வாய்ப்புள்ளது.

    நோயல் டாடாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இவர் ரத்தன் டாடாவின் சகோதரர் (half-brother) ஆவார். இந்த குடும்பப் பிணைப்பு நோயல் டாடாவை டாடா பாரம்பரியத்தை பெறுவதற்கான ஒரு முக்கிய நிலை வகிக்கிறது.

    நோயல் டாடாவிற்கு மாயா, நெவில், லியா என மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்கள் டாடா பாரம்பரியத்தின் சாத்தியமான வாரிசுகளாகக் கருதப்படுகிறார்கள்.

    மாயா டாடா

    34 வயதான மாயா டாடா, டாடா குழுமத்திற்குள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து வருகிறார். பேய்ஸ் பிசினஸ் ஸ்கூல் மற்றும் வார்விக் பல்கலைக்கழகத்தில் படித்த அவர், டாடா வாய்ப்புகள் நிதி மற்றும் டாடா டிஜிட்டல் ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். Tata Neu செயலியை அறிமுகம் செய்வதில் அவர் முக்கியமானவர். இவற்றில் அவரது மூலோபாய புத்திசாலித்தனம் மற்றும் பார்வையை வெளிப்படுத்தினார்.

    நெவில் டாடா

    32 வயதான நெவில் டாடா குடும்ப தொழில்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். டொயோட்டா கிர்லோஸ்கர் குரூப் வம்சாவளியைச் சேர்ந்த மானசி கிர்லோஸ்கரை மணந்த நெவில், ட்ரெண்ட் லிமிடெட்டின் கீழ் உள்ள ஒரு முக்கிய ஹைப்பர் மார்க்கெட் சங்கிலியான ஸ்டார் பஜாருக்கு தலைமை தாங்குகிறார். டாடா குழுமத்திற்குள் வருங்காலத் தலைவராக அவர் இருக்கும் திறனை அவரது தலைமை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

    லியா டாடா

    லியா டாடா, 39 வயதில் மூத்தவர், டாடா குழுமத்தின் விருந்தோம்பல் துறையில் தனது நிபுணத்துவத்தை கொண்டு வருகிறார். ஸ்பெயினின் IE பிசினஸ் பள்ளியில் படித்த லியா, தாஜ் ஹோட்டல் ரிசார்ட்ஸ் மற்றும் அரண்மனைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளார். அவர் இந்தியன் ஹோட்டல் நிறுவனத்தில் செயல்பாடுகளை நிர்வகிக்கிறார்.

    • டாடா குழுமம் 125 மில்லியன் டாலருக்கு விஸ்ட்ரான் நிறுவனத்தை வாங்கியது.
    • ஐபோன் தயாரிப்பதற்கான 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது டாடா குழுமம்.

    டாடா எலாக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் உடன் இணைந்து இந்தியாவில் ஐபோன் தயாரிக்க இருக்கிறது. இதற்காக சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாயில் முதலீடு செய்துள்ளது டாடா குழுமம். தமிழ்நாட்டில் உள்ள ஓசூரில் தொழிற்சாலை தயாராகி வருகிறது.

    இந்த நிலையில் வருகிற நவம்பர் மாதத்தில் இருந்து செல்போன் உற்பத்தி இந்த தொழிற்சாலையில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இங்கு ஐபோன் உருவாக்கப்படும் (Assembly). இதற்காக 250 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 50 ஆயிரம் பேர் வேலைப் பார்க்கும் வகையில் வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. பெரும்பாலும் பெண்கள்தான் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது. பாக்ஸ்கான் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் ஐ-போன் செல்போன்களை உற்பத்தி (Assembly) செய்கிறது. பாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகட்ரான் ஆகிய நிறுவனங்கள் ஐ-போன் தயாரித்து ஏற்றுமதி செய்கிறது. விஸ்ட்ரான் நிறுவனத்தை டாடா குழுமம் 125 மில்லியன் டாலருக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • இந்நிறுவனம் 2 நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொழில்துறையில் முன்னணியில் உள்ளது
    • பாகிஸ்தானின் ஜிடிபி $341 பில்லியன் என ஐஎம்எஃப் மதிப்பிட்டுள்ளது

    1868ல், இந்தியாவில் ஜம்ஷேட்ஜி டாடா (Jamshedji N. Tata) என்பவர் தொடங்கிய நிறுவனம், டாடா குழுமம் (Tata Group).

    2 நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொழில்துறையில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக திகழும் டாடா குழுமத்திற்கு பல்வேறு துறைகளில் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பல வர்த்தகங்கள் உள்ளன.

    சுதந்திர இந்தியாவில் பல தொழில் நிறுவனங்கள் உருவாகியிருந்தாலும், தங்களுக்கென ஒரு நற்பெயரையும் முன்னணி இடத்தையும் டாடா குழுமம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

    கடந்த ஆண்டு, டாடா குழுமத்தின் பல நிறுவனங்கள், லாபகரமான வருவாயை ஈட்டின.

    தற்போது, டாடா குழுமம், சுமார் ரூ.31 லட்சம் கோடி ($365 பில்லியன்) சந்தை மூலதனத்தை வைத்துள்ளது.

    இது இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் உள்நாட்டு மொத்த உற்பத்தியை (Gross Domestic Product) விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) அளித்த மதிப்பீட்டின்படி பாகிஸ்தானின் ஜிடிபி $341 பில்லியன் எனும் அளவில் உள்ளது.


    மேலும் டாடா குழுமத்தின் ஒரு நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) எனும் முன்னணி மென்பொருள் நிறுவனம் மட்டுமே சந்தை மதிப்பில் ரூ.15 லட்சம் கோடி ($170 பில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இது பாகிஸ்தான் பொருளாதாரத்தில் பாதி அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய பங்கு சந்தையிலும், உலகளவிலும் டாடா குழுமத்திற்கு உள்ள வலுவான நிலையை இந்த ஒப்பீடு கோடிட்டு காட்டுவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களிடம் நடத்தப்படும் தொழிலாளர் நலன் மற்றும் பணியிட மகிழ்ச்சி குறித்த ஆய்வுகளில் டாடா குழும நிறுவனங்களின் பெயர்கள் முன்னிலை வகிக்கின்றது.


    2017லிருந்து டாடா குழுமத்தின் தலைவர் (Chairman) பொறுப்பில் உள்ள என். சந்திரசேகரன் (60), தமிழகத்தை சேர்ந்தவர் என்பதும் நாமக்கல் மாவட்ட மோகனூர் தாலுகா அரசு பள்ளியில் பயின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • H125 ரக ஹெலிகாப்டர்-ஐ FAL அசெம்பில் செய்ய இருக்கிறது.
    • வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

    ஏர்பஸ் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனம் டாடா குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் ஹெலிகாப்டர்களை அசெம்பில் செய்யும் மையத்தை கட்டமைக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இரு நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் ஃபைனல் அசெம்ப்லி லைன் (FAL)-இல் இந்தியாவில் ஹெலிகாப்டர்கள் அசெம்பில் செய்யப்பட உள்ளன. அதன்படி ஏர்பஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் H125 ரக ஹெலிகாப்டர் FAL-இல் அசெம்பில் செய்யபட இருக்கிறது.

     


    இந்தியாவில் கட்டமைக்கப்படும் FAL-இல் அசெம்பில் செய்யப்படும் ஹெலிகாப்டர்கள் இந்தியாவிற்குள் போக்குவரத்து பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளன. இதுதவிர, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இந்தியாவில் ஹெலிகாப்டர் உற்பத்தி பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொள்ள இருப்பது இதுவே முதல்முறை ஆகும்.

    டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனம் ஏர்பஸ் ஹெலிகாப்டர்ஸ் உடன் இணைந்து FAL-ஐ கட்டமைக்கிறது. இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பங்கேற்றுள்ள நிலையில், இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    • இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் முடிவு.
    • புதிய ஆலையில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்ற முடியும்.

    இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் கட்டமைக்க டாடா குழுமம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்று ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்திருக்கும் நிலையில், டாடா குழுமம் அதற்கான பணிகளை துரிதப்படுத்தும் என தெரிகிறது.

    இதற்காக தமிழ்நாட்டில் டாடா குழுமம் அமைக்கும் உற்பத்தி ஆலையில் கிட்டத்தட்ட 20 அசெம்ப்லி லைன்கள் இருக்கும் என்றும், இதில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்ற முடியும் என்றும் கூறப்படுகிறது. இது நாட்டிலேயே மிகப் பெரிய ஐபோன் உற்பத்தி ஆலையாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. அடுத்த 12 முதல் 18 மாதங்களில் இந்த ஆலையில் பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

     


    டாடா குழுமத்துடன் இணைந்து உள்நாட்டில் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்ற ஆப்பிள் முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில், புதிய ஆலை உருவாக்கப்பட்டு வருகிறது. சீனாவை தவிர்த்து இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்த நினைக்கும் ஆப்பிள் திட்டத்தை பிரதிபலிக்கும் வகையில், டாடா குழுமம் கர்நாடகா மாநிலத்தில் உள்ள விஸ்ட்ரன் ஆலையை கைப்பற்றி இருக்கிறது.

    அடுத்த இரண்டில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியாவில் மட்டும் 50 மில்லியன் ஐபோன்களை உற்பத்தி செய்ய வேண்டும் என ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாகவே டாடா குழுமம் ஐபோன் உற்பத்தி பணிகளை விரிவுப்படுத்தும் வகையில், புதிய ஆலையை கட்டமைத்து வருகிறது. 

    • டாடா நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை உற்பத்தி செய்தது.
    • ஓசூரில் உள்ள உற்பத்தி ஆலை 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

    விஸ்ட்ரன் ஐபோன் உற்பத்தி ஆலையை டாடா குழுமம் முழுமையாக கையகப்படுத்தி, ஐபோன்களை உற்பத்தி செய்யும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை பெற்றது. முன்னதாக டாடா நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை உற்பத்தி செய்து கொடுத்தது.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டாடா நிறுவனம் ஓசூரில் உள்ள ஆலையில் உற்பத்தியை இருமடங்கு அதிகப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஐபோன் உற்பத்திக்காக ஆப்பிள் நிறுவனம் டாடா குழுமத்தை அதிகளவு நம்புவதாக தெரிகிறது.

     

    இங்கு உற்பத்தி செய்யப்படும் யூனிட்கள் சர்வதேச சந்தையிலும் ஏற்றுமதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது ஓசூரில் உள்ள உற்பத்தி ஆலை 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு, அதில் 15 ஆயிரம் பேர் வரை பணியாற்றி வருகின்றனர்.

    முதற்கட்டமாக ஐபோன்களின் குறிப்பிட்ட சில பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த பாகங்கள் ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரன் ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வினியோகம் செய்யப்பட உள்ளன. அடுத்த 12 முதல் 18 மாதங்களில் ஓசூர் ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டு, உற்பத்தி தற்போது இருப்பதை விட இருமடங்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

     

    இதன் மூலம் விரிவாக்கம் செய்யப்பட்ட ஆலையில் 28 ஆயிரம் பேர் வரை பணியாற்ற முடியும். இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்துவது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் டாடா குழுமத்திற்கு இலக்கு நிர்ணயித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • சர்வதேச சந்தைக்கான ஐபோன்களை டாடா குழுமம் இந்தியாவில் உற்பத்தி செய்ய இருக்கிறது.
    • விஸ்ட்ரன் நிறுவனத்தை கைப்பற்றியதற்கு டாடா குழுமத்திற்கு வாழ்த்துக்கள்.

    டாடா குழுமம் உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கான ஐபோன்களை இந்தியாவில் வைத்து உற்பத்தி செய்ய இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப துறை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்து உள்ளார். மேலும் இதே தகவலை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்திலும் வெளியிட்டு உள்ளார்.

    அந்த பதிவில், "பிரதமர் நரேந்திர மோடியின் PLI திட்டம் மூலம் இந்தியா ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு நம்பத்தகுந்த மற்றும் மிகமுக்கிய தளமாக உருவெடுத்து இருக்கிறது. இன்னும் கிட்டத்தட்ட இரண்டறை ஆண்டுகளில், உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைக்கான ஐபோன்களை டாடா குழுமம் இந்தியாவில் வைத்து உற்பத்தி செய்ய இருக்கிறது."

    "விஸ்ட்ரன் நிறுவனத்தை கைப்பற்றியதற்கு டாடா குழுமத்திற்கு வாழ்த்துகள். இதுவரை வழங்கிய பங்களிப்புகள் அனைத்திற்கு விஸ்ட்ரன் நிறுவனத்திற்கும் நன்றி. இந்தியாவில் இருந்து இந்திய நிறுவனங்களை வைத்து சர்வதேச விநியோகத்தை விரிவுப்படுத்த இருக்கும் ஆப்பிள் சரியான முடிவை எடுத்து இருக்கிறது."

    "இந்தியாவை சக்திவாய்ந்த மின்னணு தளமாக உருவாக்க நினைக்கும் பிரதமர் மோடியின் இலக்கை அடைய உதவுவதற்கும், இந்தியாவில் தங்களது சாதனங்களை நம்பிக்கையாக உற்பத்தி செய்ய முன்வரும் சர்வதேச மின்னணு நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச இந்திய மின்னணு நிறுவனங்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் முழுமையான ஆதரவை வழங்கும்," என்று தெரிவித்து இருக்கிறார்.

    ×