என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாலையோர கடை"
- கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர்.
- இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் விளையாடியவர்.
கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர். இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் விளையாடியவர். கிரிக்கெட்டில் இவர் படைத்த சாதனைகளை பற்றி பேசிக்கொண்டே போகலாம்.
ஒருநாள் போட்டிகளில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் 15 ஆயிரத்திற்கும் அதிக ரன்களை குவித்து தள்ளிய பெருமையும் இவரையே சாரும். தனது மனைவி அஞ்சலியை விட 6 வயது இளையவரான சச்சின் டெண்டுல்கர், 22 வயதிலேயே திருமணம் செய்துகொண்டார். இருவருக்கு சாரா டெண்டுல்கர் மற்றும் அர்ஜுன் டெண்டுல்கர் என்று இரு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் சமீப காலமாக குடும்பத்துடன் நேரத்தை செல்விடும் சச்சின் டெண்டுல்கர், குடுப்பத்துடன் சுற்றுலா செல்வது பொதுவெளியில் கிரிக்கெட் விளையாடுவது என சுற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளிநாட்டில் உள்ளார். அங்கு உள்ள சாலையோர கடையில் சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டு, மும்பைக்காரன் எங்கு சென்றாலும் அவனது சாலையோர உணவை விரும்புவான் என பதிவிட்டுள்ளார்.
- சாலையை ஆக்கிரமித்து கடைகளை நடத்துவதால் விபத்துகள் ஏற்படுவது மட்டுமின்றி, பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகிறாா்கள்.
- ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை வளாகத்தில் காய்கறி, மளிகைப் பொருள்கள் விற்க அனுமதி இல்லை,
அவிநாசி
அவிநாசி நகரப்பகுதியில் கடைகள், வணிக நிறுவனங்கள் முன் அதிக அளவில் சாலையோர கடைகள் செயல்பட்டு வருகின்றன. சாலையை ஆக்கிரமித்து கடைகளை நடத்துவதால் விபத்துகள் ஏற்படுவது மட்டுமின்றி, பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகிறாா்கள். ஆகவே வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்த வேண்டும் என வியாபாரிகள் சங்கத்தினா் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் இந்துமதி, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், காவல் ஆய்வாளா்கள் ராஜவேல், சக்திவேல்(போக்குவரத்து), நெடுஞ்சாலைத்துறை அலுவலா் சுப்பிரமணியம், பேரூராட்சி சுகாதார அலுவலா் கருப்புசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வியாபாரிகள், வணிகா்கள், தொழிற்சங்கத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும் சாலையோர கடைகள் அவிநாசி வாரச்சந்தை வளாகத்துக்கு மாற்றம் செய்யப்படும். அதேபோல ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை வளாகத்தில் காய்கறி, மளிகைப் பொருள்கள் விற்க அனுமதி இல்லை, தள்ளுவண்டியில் விற்பனை செய்யும், உணவுப் பொருள்கள் சாலையோரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அனுமதி பெற்று நடத்த வேண்டும். வாரச்சந்தை வளாகத்தில் மாற்றிக் கொடுக்கப்படும் கடைகளுக்கு தற்போது பேரூராட்சி மூலம் வசூலிக்கப்படும் கட்டணமே வசூலிக்கப்படும். உழவா் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டும் வேளாண்மை அலுவலக வளாகத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்படும்.
ஒலிபெருக்கி மூலம் விற்பனை செய்யும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. தற்காலிகமாக அடையாள அட்டை அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து சாலையோர வியாபாரிகள் பெற்றுக் கொள்ளலாம்.
சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தக் குழு அமைக்கப்படும். மேலும், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் அக்டோபா் 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பேரூராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.
- சாலையோர வியாபாரிகளுக்கு வட்டி இல்லா கடன் திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கடன் வழங்குவதற்கான மனுக்கள் கொடுக்கப்பட்டன.
- குளறுபடிகளை சரி செய்து தகுதி உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு காலதாமதம் இன்றி துரிதமாக கடன் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் பொது தொழிலாளர் அமைப்பின் பொது செயலாளர் ஈ.பி.சரவணன் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வட்டி இல்லா கடன் திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கடன் வழங்குவதற்கான மனுக்கள் பெறப்பட்டதில் பல குளறுபடிகள் உள்ளதாக வியாபாரிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே சாலையோர வியாபாரிகள் கடன் பெற பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆவணங்களையும், விளக்கத்தையும், மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படையாக கூறி குறைகளை நிவர்த்தி செய்து குளறுபடிகளை சரி செய்து தகுதி உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு காலதாமதம் இன்றி துரிதமாக கடன் வழங்குவதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- குடிநீர் பிரச்சனையை சரிசெய்ய 6 மாதமாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.
- குப்பை எடுப்பவர்களை அந்த பணியைவிட்டு வேறு வேலைக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.
அவினாசி :
அவினாசி பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தலைமையில் நடந்தது.துணைத்தலைவர் மோகன், செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மன்ற பொருள்படிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து வார்டு உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர்.
கோபாலகிருஷ்ணன் (16-வது வார்டு):- கடந்த ஒரு ஆண்டாக சந்தை வசூல் யார் செய்கிறார்கள். இதுவரை எவ்வளவு தொகை உள்ளது. அவினாசி நகரில் புது பஸ் நிலையம் முதல் செங்காடு திடல் வரை ரோட்டோர கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த 3 மாதத்தில் 25 விபத்துகள் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் கை கால்கள் ஊனமடைகின்றனர். இதற்கு பேரூராட்சி நிர்வாகத்துடன் வருவாய்துறை, காவல்துறை, நெடுஞ்சாலைதுறை ஆகியவை இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தலைவர்:- ரோட்டோர கடைக்காரர்களிடம் சொன்னால் எங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கிறது.நாங்கள் இதை வைத்துதான் ஜீவனம் செய்கிறோம் என்கின்றனர்.
திருமுருகநாதன்(11-வது வார்டு):- காமராஜ் வீதியில் குடிநீர் பிரச்சனையை சரிசெய்ய 6 மாதமாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. கடந்த 2 வாரத்திற்குள் மட்டும்அவினாசியில் 20 ரோட்டோர கடைகள் அதிகரித்துள்ளது. ரோட்டோர கடைகளால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. ரோட்டோர ஆக்ரமிப்பு கடைகள்குறித்து ஒவ்வொரு கூட்டத்திலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எனவே இதை ஒழுங்குபடுத்த வேண்டும். துப்புரவு பணியாளர்கள் குப்பை எடுக்கும் நேரம் என்ன ? வார்டு முழுவதும் சுத்தம் செய்வதில்லை. குப்பை எடுப்பவர்களை அந்த பணியைவிட்டு வேறு வேலைக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
கருணாம்பாள்( 8-வது வார்டு):- வள்ளுவர் வீதியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் குடிமகன்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அங்கு மது அருந்தாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஸ்ரீதேவி( 18 -வது வார்டு):- அவினாசி சந்தைபேட்டை பகுதியில் குடியிருப்புகள் நிறைந்துள்ளது. இங்கு மத்தியில் உள்ள குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அதற்கு உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும். அவினாசிலிங்கம்பாளையம் செல்லும் ரோட்டில் 2, 3, 4, 5- வது வீதிகளில் சாக்கடை கால்வாய் மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் சாக்கடை நீர் குட்டை போல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அங்கு சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும் என்றார்
தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி:- நான் பேரூராட்சி தலைவராகிய நாள் முதல் தூய்மை இந்தியா திட்டம் 2.0,கலைஞர் நகர் புற சாலைகள் மேம்படுத்த திட்டம், நமக்கு நாமே திட்டம், இலங்கை தமிழர் வாழ்க்கை தர மேம்பாட்டு நிதி, நபார்டு மூலதன மானிய திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி,சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ,மாநில கட்டமைப்புவளர்ச்சி நிதி, சிறுகனிம வருவாய் மானியம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், தேசியநகர்ப்புற வாழ்வாதார திட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் கட்டமைப்பு திட்டம் ஆகிய திட்டங்களின் வாயிலாக 13 கோடியே 23 லட்சத்திற்கும், பேரூராட்சி பகுதியில் ஒரு கோடியே 45 லட்சத்திற்கும் என மொத்தம் 14 கோடியே 68 லட்சத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பேரூராட்சியின் 13.3.2023பொது நிதி இருப்பு விவரம் 3 கோடியே 54 லட்சத்து 18 ஆயிரத்து 342 ரூபாயாக இருந்ததை தற்போது நாளது தேதியில் 48 லட்சத்து 61 ஆயிரத்து 509 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பேரூராட்சியில் தேவையற்ற செலவுகளை குறைத்து பேரூராட்சி நிதி நிலையை பெருக்கியுள்ளோம். பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தும் பட்டியலில் தமிழகத்திலேயே அவினாசி பேரூராட்சி முதல் இடத்தில் உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன் என்றார்.
- திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 9-ந் தேதி நடைபெறுகிறது.
- பழைய வழக்குகள் தொடர்பாக போலீசார் வியாபாரிகளை தொந்தரவு செய்யக்கூடாது.
அனுப்பர்பாளையம் :
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 9-ந் தேதி (வியாழக்கிழமை) திருப்பூர் பிருந்தாவன் ஹோட்டலில் நடைபெறுகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அடுத்த மாதம் 9-ந் தேதி திருப்பூரில் நடைபெறும் மாவட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் மாநில தலைவர் விக்கிரமராஜாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்றும், அந்த கூட்டத்தையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து இணைப்பு சங்கமாக மாற்றுவது.
மே 5-ந் தேதி ஈரோட்டில் நடைபெறும் வணிகர் உரிமை முழக்க மாநாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகர்களும், வியாபாரிகளும் கடைகளை அடைத்து, அந்த மாநாட்டில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.பெருகி வரும் சாலையோர வியாபாரிகளால் அனைத்து கடை வியாபாரிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அனைத்து இடங்களிலும் சாலையோர கடைகள் அமைப்பதை தவிர்த்து அதற்கென ஒரு இடத்தை மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்க வேண்டும்.
புகையிலை பொருட்கள் விற்பனையில் பழைய வழக்குகள் தொடர்பாக போலீசார் வியாபாரிகளை தொந்தரவு செய்யக்கூடாது. திருப்பூர் மாநகரில் சாலைகள் மீண்டும் மீண்டும் தோண்டப்படுவதால் கடைகளில் வியாபாரம் பாதிக்கிறது. எனவே சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்