search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவன்கோவில்"

    • அகத்தியரால் வழிபடப்பட்டவர் ஆதலால் அகத்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
    • ஈரோட்டில் இருந்து 15 கி.மீ தொலைவில் தீவு அமைந்துள்ளது.

    கரைபுரண்டோடும் காவிரி, அதன் நடுவே பிரணவ உருவாய் திகழும் சிவாலயம். இங்ஙனம் ஆற்றின் நடுவில் கோவில் கொண்டிருப்பதால் நட்டாற்றீஸ்வரர் என்றும், அகத்தியரால் வழிபடப்பட்டவர் ஆதலால் அகத்தீஸ்வரர் என்றும் திருப்பெயர்களை ஏற்றுத்திகழ்கிறார் சிவபிரான்.

    ஈரோட்டில் அமைந்துள்ள இந்த தீவின் பெயர் நட்டாற்றீஸ்வரர் தீவு. ஈரோட்டில் இருந்து 15 கி.மீ தொலைவில் இந்த தீவு அமைந்துள்ளது. கடல் போல் காட்சியளிக்கும் காவிரி ஆற்றின் நீருக்கு நடுவே அமைந்துள்ள இந்த குட்டி தீவின் நடுவே சிவன் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் உள்ள சிவபெருமான் நட்டாற்றீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இந்த கோவில் கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. 10-ம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த கோவிலுக்கு முதலில் பரிசல் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது கரையில் இருந்து கோயிலுக்கு செல்ல பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் எளிதில் செல்ல முடியும்.

    கோயிலின் வரலாறு

    இந்த கோவில் குறித்து பழங்கால புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி அகத்திய முனிவர் தனது பாவங்களைப் போக்க ஒரு சிவலிங்கத்தை உருவாக்கினாராம். மணலால் செய்யப்பட்ட இந்த சிவலிங்கம் காவேரி ஆற்றின் மையத்தில் ஒரு குன்றின் மீது வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அகத்தியர் தனது ருத்ராட்ச மாலையை மலையை சுற்றி வைத்துவிட்டு தனது தவத்தை தொடங்கினார்.

    சித்திரை முதல் நாள் அவர் எந்த தொந்தரவும் இல்லாமல் தவம் செய்துள்ளார். ஆனால் தமிழ் புத்தாண்டு அன்று சில இடையூறுகளால் கண்விழித்த அவர் தனது தவத்தை முடித்துக் கொண்டாராம். பின்னர் அவர் தனது ருத்ராட்ச மாலையை லிங்கத்தில் இருந்து அகற்ற முயன்றார். பின்னர் சிவபெருமானின் தெய்வீக குரலை கேட்டாரம். அப்போது சிவபெருமான் தனது லிங்கத்தைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், அது நிரந்தரமாக அங்கேயே இருக்கும் என்று கூறினாராம்.

    அகத்தியரையும், அங்கு வந்த அனைத்து பக்தர்களையும் ஆசீர்வதிக்க தோன்றியதாகவும் கூறினாராம். எனவே, இந்த புராணத்தின் படி சிவபெருமான் ஈரோடு நகரில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். பின்னர் அகத்திய முனிவர் தனது எஞ்சிய பணியை முடிக்க தெற்கில் பல்வேறு இடங்களுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    ஏறக்குறைய 3000 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் நட்டாற்றீஸ்வரர் கோவிலைக் கட்டி, கோவிலில் சிவ லிங்கத்தை நிறுவினர். இங்குள்ள லிங்கத்திற்கு அகஸ்தீஸ்வரர் என்று பெயர். இந்த கோவிலுக்குள் அமைந்துள்ள அத்தி மரத்தை பக்தர்கள் காணலாம். இது 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என நம்பப்படுகிறது. தமிழ் புத்தாண்டு தினத்தன்று ஈரோடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

    எப்படி செல்வது?

    ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து கரூர் செல்லும் பேருந்தில் ஏறி சாவடிப்பாளையம் என்ற ஊரில் இறங்க வேண்டும். அங்கிருந்து ஆட்டோ மூலம் 2 கி.மீ தொலைவில் உள்ள இந்த கோவிலுக்கு செல்லலாம். மேலும் காவிரி ஆற்றங்கரையில் இருந்தும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மற்ற ஆற்றங்கரைகளில் இருந்தும் பரிசல் சேவைகள் இக்கோயிலுக்குச் செல்லலாம். எனவே வாய்ப்புள்ளவர்கள் இந்த அழகான தீவு கோவிலுக்கு செல்வது நிச்சயம் நல்ல அனுபவத்தை தரும்.

    • சேவூர் வாழ் இறைவனை பூஜித்தால் அரச பதவிகள் தேடி வரும் என்பதும் உண்மை.
    • இத்திருத்தலம் சுமார் 7000 ஆண்டுகள் பழமை வாய்த்த திருத்தலம் என்று கருதப்படுகிறது.

    கோ" என்றால் பசு, அதே போல் "சே" என்றால் மாடு என்று பொருள். அதனால் சேவூரில் ஆட்சி செய்யும் இறைவனை ஆன்மிக சான்றோர் பலரும்

    "மாட்டூர் அரவா" என்றே போற்றுகின்றனர். சேவூரின் புராண பெயர் ரிஷாபபுரி(மாட்டூர்) அதாவது மாடும் புலியும் ஒன்றாக விளையாடும் புண்ணிய பூமி இது. மேலும் சேவூர் கொங்கு நாட்டின் தலைநகர் என்பதை இத்திருக்கோவில் வரலாறு மூலம் அறியலாம்.

    சோழர்களின் புகழ்பெற்ற அரசன் "கரிகாலன்" தான் இழந்த சோழநாட்டை சேவூர் வாழ் இறைவனை பூஜித்த பின்பே மீண்டும் சோழநாட்டை(கோனாட்டை) கைப்பற்றி அரசன் ஆனான். அதேபோல் கிஸ்கிந்தாவை இழந்த வாலியும் சேவூர் வாழ் இறைவனை பூஜித்த பின்பே மீண்டும் கிஸ்கிந்தாவை கைப்பற்றி அரசன் ஆனான். ஆகையால் ஆட்சி கட்டில் இருபவர்களும் ஆட்சியை கைப்பற்ற நினைப்பவர்களும் சேவூர் வாழ் இறைவனை பூஜித்தால் அரச பதவிகள் தேடி வரும் என்பதும் உண்மை.

    இராமாயணம் நடந்த காலம் ஏறத்தாழ 7000 ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்கலாம் என்றும் கிமு 3 ஆம் நூற்றாண்டு 4 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட பகுதியிலும் நடந்திருக்கலாம் என்றும் பல கருத்துகள் உள்ளன. ஆகையால் இத்திருத்தலம் சுமார் 7000 ஆண்டுகள் பழமை வாய்த்த திருத்தலம் என்று கருதப்படுகிறது.

    வாலியும், சுக்ரீவனும் அண்ணன் தம்பிகள், கிஸ்கிந்தா பகுதியை ஆண்டு வந்த வாலி மிகவும் பலசாலி, வாலி இராவணனை எக்காலத்திலும் வென்றவன். இராவணனோ எமனை வென்றவன். இராவணனை வென்றவர்கள் இரண்டே இரண்டு பேர் ஒருவன் கார்த்தியவீயர்ஜுன், இன்னொருவன் வாலி. மாயாவி ஏன்ற அசுரன் கிஸ்கிந்தா பகுதி மக்களை துன்புறுத்தி வந்தான். அவனை அழிக்க முடிவு செய்த வாலி அவனிடம் போருக்கு தன் தம்பியுடன் சென்றான்.

    அவனை இருவரும் துரத்தி சென்ற போது வாலியின் பலத்தை கண்டு அஞ்சி ஓடிய அரக்கன் ஒரு நீண்ட குகைக்குள் சென்று புகுந்துகொண்டான். சுக்ரீவனை விட வாலி வலிமையாலும் வீரத்திலும் சிறந்தவன் என்பதால் வாலி தன் தம்பி சுக்ரீவனை பார்த்து "தம்பி வேறு எந்த அரக்கனும் உள்ளே நுழையாதபடி நீ இங்கே வாசல் முன்பு நின்று பார்த்துக்கொள்" என்று கூறி விட்டு வாலி உள்ளே சென்று மாயாவியுடன் போரிட்டான். ஒரு ஆண்டு வரை சண்டை நடக்கிறது, அவர்களின் இரத்தம் குகை வாயில் வரை வந்து விட்டது, இதை பார்த்த சுக்ரீவன் வாலி இறந்திருக்கக் கூடும் என்று நினைத்து, மாயாவி தன்னையும் கொன்று விடுவான் என்று எண்ணிய சுக்ரீவன் கோபத்தில் அவசர அவசரமாக குகையை மூடி விட்டு கிஸ்கிந்தா திரும்பி சென்று விட்டான்.

    வாலி மாயாவியை கொன்று விட்டதன் காரணமாக வாலிக்கு பிரம்மஹத்தி தோஷம் எற்பட்டது. வெளிய வந்த வாலி அடைக்கப்பட்ட கல்லை பார்த்து அதிர்ச்சி அடைந்தான், ஆனால் அவன் மிகுந்த பலசாலி என்பதால் கல்லை நகர்த்திவிட்டு வெளியே வந்தான். அவன் கிஸ்கிந்தா செல்லும் முன்பு அவனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று எண்ணினான். அப்போது வாலி வசிஷ்ட முனிவரிடம் சென்று வணங்கி தனக்கு எற்பட தோஷத்தை நிவர்த்தி செய்யுமாறு வேண்டினான். அதற்கு வசிஷ்டர் நீ இந்த வனத்தின் வழியாக செல் அங்கே ஒரு கடம்ப வனம் வரும் அதில் எந்த இடத்தில் மாடும் புலியும் ஒன்றாக விளையாடுகிறதோ அந்த இடம் தெய்வ தன்மை நிறைந்த இடம் ஆகும் அங்கு ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் உனது தோஷம் அனைத்தும் நீங்கும் என்று அருளினார்.

    அது போல வலி இங்கு வரும்பொழுது மாட்டின் முதுகின் மேல் புலி விளையாடி கொண்டு இருப்பதை பார்த்து இது இவ்வளவு புண்ணிய பூமியா என்று மிகவும் ஆச்சரியம் அடைந்தான். அதன்பின், இங்கு ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்து தனது பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டான், அதன் பிறகு வசிஷ்டரும் நாரதரும் நமது புண்ணிய பூமிக்கு வந்து வாலி நதி என்ற தீர்த்ததை உண்டு பண்ணி வைத்தனர். புலியும் மாடும் ஒன்றாக விளையாடியதால் இது ரிஷாபபுரி என்று போற்றப்பட்டும் என்றும் உபதேசம் செய்தனர். அவ்வாறு வாலினால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடமே நமது திருத்தலம் ஆகும். ஆகையால் இத்திருத்தலத்தின் மூலவர் வாலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

    மேலும் இப்பகுதில் கபாலிக சைவ வழிபாட்டு முறை வழக்கத்திலிருந்த காரணத்தினால் இத்தலத்தின் மூலவரை கபாலிஸ்வரர் என்றும் அழைக்கபட்டார். அதுமட்டுமில்லாமல் இத்தலம் 7000 ஆண்டுகள் பழமையானது என்பதை விளக்கும் வண்ணம் இத்தலத்தின் முந்தைய அமைப்பு ஆவுடையராக இருந்தது. அதாவது 5000 ஆண்டுகளுக்கு முன்பு வரை அம்மனுக்கு என்று தனி சன்னதிகள் கிடையாது, சிவனையும் பார்வதியையும் லிங்கம் மற்றும் ஆவுடை என்ற ஒரே அமைப்பில் வழிபட்டு வந்தனர். இத்திருத்தலம் திருப்பணி செய்யும் முன்பு இந்த அமைப்பிலேயே இருந்த காரணத்தினால் இத்திருத்தலம் 7000 ஆண்டுகள் பழமையானது என்பதை அறியலாம்.

    • சங்கர ராமேஸ்வரர் கோவிலில் 216 சிவலிங்க பூஜை நடைபெற்றது.
    • விழாவில் பரத நாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றன.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் புகழ் பெற்ற பழமையான சங்கர ராமேஸ்வரர் சிவன்கோவில் அமைந்துள்ளது. சனிப்பிர தோஷம் சிவராத்திரி இரு நிகழ்வுகள் ஓரே நாளில் வந்ததை யொட்டி சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடும், சிவராத்திரியை முன்னிட்டும் 216 சிவலிங்க பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து சிவராத்திரி விழாவில் நான்கு கால சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஒம் நமசிவாய எழுதினர். மேலும் கோவில் கலையரங்குகளில் நாதஸ்வர கச்சேரி, பரத நாட்டியம், மாறுவேட போட்டி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடை பெற்றன.

    கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ஏற்பாடுகளை கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம்பட்டர் தலைமையில் நிர்வாக செயல் அலுவலர் தமிழ்செல்வி, அரசு துறை அதிகாரி இசக்கியப்பன், பிரதோஷ கமிட்டி தலைவர் ஆறுமுகம், முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்குமார், கந்தசாமி, ராதாகிருஷ்ணன், கோவில் நிர்வாகத்தை சார்ந்த நெல்லையப்பன், கல்யாணி, செல்வ மாரி யப்பன், கணக்கர் சுப்பையா உள்ளிட்டோர் செய்திருந்தனர். 

    ×