search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளைஞர் பலி"

    • வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் படிக்கட்டில் அமர்ந்தபடி பயணம் செய்துள்ளார்.
    • நடைமேடையில் விழுந்த வேகத்தில் சுமார் 150 மீட்டர் இழுத்து செல்லப்பட்டார்.

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில், படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த இளைஞர் தவறி விழுந்து ரெயிலில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

    கடலூரைச் சேர்ந்த பாலமுருகன் (24) என்பவர், வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் படிக்கட்டில் அமர்ந்தபடி பயணம் செய்துள்ளார்.

    அப்போது, சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் வேகமாக சென்றுக்கொண்டிருந்தபோது, பாலமுருகன் தவறி விழுந்துள்ளார்.

    நடைமேடையில் விழுந்த வேகத்தில் சுமார் 150 மீட்டர் இழுத்து செல்லப்பட்ட பாலமுருகன் இறுதியில் ரெயிலுக்கு அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவத்தின் அதிரவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

    • பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது.
    • விபத்து குறித்து பரமக்குடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே செல்போன் வெடித்து இளைஞர் உயிரிழந்துள்ளார்.

    இளைஞர் ராஜா, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது.

    செல்போன் திடீரென வெடித்து சிதறியதில், இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி, கீழே விழுந்து இளைஞர் உயிரிழந்துள்ளார்.

    இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த நபர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதைதொடர்ந்து, விபத்து குறித்து பரமக்குடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணிராஜ் (வயது 19). இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது
    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மணிராஜ் பரிதாபமாக இறந்தார்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை விருத்தாச்சலம் ரோடு உ.கீரனூரில் வசித்து வருபவர் மணிராஜ் (வயது 19). இவர் செங்குறிச்சி சுங்கச்சாவடி பால் பண்ணை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மணிராஜ், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மணிராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த தகவல் அறிந்து உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகிறார்கள்.

    • எருது விடும் விழாவை அப்பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற இளைஞர் என்பவர் பார்த்து கொண்டிருந்தார்.
    • சீறிப்பாய்ந்து வந்த ஒரு காளை எதிர்பாராதவிதமாக மஞ்சு மீது பாய்ந்து முட்டி தள்ளி தூக்கியது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள ஆவலப்பள்ளியில் எருது விடும் விழா நடந்தது. இந்த விழாவை காண ஏராளமானோர் குவிந்து இருந்தனர். இந்த விழாவில் காளைகள் கூட்டத்தில் புகாதவாறு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    இந்த எருது விடும் விழாவை அப்பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற இளைஞர் என்பவர் பார்த்து கொண்டிருந்தார்.

    அப்போது சீறிப்பாய்ந்து வந்த ஒரு காளை எதிர்பாராதவிதமாக மஞ்சு மீது பாய்ந்து முட்டி தள்ளி தூக்கியது. இதில் மஞ்சு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும் 3 பேரை காளை முட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    ×