search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரி சஸ்பெண்டு"

    • போதைப்பொருள் வழக்கில் சுங்க இலாகாவினரால் கைது செய்யப்பட்டார்.
    • 72 நாட்கள் சிறையில் இருந்த நிலையில் ஷீலா மீது சுமத்தப்பட்டது போலியான வழக்கு என தெரியவந்துள்ளது

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் அழகுநிலையம் நடத்தி வருபவர் ஷீலா. இவர் போதைப்பொருள் வழக்கில் சுங்க இலாகாவினரால் கைது செய்யப்பட்டார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்தார். இருப்பினும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஷீலா 72 நாட்கள் சிறையில் இருந்த நிலையில், அவர் மீது சுமத்தப்பட்டது போலியான வழக்கு என தெரியவந்துள்ளது. சுங்கத்துறை இன்ஸ்பெக்டர் சதீசன், போலி போதைப் பொருள் வழக்கில் ஷீலாவை சிக்க வைத்திருப்பது, சுங்க இலாகா கமிஷனரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சதீசன், சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட ஷீலா, தன் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டியும், பொய் புகார் கூறியவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கைது நடவடிக்கையால், தான் கடன் வாங்கி தொடங்கிய அழகு நிலையத்தை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • செல்போனில் சக பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசி தொல்லை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் லோகநாதனை அதிரடியாக சஸ்பெண் செய்த உத்தரவிட்டார்.

    வேலூர்:

    பெண் ஊழியரிடம் செல்போனில் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்த செய்த துணை வட்டார வளர்ச்சி அலுவலரை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில்துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் என்பவர் நீண்ட நாட்களாக செல்போனில் சக பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசி தொல்லை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த வாரமும் அவரது தொல்லை அதிகரித்தது. இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் பெண் ஊழியர் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஆர்த்தி விசாரணை மேற்கொண்டார்.

    இதையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதனை அதிரடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    வேலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண் ஊழியர்களிடம் தவறாக நடக்கும் அதிகாரிகள், சகஅலுவலர்கள் மீது புகார்கள் வந்தவுடன் உரிய நடவடிக்கைகள் உட னே எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த டிசம்பர் மாதம் கே.வி. குப்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண் ஊழியரிடம் போதையில் சென்று சீண்டலில் ஈடுபட்ட பி.டி.ஓ. கோபி என்பவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட் டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×