search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிக்கெட் கவுண்டர்"

    • சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அதிநவீன வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றப்பட உள்ளது.
    • புறநகர் ரெயில் டிக்கெட் கவுண்டர்கள் தற்போது தற்காலிமாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் ரூ.734.91 கோடி மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றப்பட உள்ளது. இதற்கான மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

    இதையொட்டி எழும்பூர் வடக்கு பகுதியில் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்த புறநகர் ரெயில் டிக்கெட் கவுண்டர்கள் தற்போது தற்காலிமாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையையொட்டியுள்ள மணியம்மை சிலை அருகில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்தையொட்டி இந்த டிக்கெட் கவுண்டர்கள் இன்று முதல் இயங்கி வருகிறது. 



    • பல்வேறு காரணங்களால் கவுண்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது.
    • ஒரு பக்தர் ரூ.10 ஆயிரத்து 500 கட்டணத்தில், ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

    திருப்பதி:

    திருப்பதி விமான நிலையம் வந்து ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள், தாங்கள் விமானத்தில் வந்ததற்கான ஆவணங்களை சமர்ப்பித்து, தேவஸ்தானத்தின் ஸ்ரீ வாணி அறக்கட்டளைக்கு ரூ. 10 ஆயிரம் நன்கொடை மற்றும் ரூ. 500 கட்டணம் செலுத்தி, 'விஐபி பிரேக்' தரிசன டிக்கெட் பெற்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.

    இதன் மூலம், ஒரு பக்தர் ரூ.10 ஆயிரத்து 500 கட்டணத்தில், ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த கவுண்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது.

    இந்நிலையில், பக்தர்கள் வசதிக்காக திருப்பதி விமான நிலையத்தில் மீண்டும் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் கவுண்டர், இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது.

    • ரெயில் நிலையத்தில் 8 டிக்கெட் கவுண்டரில் தற்பொழுது 3 கவுண்டர்களில் மட்டுமே டிக்கெட்கள் வழங்குகின்றனர்
    • டிக்கெட் கவுண்டர்களில் வடமாநில ஊழியர்கள் பணியில் இருப்பதால் அவர்களுக்கு தமிழ் தெரிவதில்லை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூர், கோவை, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    ரெயில் நிலையத்தில் 8 டிக்கெட் கவுண்டர்கள் உள்ளது. தற்பொழுது 3 கவுண்டர்களில் மட்டுமே டிக்கெட்கள் வழங்குவது நடைமுறையில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டிக்கெட் கவுண்டரில் வட மாநில ஊழியர் ஒருவர் பணியில் இருந்தார்.

    அப்போது டிக்கெட் எடுக்க வந்த பயணி ஒருவரின் சந்தேகங்களுக்கு பணியில் இருந்த வட மாநில ஊழியர் அலட்சியமாக பதில் கூறியதாக தெரிகிறது. இதனால் பயணிகளுக்கும் வடமாநில ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதை அங்கிருந்த சக பயணிகள் வீடியோவில் பதிவு செய்தனர். தற்பொ ழுது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைர லாக பரவி வருகிறது. நடந்த சம்பவம் குறித்து ரெயில் பயணிகள் ெரயில்வே அதிகாரியிடமும் நாகர்கோவில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசில் புகார் செய்துள்ளனர்.

    புகாரின் பேரில் போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பணியில் இருந்த ரெயில்வே ஊழியர் பயணிகளுக்கிடையே நடந்த சம்பவம் குறித்துரெயில்வே அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ரெயில்வே ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில் டிக்கெட் கவுண்டர்களில் வடமாநில ஊழியர்கள் பணியில் இருப்பதால் அவர்களுக்கு தமிழ் தெரிவதில்லை. டிக்கெட் எடுக்க வருகை தரும் பயணி கள் சிரமத்திற்கு ஆளா கிறார்கள். எனவே டிக்கெட் முன் பதிவு மையங் களில் வட்டார மொழி தெரிந்த பணியா ளர்களை நியமனம் செய்ய வேண் டும் என்று சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

    ×