என் மலர்
நீங்கள் தேடியது "பிரசாரம் நிறைவு"
- நாகாலாந்து, மேகாலயாவில் நாளை ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
- சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது.
புதுடெல்லி:
வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து சட்டசபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. மேகாலயா, நாகாலாந்துக்கு நாளை (27-ம் தேதியும்) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் தேர்தல் பணிகளை கட்சிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்தன. இதற்கான வேட்பாளர் அறிவிப்பு, பிரசாரம் போன்ற பணிகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு நாகாலாந்து, மேகாலயாவில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன.
இந்நிலையில், நாகாலாந்து, மேகாலயாவில் நாளை (27-ம் தேதி) ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மேகாலயாவை பொருத்தமட்டில் மொத்தமுள்ள 60 இடங்களுக்கு 11 கட்சிகளைச் சோ்ந்த 375 பேர் போட்டியிடுகின்றனர். பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஆளும் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 57 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் 56 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. 12 மாவட்டங்களில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நாகாலாந்து, மேகாலாயவில் மொத்தமுள்ள 120 பதவிகளுக்கு 558 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு வெளியாகிறது.
- அரியானா மாநிலத்தில் வருகிற 5-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
- வரும் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
அரியானா மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதையடுத்து அங்கு புதிய சட்டசபை அமைப்பதற்கான தேர்தலை நடத்துவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்துள்ளது. வருகிற 5-ந் தேதி அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.
அரியானா சட்டசபை மொத்தம் 90 தொகுதிகளின் பிரதிநிதித்துவம் கொண்டது. 90 தொகுதிகளிலும் 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 462 பேர் சுயேட்சை வேட்பாளர்கள் ஆவார்கள்.
கடந்த 2 வாரங்களாக 90 தொகுதிகளிலும் அனல்பறக்கும் பிரசாரம் நடந்தது. பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்பட மூத்த தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.
இந்நிலையில், தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
நாளை வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கான சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. தேர்தல் பணியாளர்களும் முழுமையாக பணியில் ஈடுபட உள்ளனர். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து, வரும் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் (13-ந்தேதி) நடைபெறுகிறது.
- பிரியங்கா காந்திக்கு ஆதரவாக ராகுல் காந்தியும் பிரசாரம் செய்தார்.
மக்களவை தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்தியன் மொகேரி, பாரதிய ஜனதா சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட 16 பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பிரியங்கா காந்தியை பொருத்தவரை வேட்பு மனு தாக்கல் செய்த தினத்தில் தனது முதற்கட்ட பிரசாரத்தை தொடங்கினார். பின்பு கடந்த 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை இரண்டாம் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.
நேற்று தனது 3-ம் கட்ட பிரசாரத்தை தொடங்கினார். அதேபோன்று இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் வேட்பாளர்களும் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.
வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் (13-ந்தேதி) நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு தேர்தல் பிரசாரம் இன்று ஓய்ந்தது. பிரியங்கா காந்தி உள்ளிட்ட வேட்பாளர்கள் இன்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.
பிரியங்கா காந்தி இன்று காலை வயநாடு பத்தேரி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிற்பகல் கோழிக்கோடு திருவம் பாடியில் நடைபெற்ற ரோடு-ஷோவிலும் கலந்து கொண்டார். பிரியங்கா காந்திக்கு ஆதரவாக ராகுல் காந்தியும் பிரசாரம் செய்தார். அவர் பிரியங்கா காந்தியுடன் சென்று ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரான சத்தியன் மொகேரி கல்பெட்டாவில் ரோடு- ஷோவில் பங்கேற்று இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார். பாரதிய ஜனதா வேட்பாளர் நவ்யா ஹரி தாஸ் பத்தேரி சுங்கச்சாவடி பகுதியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.
பிரசாரம் ஓய்ந்ததையடுத்து பிரசாரத்துக்காக வந்திருந்த தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் வெளியேற தொடங்கினர். வெளி நபர்கள் யாரும் தொகுதியில் தங்கியிருக்கிறார்களா? என்று கண்காணிக்கும் பணியில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.
- மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கும் நவம்பர் 20-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல்.
- 81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் 20-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல்.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபைகளின் பதவிகாலம் விரைவில் நிறைவு பெறுகிறது. இதையொட்டி புதிய சட்டசபைகளை தேர்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணை வெளியிட்டது.
அதன்படி மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கும் நவம்பர் 20-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் 20-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஜார்க்கண்ட் மாநிலத்தில் 43 தொகுதிகளில் கடந்த 13-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்தது. அதில் சுமார் 67 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதையடுத்து அங்கு 2-வது கட்டமாக 38 தொகுதிகளில் விறுவிறுப்பான தேர்தல் பிரசாரம் நடந்தது.
அதுபோல மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2 வாரங்களாக அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது. பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக இஸ்லாமிய அமைப்புகளும் மறைமுகமாக வேலை செய்தன.
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) மாலையுடன் பிரசாரம் நிறைவு பெற்றது. 2 மாநிலங்களிலும் தலைவர்கள் இறுதிகட்ட ஓட்டு வேட்டை ஆடினார்கள். நாளை வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு எந்திரங்கள் கொண்டு செல்லும் பணி நடைபெறும். 20-ந் தேதி (புதன்கிழமை) ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
இதையொட்டி இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. 23-ந் தேதி (சனிக்கிழமை) ஓட்டுக்கள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும்.