search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாட்டு நாட்டு பாடல்"

    • ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். இணைந்து ஆடிய நடனம் உலகம் முழுவதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
    • பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் உலக அளவில் ஹிட் ஆகி ஆஸ்கர் விருதையும் வென்றது. குறிப்பாக நாட்டு நாட்டு பாடலுக்கு ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் இணைந்து ஆடிய நடனம் உலகம் முழுவதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

    சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை குவித்த இந்த பாடலுக்கு சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் என பலரும் 'ரீல்ஸ்' நடனமாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் கடந்த வாரம் ஐதராபாத்தில் முதல் முறையாக நடைபெற்ற உலக பிரசித்தி பெற்ற 'டபிள்யூ.டபிள்யூ.ஈ.' போட்டிகளில் மல்யுத்த வீரர்கள் ட்ரூ மிக்கின்டைர், ஜிண்டர்மகால், சாமிஜெயின், கெவின் ஓவன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் போட்டி நடந்த மேடையில் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடினர். இதைப்பார்த்த பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 60 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்து வருகிறது.

    • உக்ரைன் ராணுவ வீரர்கள் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    • வீடியோ 6 லட்சம் பார்வைகளையும், 6 ஆயிரத்துக்கும் அதிகமான விருப்பங்களையும் குவித்துள்ளது.

    டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் உலகம் முழுவதும் ஹிட் ஆனதோடு, ஆஸ்கார் விருதையும் வென்றது. படம் வெளியான போதே இந்த பாடலுக்கு பெரும் வரவேற்பு இருந்த நிலையில், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ராம்சரண்-ஜுனியர் என்.டி.ஆர். போல ரீல்ஸ் நடனமாடி வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர்.

    இந்நிலையில் தற்போது உக்ரைன் ராணுவ வீரர்கள் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே 'நாட்டு நாட்டு' பாடல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு வெளியே படமாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    அதன்பிறகு சில நாட்களில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்க ஆரம்பித்தது. இந்நிலையில் தற்போது வைரலாகி வரும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், போருக்கு மத்தியில் உக்ரைன் வீரர்களின் நடனத்தை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்த வீடியோ 6 லட்சம் பார்வைகளையும், 6 ஆயிரத்துக்கும் அதிகமான விருப்பங்களையும் குவித்துள்ளது.

    • டொரண்டோவில் பேஸ்பால் போட்டி நடைபெற்று வருகிறது.
    • இதில் ஒரு போட்டியின் இடையே நாட்டு நாட்டு பாடல் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

    டைரக்டர் ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதை பெற்றது. நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். இணைந்து ஆடிய இந்த பாடல் உலகம் முழுவதும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

    அந்த பாடலுக்காக பல்வேறு நாடுகளில் தூதர்கள் மற்றும் பிரபலங்கள் நடனமாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி இருந்தன.

    இந்நிலையில் டொரண்டோவில் பேஸ்பால் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு போட்டியின் இடையே நாட்டு நாட்டு பாடல் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு மைதானத்தில் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் நடன கலைஞர்கள் மாஸ்கட் உருவம் அணிந்த பொம்மைகளை அணிந்து நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • ஸ்லிப் ஃபீல்டராக அவர் நின்றபோது இந்தப் பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

    மும்பை:

    ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றிருந்த 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருது வென்றது. இந்தப் பாடலின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலை எழுதிய பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆஸ்கர் விருதை பெற்றனர்.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பீல்டிங் செய்தபோது விராட் கோலி, 'நாட்டு நாட்டு' பாடலின் நடன அசைவுகளை போட்டிருந்தார். ஸ்லிப் ஃபீல்டராக அவர் நின்றபோது இந்தப் பாடலுக்கு நடனமாடி இருந்தார்.


    இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 75 ரன்கள் எடுத்திருந்தார். ஜடேஜா 45 ரன்களும், கேப்டன் பாண்டியா 25 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த தொடரின் இரண்டாவது போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.

    • நாட்டு நாட்டு பாடலுக்கு அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 2 போலீஸ்காரர்கள் ஒரு வாலிபருடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
    • வீடியோவில் போலீஸ்காரர்களுடன் இணைந்து ஆடும் நபர் ஹோலி கொண்டாடியது போல தெரிகிறது.

    அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற ஆஸ்கார் விழாவில் இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.

    ஆர்ஆர்ஆர் படம் வெளியானதில் இருந்தே இந்த பாடல் உலகமெங்கும் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் பல நாடுகளை சேர்ந்த நட்சத்திரங்கள் உள்பட பலரும் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தன. குறிப்பாக டெல்லியில் உள்ள தென்கொரிய தூதரகத்தில் தூதுவர் மற்றும் ஊழியர்கள் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி இருந்த நிலையில் நேற்று 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கார் விருதை வென்றது.

    இந்நிலையில் நாட்டு நாட்டு பாடலுக்கு அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 2 போலீஸ்காரர்கள் ஒரு வாலிபருடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில் போலீஸ்காரர்களுடன் இணைந்து ஆடும் நபர் ஹோலி கொண்டாடியது போல தெரிகிறது.

    பின்னணியில் இசை ஒலிக்க அந்த நபரின் தோள்களில் கையை வைத்து கொண்டு 2 போலீஸ்காரர்களும் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடுகின்றனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி 'லைக்'குகளை குவித்து கொண்டிருக்கிறது.

    • நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைப்பாளர் கிரவாணிக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்தது.
    • என்.டி.ஆர்., ராம்சரண் போல நடனமாடி அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

    ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் நடிப்பில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' படம் சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்து வருகிறது. குறிப்பாக அந்த படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைப்பாளர் கிரவாணிக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்தது.

    தொடர்ந்து பல விருதுகளை குவித்து வரும் நிலையில் சர்வதேச பிரபலங்கள் பலரும் நாட்டு நாட்டு பாடலுக்கு ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் போல நடனமாடி அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் புதுடெல்லியில் உள்ள தென்கொரிய தூதரகத்தில் ஊழியர்கள் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடும் வீடியோவை பகிர்ந்துள்ளனர். தென்கொரிய தூதர் சாங் ஜே-போக் மற்றும் தூதரக ஊழியர்கள் இணைந்து நடனமாடி உள்ள அந்த வீடியோ 53 விநாடிகள் ஓடுகிறது.

    இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    ×