என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மதுபான கொள்கை வழக்கு"
- விசாரணை நடத்தியதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.
- ஏற்கனவே 90 நாட்கள் சிறையில் தண்டனை அனுபவித்தார்.
டெல்லி மாநில அரசின் மதுபானக் கொள்கை தொடர்பாக பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தியதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. ஏற்கனவே 90 நாட்கள் சிறையில் தண்டனை அனுபவித்த நிலையிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்ற காரணங்களை கருத்தில் கொண்டும் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
- ரோஸ் அவென்யு கோர்ட் நேற்று கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது.
- இதனால் அவர் சிறையில் இருந்து வெளிவருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
புதுடெல்லி:
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று, ரோஸ் அவென்யு கோர்ட் அவருக்கு ஜாமின் வழங்கியது. இதனால் இன்று சிறையில் இருந்து வெளியில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஜாமின் வழங்கியதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரிக்கும் வரை ஜாமின் நிறுத்தி வைக்கப்படுகிறது என டெல்லி ஐகோர்ட் தெரிவித்தது. சுதிர் குமார் ஜெயின் மற்றும் ரவீந்திர டுடேஜா கொண்ட பெஞ்ச் முன் உடனடியாக இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தரப்பு தங்கள் வாதங்களை முன் வைத்தது. அப்போது, சிறப்பு நீதிமன்றத்தில் தங்கள் வாதங்களை முன் வைக்க வாய்ப்பு வழங்கவில்லை. அமலாக்கத் துறையின் ஆவணங்களை சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரிசீலிக்கவில்லை. டெல்லி ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் ஜாமின் உத்தரவு அமைந்துள்ளது. கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவில் தவறு உள்ளது என தெரிவித்தனர்.
இதையடுத்து, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கிய ஜாமினுக்கு இடைக்கால தடை விதித்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது.
பாராளுமன்ற தேர்தலின்போது சுப்ரீம் கோர்ட் கெஜ்ரிவாலுக்கு சுமார் 20 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
- பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் செய்ய கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கியது.
- இடைக்கால ஜாமின் முடிந்து கெஜ்ரிவால் கடந்த 2-ம் தேதி திகார் சிறையில் சரணடைந்தார்.
புதுடெல்லி:
டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அவருக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கியது. இந்த ஜாமின் முடிந்து கடந்த 2-ம் தேதி திகார் சிறையில் சரணடைந்தார்.
இதற்கிடையே, மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டி இருப்பதால 7 நாட்கள் ஜாமின் கோரி டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், கெஜ்ரிவாலின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார். அத்துடன் அவரது நீதிமன்ற காவலை ஜூன் 19 வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
- ஜூன் 1ம் தேதி வரை உச்சநீதிமன்றத்தின் இடைக்கால ஜாமினில் கெஜ்ரிவால் வெளியே வந்தார்.
- ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று மனுத் தாக்கல்.
மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில் மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக ஜூன் 1ம் தேதி வரை உச்சநீதிமன்றத்தின் இடைக்கால ஜாமினில் கெஜ்ரிவால் வெளியே வந்தார்.
இந்நிலையில் ஜூன் 1 ஆம் தேதி நெருங்குவதால் தனது உடல்நிலையை காரணம் காட்டி இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்தார்.
அவரது மனுவில், "தனது உடல் எடை இயல்புக்கு மாறாக அதிக அளவில் குறைந்துள்ளது, சிறை அதிகாரிகளின் நடவடிக்கைகளால் தான் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவசியமான மருத்துவ பரிசோதனைகளைச் செய்து கொள்ள தனக்கு மேலும் 7 நாட்கள் அவகாசம் வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நேற்று உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்த நிலையில் கெஜ்ரிவாலின் கோரிக்கை மனுவை அவசர மனுவாக விசாரிக்க முடியாது என்று தெரிவித்தது.
இந்நிலையில், இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
- மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக ஜூன் 1 வரை உச்சநீதிமன்றத்தின் இடைக்கால ஜாமினில் கெஜ்ரிவால் வெளியே வந்தார்.
- தனது உடல்நிலையை காரணம் காட்டி இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இடதற்கிடையில் மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக ஜூன் 1 வரை உச்சநீதிமன்றத்தின் இடைக்கால ஜாமினில் கெஜ்ரிவால் வெளியே வந்தார்.
இந்நிலையில் ஜூன் 1 ஆம் தேதி நெருங்குவதால் தனது உடல்நிலையை காரணம் காட்டி இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில், தனது உடல் எடை இயல்புக்கு மாறாக அதிக அளவில் குறைந்துள்ளது, சிறை அதிகாரிகளின் நடவடிக்கைகளால் தான் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவசியமான மருத்துவ பரிசோதனைகளைச் செய்து கொள்ள தனக்கு மேலும் 7 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு இன்று (மே 28) உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்த நிலையில் கெஜ்ரிவாலின் கோரிக்கை மனுவை அவசர மனுவாக விசாரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. இதனால் ஜாமீன் நீட்டிப்பு மனு மீதான விசாரணை நடப்பதற்கு முன்னதாகவே கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் காலம் முடிவடைந்து அவர் மீண்டும் சிறை செல்ல அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
- வெயில் அதிகமாக இருந்தாலும், வீட்டில் உட்கார வேண்டாம் என்று அனைத்து வாக்காளர்களுக்கும் தயவுசெய்து வாக்களிக்கவும் என்று கோரிக்கை விடுத்தார்.
- டெல்லியில் இன்று 7 மக்களவைத் தொகுதிகளுக்கு நடக்கும் வாக்குப்பதிவில் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு டெல்லி, ஹரியானா, ஒடிசா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று (மே 25) காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டெல்லியில் இன்று 7 மக்களவைத் தொகுதிகளுக்கு நடக்கும் வாக்குப்பதிவில் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர்.
அந்த வகையில் மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளி வந்துள்ள ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனைவி சுனிதா மற்றும் குடும்பத்தினருடன் வாக்குச்சாவடிக்கு வந்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஜெய் பிரகாஷ் அகர்வாலுக்கு வாக்களித்தார்.
வாக்களித்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், எனது தந்தை, மனைவி மற்றும் எனது குழந்தைகள் இருவரும் வாக்களித்தனர். எனது தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் இன்று வர முடியவில்லை. பணவீக்கம் மற்றும் வேலையின்மைக்கு எதிராக நான் வாக்களித்துள்ளேன் என்று தெரிவித்தார்.
மேலும் வெயில் அதிகமாக இருந்தாலும், வீட்டில் உட்கார வேண்டாம் என்று அனைத்து வாக்காளர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். தயவுசெய்து வாக்களிக்கவும் என்று கோரிக்கை விடுத்தார். கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் ஜூன் 1-ம் தேதி நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
- டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்தது
- இந்த வழக்கில் பணம் எதுவும் மீட்கப்படவில்லை. ஆனால் நீங்கள் சஞ்சய் சிங்கை 6 மாதங்கள் நீதிமன்றக் காவலில் வைத்திருக்கிறீர்கள் - உச்ச நீதிமன்றம்
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து 2023-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரது ஜாமின் மனுவை ஏப்ரல் 2-ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, இந்த வழக்கில் பணம் எதுவும் மீட்கப்படவில்லை. ஆனால் நீங்கள் சஞ்சய் சிங்கை 6 மாதங்கள் நீதிமன்றக் காவலில் வைத்திருக்கிறீர்கள். அவருக்கு காவல் தேவையா? இல்லையா? என்பது குறித்து எங்களுக்குத் தெரிய வேண்டும் என்று அமலாக்கத்துறையிடம் நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.
சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் பதில் அளித்தது. இதனையடுத்து சஞ்சய் சிங்கிற்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.
இதனையடுத்து, இன்று சஞ்சய் சிங், டெல்லி திகார் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் அவரை வரவேற்றனர்.
திகார் சிறைக்கு வெளியே ஆம் ஆத்மி கட்சியினர் இடையே பேசிய அவர், "இது கொண்டாடுவதற்கான நேரம் அல்ல மாறாக போராட வேண்டிய நேரம். நமது கட்சியின் மூத்த தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், சத்யேந்தர் ஜெயின் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு விரைவில் அவர்கள் வெளியே வருவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் விடுவிக்கப்படும் வரை, நாம் கொண்டாட மாட்டோம், நாம் தொடர்ந்து போராடுவோம்" என்று தெரிவித்தார்.
- நீங்கள் சஞ்சய் சிங்கை 6 மாதங்கள் நீதிமன்றக் காவலில் வைத்திருக்கிறீர்கள். அவருக்கு காவல் தேவையா? - உச்ச நீதிமன்றம்
- அமலக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து 2023-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரது ஜாமின் மனுவை கடந்த 7-ம் தேதி விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் நீதிபதி ஜாமின் வழங்க மறுத்தது.
இந்நிலையில், டெல்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபாங்கர் தத்தா மற்றும் வராலே ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கில் பணம் எதுவும் மீட்கப்படவில்லை. ஆனால் நீங்கள் சஞ்சய் சிங்கை 6 மாதங்கள் நீதிமன்றக் காவலில் வைத்திருக்கிறீர்கள். அவருக்கு காவல் தேவையா? இல்லையா? என்பது குறித்து எங்களுக்குத் தெரிய வேண்டும் என்று அமலாக்கத்துறையிடம் நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.
சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் பதில் அளித்தது. இதனையடுத்து சஞ்சய் சிங்கிற்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள நிலையில், சஞ்சய் சிங்கிற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
- மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்குக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமின் மறுத்தது.
- ஜாமின் வழங்க மறுத்த டெல்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய மதுபான கொள்கையில் நடந்துள்ள முறைகேட்டை அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து 2023-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரது ஜாமின் மனுவை கடந்த 7-ம் தேதி விசாரித்த டெல்லி ஐகோர்ட் நீதிபதி ஜாமின் வழங்க மறுத்தார்.
இந்நிலையில், டெல்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
- 5 முறை கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில் 6-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்.
- தனக்கு சம்மன் அனுப்பப்படுவது சட்டவிரோதம் என கெஜ்ரிவால் தொடர்ந்து கூறி வருகிறார்.
புதுடெல்லி:
டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது.
இதனால் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டது. ஆனால் இதுவரை 5 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
தனக்கு அனுப்பிய சம்மன் சட்டவிரோதமானது. அதை திரும்பப் பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
5 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே வரும் 17-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் தற்போது 6-வது முறையாக அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. வருகிற 19-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்த முறையும் அவர் ஆஜராவாரா என்பது தெரியவில்லை. தன்னை கைதுசெய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் சம்மன் அனுப்பப்படுகிறது என கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
- மதுபான கொள்கை ஊழல் வழக்கில் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்தது.
- மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021-22-ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. அதில் மிகப்பெரிய அளவில் ஆம் ஆத்மி தலைவர்கள் முறைகேடுகள் செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்து 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த குற்றப் பத்திரிகைகளில் புதிய மதுபான கொள்கை முறைகேட்டில் ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள், சந்திரசேகரராவ் மகள் கவிதா மற்றும் 36 பேருக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 23-ம் தேதி முதல் மந்திரி கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதி அவரிடம் முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் சி.பி.ஐ. தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் காலை முதலே சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு மாலையில் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், மணீஷ் சிசோடியாவிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என சி.பி.ஐ. இன்று கோரிய நிலையில், அதனை ஏற்றுக்கொண்டு மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் (மார்ச் 4 வரை) சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
- சிசோடியாவின் கைது நடவடிக்கையால் மக்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்பட்டுள்ளது.
- ஏழை குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை உறுதி செய்ய மணீஷ் சிசோடியா கடினமாக உழைத்துள்ளார்.
புதுடெல்லி:
டெல்லி மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார். இன்று 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த கைது நடிவடிக்கைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
மணீஷ் அப்பாவி. அவர் கைது செய்யப்பட்டிருப்பது ஒரு கேவலமான அரசியல். சிசோடியாவின் கைது நடவடிக்கையால் மக்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் அனைத்தையும் புரிந்துகொண்டுள்ளனர். நிச்சயம் இதற்கு பதிலளிப்பார்கள். இந்த நடவடிக்கை எங்கள் உத்வேகத்தை மேலும் அதிகரிக்கும். எங்கள் போராட்டம் வலுவடையும்.
இவ்வாறு கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
'ஒவ்வொரு ஏழை வீட்டில் இருந்தும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை உறுதி செய்ய மணீஷ் சிசோடியா கடினமாக உழைத்துள்ளார். அவர் ஒரு நேர்மையான, ஒழுக்கமான மனிதர். ஆனால் இன்று அவரை கைது செய்துள்ளனர். நல்ல மனிதர்களையும் தேசபக்தர்களையும் கைது செய்கிறார்கள், அதே சமயம் அவர்களது நண்பர்கள் வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கிறார்கள்' என கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்