search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லயோனல் மெஸ்சி"

    • அர்ஜென்டினா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டி நேற்று நடந்தது.
    • மெஸ்சியின் 103-வது சர்வதேச கோலாக இது பதிவானது.

    பீஜிங்:

    உலக சாம்பியன் அர்ஜென்டினா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டி சீன தலைநகர் பீஜிங்கில் நேற்று நடந்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

    அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி ஆட்டம் தொடங்கிய 79-வது வினாடிக்குள் சூப்பராக கோல் அடித்து அசத்தினார். அவரது கால்பந்து வாழ்க்கையில் அடிக்கப்பட்ட அதிவேக கோல் இதுதான்.


    இதற்கு முன்பு கிளப் போட்டியில் 127-வது வினாடியில் பந்தை வலைக்குள் அனுப்பியதே அவரது மின்னல்வேக கோலாக இருந்தது. மொத்தத்தில் மெஸ்சியின் 103-வது சர்வதேச கோலாக இது பதிவானது.

    • கிளப் நிர்வாகத்தின் அனுமதியின்றி வெளிநாடு சென்றது சர்ச்சையானது.
    • 2 வாரத்துக்கும் அவருக்கு சம்பளம் வழங்கப்படாது என்று கூறப்படுகிறது.

    பாரீஸ்:

    அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி, பிரான்சை சேர்ந்த பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) கிளப்புக்காக விளையாடி வருகிறார். அவர் அண்மையில் சவுதிஅரேபியா சுற்றுலா துறையுடன் செய்து கொண்ட ஒப்பந்தபடி அங்கு 2 நாள் பயணம் மேற்கொண்டார்.

    ஆனால் அவர் கிளப் நிர்வாகத்தின் அனுமதியின்றி வெளிநாடு சென்றது சர்ச்சையானது. இதையடுத்து ஒழுங்கீன நடவடிக்கையாக அவருக்கு லீக்1 போட்டியில் விளையாட 2 வாரங்கள் பி.எஸ்.ஜி. நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த 2 வாரத்துக்கும் அவருக்கு சம்பளம் வழங்கப்படாது என்று கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்துள்ள மெஸ்சி, இந்த சீசனுடன் பி.எஸ்.ஜி. கிளப்பை விட்டு விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • பிபாவின் சிறந்த வீரர் விருதை மெஸ்சி வென்றார்.
    • பிபாவின் சிறந்த வீராங்கனை விருதை புடெல்லாஸ் வென்றார்.

    பாரிஸ்:

    சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு (பிபா) சிறப்பாக செயல்படும் கால்பந்து வீரர்களுக்கு, ஆண்டுதோறும் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, கடந்த ஆண்டுக்கான பிபாவின் சிறந்த வீரர் விருதுக்கான இறுதிப் போட்டியாளர்களாக மெஸ்சி, கைலியன் எம்பாப்பே மற்றும் கரீம் பென்சிமா அறிவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், பிபா சிறந்த கால்பந்து வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 2022-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது அர்ஜென்டினாவின் மெஸ்சிக்கும், சிறந்த வீராங்கனை விருது ஸ்பெயினின் அலெக்சியா புடெல்லாசுக்கும் வழங்கப்பட்டது.

    கத்தாரில் கடந்த ஆண்டு நடந்த 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோப்பையை உச்சி முகர்ந்தது.

    அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி 7 கோல்களுடன், ஒட்டுமொத்தத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான சிறந்த வீரருக்குரிய தங்க பந்து விருதை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

    ×