என் மலர்
நீங்கள் தேடியது "போலி கவுரவ டாக்டர் பட்டம்"
- தமிழ் திரை உலகின் பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு சிறந்த பொழுதுபோக்கு பிரிவில் கவுரவ டாக்டர் பட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
- போலி டாக்டர் பட்டம் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்ட அண்ணா பல்கலைக்கழகம், போலீசாரிடம் புகார் அளித்தது.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் அமைப்பின் சார்பில் பிரபலங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இசை அமைப்பாளர் தேவா, ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், சின்னத்திரை பிரபலமான ஈரோடு மகேஷ், சினிமா டான்ஸ் மாஸ்டர் சாண்டி யூடியூப் பிரபலங்களான கோபி, சுதாகர் உள்பட 40 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் கே.கே.நகர் தனசேகரனும் இந்த விருதை பெற்றார். ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளி நாயகம் கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். சினிமா, சமூகப்பணி, அரசியல் பணி ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களை தேர்வு செய்து இந்த விருதுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ் திரை உலகின் பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு சிறந்த பொழுதுபோக்கு பிரிவில் கவுரவ டாக்டர் பட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவர் நிகழ்ச்சிக்கு வராததால் நேரில் சென்று சந்தித்து டாக்டர் பட்டத்தை வழங்கி உள்ளனர்.
இந்த நிலையில் இந்த கவுரவ டாக்டர் பட்டங்கள் அனைத்தும் போலியானவை என்கிற சர்ச்சை எழுந்துள்ளது. இப்படி போலி பட்டம் மற்றும் விருதுகள் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தில் வைத்தே நடைபெற்றிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
போலி டாக்டர் பட்டம் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்ட அண்ணா பல்கலைக்கழகம், போலீசாரிடம் புகார் அளித்தது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து இந்த அமைப்பின் இயக்குநர் ஹரிஷ் என்பவர் தலைமறைவாகிவிட்டார். அவரது தொலைபேசி எண்ணும் அணைக்கப்பட்டுள்ளது. அவரை போலீசார் தற்போது தேடி வருகின்றனர்.
- நீதிபதி வள்ளி நாயகத்தின் கடிதத்தை போலியாக தயாரித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பயன்படுத்தி இருப்பதும் அம்பலமானது.
- அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்கிற அமைப்பின் சார்பில் பிரபலங்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா கடந்த 28-ந்தேதி நடைபெற்றது.
இசை அமைப்பாளர் தேவா, சினிமா டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ், சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளரான ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான கோபி சுதாகர் உள்ளிட்ட 40 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டமும் விருதும் வழங்கப்பட்டது. நடிகர் வடிவேலுவும் இந்த விருது வழங்கும் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் விழாவுக்கு செல்லாத நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நேரில் சென்று வடிவேலுவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம் பங்கேற்று கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் விருதுகளை வழங்கினார். இந்த நிலையில்தான் இந்த பட்டங்கள் அனைத்தும் போலியானது என்கிற அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் அளித்த பேட்டியில் மோசடியான முறையில் விழாவை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். நீதிபதி வள்ளி நாயகத்தின் கடிதத்தை போலியாக தயாரித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பயன்படுத்தி இருப்பதும் அம்பலமானது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை கே.கே.நகரை சேர்ந்த ஹரிஸ் என்பவர்தான் போலி கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கிய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.
சர்வதேச ஊழல் தடுப்பு மனித உரிமை ஆணையத்தின் இயக்குனராக உள்ள அவர்தான் வடிவேலுவுக்கு நேரில் சென்று பட்டம் வழங்கி பாராட்டும் தெரிவித்து இருந்தார். இதைதொடர்ந்து ஹரிஸ் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஐ.பி.சி. சட்டப் பிரிவுகள் 406, 420, 426, 468, 469, 471, 488 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போலி கவுரவ டாக்டர் பட்டம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து ஹரிஸ் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. ஹரிசை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதற்கிடையே மாம்பலம் போலீசில் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம் அளித்த புகாரின் பேரிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த புகாரிலும் ஹரிஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஹரிசை கைது செய்த பின்னர் போலி பட்டமளிப்பு விழா விவகாரத்தில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பதை கண்டுபிடித்து அனைவரையும் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- ஹரிஷ் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்கிற அமைப்பின் சார்பில் பிரபலங்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா கடந்த 28-ந்தேதி நடைபெற்றது.
இசை அமைப்பாளர் தேவா, சினிமா டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ், சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளரான ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான கோபி சுதாகர் உள்ளிட்ட 40 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டமும் விருதும் வழங்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம் பங்கேற்று கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் விருதுகளை வழங்கினார்.
இந்த நிலையில்தான் இந்த பட்டங்கள் அனைத்தும் போலியானது என்கிற அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை கே.கே.நகரை சேர்ந்த ஹரிஷ் என்பவர்தான் போலி கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கிய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். சர்வதேச ஊழல் தடுப்பு மனித உரிமை ஆணையத்தின் இயக்குனராக உள்ள அவர்தான் வடிவேலுவுக்கு நேரில் சென்று பட்டம் வழங்கி பாராட்டும் தெரிவித்து இருந்தார்.
இதைதொடர்ந்து ஹரிஷ் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஐ.பி.சி. சட்டப் பிரிவுகள் 406, 420, 426, 468, 469, 471, 488 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய அமைப்பின் இயக்குனர் ராஜூ ஹரிஷின் முன்ஜாமின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
- தலைமறைவான ஹரீஷ் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தார்.
- ஹரீஷ் முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி நடத்தி திரை பிரபலங்களுக்கு போலி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதாக தனியார் அமைப்பின் இயக்குனர் ராஜூ ஹரீஷ் மீது புகார் கூறப்பட்டது. புகாரை அடுத்து ஹரீஷ் தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தலைமறைவான ஹரீஷ் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் ஆம்பூரில் பதுங்கி இருந்த தனியார் அமைப்பின் இயக்குனர் ராஜூ ஹரீஷை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
- போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் தனியார் அமைப்பின் நிர்வாகி ஹரிஷின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
- இதுவரை 50 நபர்களுக்கு போலியாக ஹரிஷ் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் தனியார் அமைப்பின் நிர்வாகி ஹரிஷின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. ஆடுதுறையில் உள்ள ஹரிஷின் வங்கி கணக்கை முடக்கி சென்னை போலீசார் பணப்பரிவர்த்தனை ஆய்வு செய்து வருகின்றனர்.
ஹரிஷின் வங்கி கணக்கில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் இருப்பதாகவும், இதுவரை 50 நபர்களுக்கு போலியாக அவர் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
4 பிரபலங்களுக்கு இலவசமாக டாக்டர் பட்டம் வழங்கிவிட்டு, மீதமுள்ளவர்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு டாக்டர் பட்டம் வழங்கி மோசடியில் ஈடுபட்டதும், வசூல் செய்த பணத்தில், பாதியை நிகழ்ச்சிக்காகவும், மீதி பணத்தில் உல்லாசமாகவும் இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.