என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சனி பிரதோஷ வழிபாடு"

    • சுவாமி, அம்பாள், நந்திக்கு 36 வகை நறுமணப் பொருட்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது.
    • சிவ பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடி சுவாமியை வழிபட்டனர்.

    செங்கோட்டை:

    சனி பிரதோஷத்தை முன்னிட்டு செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது. மாலையில் சுவாமி, அம்பாள், நந்திக்கு மா பொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 36 வகை நறுமணப் பொருட்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து சுவாமி, அம்பாள், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின் சுவாமி, அம்பாள், நந்தீஸ்வரக்கு தீபாராதனைகள் நடந்தது. நிகழ்ச்சியில் சிவ பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி சுவாமியை வழிபட்டனர். சுவாமி நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவில் உள் பிரகார உலா வந்தார்.

    மகா சனி பிரதோசமான நேற்று செங்கோட்டை சுற்றுவட்டார பக்தர்கள் கலந்துகொண்டு அருள் பிரசாதம் பெற்று சென்றனர்.இதனை போன்று ஆறுமுகசாமி ஒடுக்கம், மாலையான் சாமி கோவில், புளியரை கோவில், இலத்தூர் மதுநாத சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சனி பிரதோச வழிபாடுகள் நடைபெற்றது.

    • வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர்
    • மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது

    வந்தவாசி:

    வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு வழிபாடு நடைபெற்றது .

    இதையொட்டி சிவாச்சாரியார்கள் நந்தி பகவானுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

    பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதை தொடர்ந்து ஜலகண்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, உற்சவர் சிலையை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

    பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க நந்தி பகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ×