search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக மகளிர் தினம்"

    • அதிக பணம் கொடுத்தால் சூப்பர் Fast டெலிவரி என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது
    • சோமேட்டோ நிறுவனம் ஒவ்வொரு ஆர்டருக்கும் உண்டான Platform Fee எனப்படும் கட்டணத்தையும் ₹5 ஆக உயர்த்துகிறது

    ஆன்லைன் உணவு நிறுவனமான சோமேட்டோ, கூடுதல் தொகை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக உணவை டெலிவரி செய்யும் வகையில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

    இதற்கான சோதனை முயற்சியில் சொமேட்டோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது. முதல்கட்டமாக மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் இந்த சோதனை முயற்சி நடைபெறவுள்ளது.

    மேலும், சோமேட்டோ நிறுவனம் ஒவ்வொரு ஆர்டருக்கும் உண்டான தனது பிளாட்பார்ம் கட்டணத்தை 25% உயர்த்தியுள்ளது, இதன்படி ஒவ்வொரு ஆர்டருக்கும் கூடுதலாக 5 ரூபாய் வசூலிக்கப்படும். இந்த மாற்றம் டெல்லி, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் மற்றும் லக்னோ போன்ற முக்கிய நகரங்களில் தற்போது அமலாகியுள்ளது.

    பிளாட்ஃபார்ம் கட்டணம் என்பது டெலிவரி கட்டணத்திற்கு மேல் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணமாகும். 2023 ஆகஸ்ட் மாதத்தில் 2 ரூபாயாக அறிமுகப்படுத்தப்பட்ட பிளாட்பாரம் கட்டணம் தற்போது 5 ரூபாயாக உயர்ந்துள்ளது.

    • பல பெண்களுக்கு டீ சர்ட் அணிவது அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக எங்களிடம் தெரிவித்தனர்
    • சொமேட்டோவின் சுடிதார் சீருடையை அணிந்த பெண்களின் வீடியோவை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ, தனது பெண் ஊழியர்களுக்கு டீ சர்ட்டுக்கு பதிலாக, சுடிதாரை சீருடையாக மாற்றி அமைத்துள்ளது.

    சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பெண்களுக்கு இந்த புதிய சீருடையை சொமேட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

    எங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் பல பெண்களுக்கு டீ சர்ட் அணிவது அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக எங்களிடம் தெரிவித்தனர். ஆதலால் தான் நாங்கள் பெண்களுக்கான சீருடையை மாற்றுள்ளோம் என்று சொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சொமேட்டோவின் சுடிதார் சீருடையை அணிந்த பெண்களின் வீடியோவை அந்நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

    • அதியமானுக்காகக் காஞ்சியிலிருந்து ஆட்சிப் புரிந்த தொண்டைமானிடம் தூது சென்று நிகழவிருந்த போரை நிறுத்திய பெருமை மிக்கவர் அவவையார்.
    • உலக வரலாற்றில் இரண்டு வேந்தர்களுக்கிடையில் தூது சென்ற பெரு மடந்தையராகப் பெருமை கொண்டவர் அவ்வையார் ஆவார்.

    சென்னை:

    ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருக்கும் புலவர் பெருமாட்டியருள் அவ்வையாரின் அருமைத் திருப்பெயர் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும் திருப்பெயரும் தவப்பெயருமாகும்.

    'அகர முதல எழுத்தெல்லாம்' என்பது போல ஒளவை முதல அறிவெல்லாம் என்று அறிவுக்கே பரியாய நாமமாக அவ்வையார் ஆண், பெண், இளைஞர், முதியவர் என எல்லோராலும் வழிபாட்டுணர்ச்சியோடு வணங்கப்படுகிறார்.

    அதியமானுக்காகக் காஞ்சியிலிருந்து ஆட்சிப் புரிந்த தொண்டைமானிடம் தூது சென்று நிகழவிருந்த போரை நிறுத்திய பெருமை மிக்கவர் அவவையார். உலக வரலாற்றில் இரண்டு வேந்தர்களுக்கிடையில் தூது சென்ற பெரு மடந்தையராகப் பெருமை கொண்டவர் அவ்வையார் ஆவார்.

    சேரமான் மாரி வண்கோவும், சோழன் ராச சூயம் வேட்ட பெரு நற்கிள்ளியும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும் ஒருங்கிருப்பக் கண்டு உவந்து' என்றும் தமிழ் மூவேந்தர்கள் இவ்வாறே இருப்பீர்களாக' என அறிவுறுத்திய புலமைச் செல்வியார் ஆவார். நெடுமான் அஞ்சி போர்க் களத்தில் வேல் பாய்ந்து இறந்தபோது, அவ்வையார் வருந்திப் பாடிய கையறு நிலைப்பாட்டு மிகவும் உருக்கம் வாய்ந்தது.

    சங்கப் புலமைப் பெரும் செவ்வியராகிய இப்பெருமாட்டியார் பாடியனவாக உள்ள ஐம்பத்தொன்பது பாடல்களுள் அகப்பொருள் பற்றியன இருபத்தாறாகும். எஞ்சிய முப்பத்து மூன்று பாடல்களுள் புறப்பொருளுக்குரியன வாய்ப் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.

    மாந்தர் குலத்திற்குப் பெருமை சேர்த்த அவ்வை பெருமாட்டியாரைப் போற்றும் வகையில் உலக மகளிர் நாளான 08.03.2024 வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ் வளர்ச்சித் துறையால், சென்னை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவ்வையாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்தலும், தமிழ்ப் பெருமாட்டியின் திருவுருவப்படத்திற்கு மலர் வணக்க நிகழ்வும் நடைபெற உள்ளன. அமைச்சர் பெருமக்கள், மேயர், துணை மேயர், அரசு உயர் அலுவலர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள், பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    • உடன்குடியில் இந்திரா காந்தி விருது வழங்கும் விழா நடந்தது.
    • சாதனை புரிந்த 5 பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது.

    உடன்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் உலக மகளிர் தின விழாவையொட்டி உடன்குடியில் இந்திரா காந்தி விருது வழங்கும் விழா நடந்தது. தெற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சிந்தியா தலைமை தாங்கினார். ஸ்ரீவைகுண்டம் நகர தலைவி மங்களச் செல்வி, மாவட்ட பொதுச் செயலாளர் ஆக்னல் ரிஹானா, திருச்செந்தூர் வட்டார தலைவி பட்டு கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மகிளாஇணைச் செயலாளரும், உடன்குடி டவுன் கவுன்சிலருமான அன்பு ராணி வரவேற்றார். பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 5 பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு இந்திரா காந்தி விருது வழங்கி கவுரவித்தனர்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ., டேனியல் ராஜ், மாநில வக்கீல் பிரிவு துணைத் தலைவர் மகேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயக்குமார், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் செயலாளர் பியூலா விஜயராஜா, முன்னாள் மாவட்ட பொருளாளர் நடராஜன், உடன்குடி வட்டார தலைவர் துரைராஜ் ஜோசப், நகர தலைவர் முத்து, மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் வில்லின் பெலிக்ஸ், சாத்தான்குளம் (தெற்கு) வட்டார தலைவர் லூர்து மணி, மூத்த காங்கிரஸ் தலைவர் வெற்றிவேல் மற்றும் நேசபுரம் முத்துகுமார், ஹென்றி உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். முடிவில் மாவட்ட மகிளா காங்கிரஸ் பொருளாளர் சுலோச்சனா நன்றி கூறினார்.

    • விமானியாக சாமிக்க ரூபசிங்க, முதல் அதிகாரியாக பிமலி ஜீவந்தா, கேபின் முதன்மையாளராக சாமரி விஜே சூர்ய மற்றும் பணிப்பெண்கள் என மொத்தம் 8 பெண்கள் பணியாற்றினர்.
    • விமானத்தை இயக்கிய மகளிர் குழுவினருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    திருச்சி:

    உலக மகளிர் தினத்தையொட்டி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சிக்கு பெண்களை மட்டுமே கொண்டு விமானத்தை இயக்கியது. வழக்கமாக விமானி, துணை விமானி, மேலாளர் உள்ளிட்டவர்கள் ஆண்களாக இருப்பார்கள். ஆனால் உலக மகளிர் தினத்தையொட்டி பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக நேற்று முன்தினம் பெண் விமானிகள் மூலமாக விமானத்தை அந்த நிறுவனம் இயக்கியது.

    விமானியாக சாமிக்க ரூபசிங்க, முதல் அதிகாரியாக பிமலி ஜீவந்தா, கேபின் முதன்மையாளராக சாமரி விஜே சூர்ய மற்றும் பணிப்பெண்கள் என மொத்தம் 8 பெண்கள் பணியாற்றினர். இந்த விமானம் காலை 9.10 மணி அளவில் திருச்சி விமானநிலையத்தில் தரையிறங்கியது. தொடர்ந்து விமானத்தில் இருந்து இறங்கிய அவர்களை அதிகாரிகள் பாராட்டினர்.

    அதன்பின் விமான நிலைய வளாகத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. விமானத்தை இயக்கிய மகளிர் குழுவினருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    மீண்டும் அந்த விமானம் காலை 9.30 மணி அளவில் அதே பெண்கள் குழுவினருடன் இலங்கை தலைநகர் கொழும்புக்கு புறப்பட்டு சென்றது. இதே போல் கடந்த ஆண்டு மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு பெண்களை மட்டுமே கொண்டு விமானம் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

    • மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா தலைமை தாங்கினார்.
    • உலக அரங்கில் மகளிர் உரிமைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு தாசில்தார் சுகுமார் வரவே ற்று பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்து மகளிர் தின விழாவின் சிறப்புகள் மற்றும் முக்கியத்துவம் மற்றும் உலக அரங்கில் மகளிர் உரிமைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

    தொடர்ந்து தாலுகா கிராம நிர்வாக அலுவலர்கள், உதவி யாளர்கள், அலுவலக பெண் ஊழியர்கள் மற்றும் மகளிர் உதவி குழுவை சேர்ந்த பெண்கள் ஆகியோர் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.

    இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா பரிசு வழங்கி பாராட்டினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் வருவாய் ஆய்வாளர்கள் மணி, கவிப்பிரியா மற்றும் தாலுகா அலுவலக பணியா ளர்கள் செய்திருந்தனர்.

    • இந்தியாவில் இப்போது தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் சக்தியாகவும் பெண்கள் மாறி வருகிறார்கள்.
    • பீகார், ஒடிசா, உத்தரபிரசேதம் போன்ற மாநிலங்களிலும் தேர்தலில் வாக்களிக்கும் பெண்களின் பங்கு கணிசமாக அதிகரித்து வருகிறது.

    இன்று உலக மகளிர் தினம்.

    ஆணுக்கு பெண் நிகரென்று கூறும் காலம் வரும் என 50 ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தால் அதனை பெண்கள் கூட நம்பி இருக்கமாட்டார்கள்.

    ஆனால் இப்போது ஆணுக்கு சரிநிகர் சமமாக அனைத்து பணிகளிலும் பெண்களும் ஈடுபட்டு அசத்துகிறார்கள். ஏர் முனை தொடங்கி போர் முனை வரையிலும் பெண்கள் கால் பதிக்காத இடமே இல்லை என்று கூறிவிடலாம். அந்த அளவுக்கு சமூகத்திலும், குடும்பத்திலும் பெண்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பள்ளி கல்வியில் முதலிடம் பிடிப்போர் பெண்களாகவே உள்ளனர். கற்போர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி சமூக பங்களிப்பிலும் பெண்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

    இது எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து சமீபத்தில் சில ஆய்வுகள் நடத்தப்பட்டன. அந்த ஆய்வின் முடிவுகள் ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் ஏற்படுத்தியதோடு பெண்மையின் மாண்பை உயர்த்துவதாகவும் அமைந்தது.

    குறிப்பாக இந்திய அளவில் பெண்கள் தான் அதிக அளவில் உடல் உறுப்பு தானம் செய்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

    நம்பித்தான் ஆகவேண்டும் என்கிறது மும்பையை சேர்ந்த பிரபல தனியார் மருத்துவமனை நடத்திய ஆய்வு முடிவுகள். நோயுடன் போராடும் உறவுகளுக்கு உடல் உறுப்புகளை தானம் செய்ய முதலில் முன்வருவது பெண்கள் என்று கூறிய மருத்துவமனை நிர்வாகம் உறுப்பு தானம் செய்த 986 பேரில் 672 பேர் பெண்கள் என்பதை கண்டறிந்தது.

    இது 68 சதவீதம் ஆகும். அதாவது 10 பேர் உடல் உறுப்பு தானம் செய்தால் அதில் 7 பேர் பெண்கள் என்று தெரியவந்துள்ளது. உடல் உறுப்பு தானம் செய்தவர்களில் 35 சதவீதம் பேர் தங்களின் சிறுநீரகங்கள் அல்லது கல்லீரலில் ஒன்றை தானம் செய்துள்ளனர்.

    இதில் 33 சதவீதம் பேர் தங்கள் பெற்றோருக்கு அல்லது உடன்பிறப்புகளுக்கு உறுப்பு தானம் செய்துள்ளனர். 30 பேர் குழந்தைகளுக்கும் 2 சதவீதம் பெண்கள் தங்கள் மாமியாருக்கும் உறுப்பு தானம் செய்துள்ளனர்.

    குடும்பத்தை தாங்கும் பெண்கள் உடல் உறுப்பு தானத்திலும் முன்னிலை வகிப்பது சமூகத்தில் அவர்களின் பங்கையும், குடும்பத்தின் மீது அவர்கள் காட்டும் பாசத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

    இதுபோல இந்தியாவில் இப்போது தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் சக்தியாகவும் பெண்கள் மாறி வருகிறார்கள். இதுபற்றிய ஆய்வும் தேர்தல் பார்வையாளர்களை அதிசயிக்க வைத்துள்ளது.

    இந்தியாவில் ஆரம்ப காலத்தில் தேர்தல் நடந்த போது அதில் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே இருந்தது. காலப்போக்கில் அவர்களும் அரசியலில் பங்கேற்க தொடங்கிய பின்னர், தேர்தலில் வாக்களிக்கும் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இப்போது அவர்கள்தான் பல தொகுதிகளில் தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் சக்தியாக மாறியுள்ளனர்.

    30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் வாக்கு சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கும் பெண்கள் 4.4 சதவீதமாக இருந்தனர். இது அடுத்து வந்த தேர்தல்களில் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது.

    இதுபோல பாராளுமன்றத்தில் பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 1989-ல் 5.5 சதவீதமாக இருந்த எம்.பி.க்கள் எண்ணிக்கை 2019-ல் 14 சதவீதம் அதிகரித்து உள்ளது.

    பீகார், ஒடிசா, உத்தரபிரசேதம் போன்ற மாநிலங்களிலும் தேர்தலில் வாக்களிக்கும் பெண்களின் பங்கு கணிசமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இங்கு நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்த போது அதில் பெண்களின் பங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்தது.

    இப்படி சமூகம், குடும்பம், அரசியல் என பல துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை ஆய்வுகள் உறுதி செய்திருப்பது பெண் ஆர்வலர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதனிடையே, இந்தியாவில் உள்ள ஜெயில்களில் பெண் கைதிகளுக்கு மாதவிடாய் காலத்தில் போதிய பாதுகாப்பு இல்லை என்ற அதிர்ச்சி தகவலும் ஆய்வில் அதிர்ச்சி தெரியவந்துள்ளது.

    இந்தியாவில் உள்ள சிறைகளில் சுமார் 22,918 பெண் கைதிகள் உள்ளனர். இவர்களில் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண் கைதிகள் மட்டும் 31.3 சதவீதம் பேர் உள்ளனர்.

    இந்த பெண் கைதிகளுக்கு அவர்களின் மாதவிடாய் காலத்தில் போதுமான வசதிகள் சிறைகளில் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி சமீபத்தில் ஒரு தன்னார்வ அமைப்பு ஆய்வு செய்தது. இதில் பெரும்பாலான சிறைகளில் பெண் கைதிகளுக்கு போதுமான சுகாதார வசதிகளும், பாதுகாப்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

    ×