search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்"

    • மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான மினி ஏலம் பெங்களூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • 16 வயது வீராங்கனை கமலினியை ₹1.6 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

    இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆடவருக்கான ஐ.பி.எல். தொடர் 17 ஆண்டுகள் தொடர்ந்து நடைபோட்டு வருகிறது. இதேபோன்று, மகளிருக்கான டி-20 போட்டிகளை கடந்த ஆண்டு பி.சி.சி.ஐ. அறிமுகப்படுத்தியது. இதில் மும்பை, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ,லக்னோ ஆகிய 5 அணிகள் விளையாடி வருகிறது.

    முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியும், இரண்டாவது சீசனில் ஆர்சிபி அணியும் WPL கோப்பைகளை கைப்பற்றினர்.

    இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான மினி ஏலம் பெங்களூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது வீராங்கனை கமலினியை ₹1.6 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இவரின் அடிப்படை விலையாக ரூ.10 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சூப்பர் கிங்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற இவர், ஜூனியர் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்காக தற்போது அபாரமாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குஜராத், பெங்களுரூ, டெல்லி ஆகிய அணிகளை வீழ்த்தியது. மும்பை 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.
    • உ.பி. வாரியர்ஸ் அணி 3 ஆட்டத்தில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி பெற்று உள்ளது.

    5 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் மும்பையில் நடந்து வருகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 10-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்நிலையில், உ.பி வாரியர்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

    மும்பை அணி தான் விளையாடிய 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது. குஜராத், பெங்களுரூ, டெல்லி ஆகிய அணிகளை வீழ்த்தியது. மும்பை 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.

    அந்த அணி பேட்டிங், பந்துவீச்சில் சம பலத்துடன் உள்ளது. மேத்யூஸ், ஹர்மன் பிரீத் கவூர், ஸ்கிவர் பிரண்ட், அமெலியா கெர், வாங், பூஜா வஸ்த்ரகர் ஆகிய வீராங்கனைகள் உள்ளனர்.

    உ.பி. வாரியர்ஸ் அணி 3 ஆட்டத்தில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி பெற்று உள்ளது. அந்த அணியில் அலிசா ஹுலி, தகலியா மெக்ராத், தீப்தி சர்மா, கிரேஸ் ஹாரிஸ், சோபி எக்பெஸ்டோன், ராஜேஸ்வரி கெய்க்வாட், தேவிகா வைதியா ஆகிய வீராங்கனைகள் உள்ளனர்.

    • குஜராத் அணி மும்பையிடம் 143 ரன் வித்தியாசத்திலும், உ.பி.வாரியர்சிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது.
    • பெங்களூர், குஜராத் புள்ளி எதுவும் பெறவில்லை.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) சார்பில் முதலாவது மகளிர் பிரீமியர் `லீக்' 20 ஓவர் போட்டி மும்பை, நவி மும்பையில் நடைபெற்று வருகிறது.

    இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெய்ன்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். `லீக்' முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் `பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

    6-வது `லீக்' ஆட்டம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் பெத்முனி தலைமையிலான குஜராத்-ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் தாங்கள் விளையாடிய 2 ஆட்டங்களிலும் தோற்று இருந்தது. இதனால் ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து முதல் வெற்றியை பெறுவது எந்த அணி என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் அணி மும்பையிடம் 143 ரன் வித்தியாசத்திலும், உ.பி.வாரியர்சிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது.

    பெங்களூர் அணி 60 ரன் வித்தியாசத்தில் டெல்லியிடமும், 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடமும் தோற்றது. 5 போட்டிகள் முடிவில் மும்பை, டெல்லி தலா 4 புள்ளியுடனும், உ.பி.வாரியர்ஸ் 2 புள்ளியுடனும் உள்ளன. பெங்களூர், குஜராத் புள்ளி எதுவும் பெறவில்லை.

    ×