search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிரட்டிய"

    • ஜாமீனில் வெளியே வந்தவர் தந்தை மற்றும் அண்ணனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் பேசுகிறார்.
    • புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை அருகே அன்னூரை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் அன்னூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் காளப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து கொண்டு இருந்தேன். அப்போது அதே கல்லூரியில் படித்த சேலத்தை சேர்ந்த 26 வயது வாலிபருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்று எங்களது காதலை வளர்த்து வந்தோம். அப்போது நாங்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை அந்த வாலிபர் அவரது செல்போனில் எடுத்தார்.

    இந்த நிலையில் எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் நான் அவருடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்தேன்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர் நாங்கள் காதலிக்கும் போது நெருக்கமாக இருக்கும் போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நான் இது குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தேன். புகாரின் பேரில் போலீசார் வாலிபரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    அதன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் எனது தந்தை மற்றும் அண்ணனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் பேசுகிறார்.

    மேலும் நான் கொடுத்த வழக்கை வாபஸ் பெற வேண்டும். இழப்பீடாக ரூ.4 லட்சம் பணம் வேண்டும் என மிரட்டுகிறார்.

    கடந்த 12-ந் தேதி இரவு எனது வீட்டு காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து உள்ளே நுழைந்த வாலிபர் வீட்டில் உள்ள சுவரில் இது தான் கடைசி எச்சரிக்கை என எழுதி விட்டு சென்றுள்ளார்.

    சம்பவத்தன்று எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அவர் எனது அண்ணனிடம் வழக்கை வாபஸ் வாங்கவில்லை என்றால் குடும்பத்தில் யாரும் உயிரோடு இருக்க மாட்டீர்கள் என மிரட்டி விட்டு சென்றுள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தனியார் பஸ் டிரைவர் நம்பியூர் போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பரணிதரனை கைது செய்தனர்.

    நம்பியூர்:

    நம்பியூர் அருகே உள்ள புது சூரிபாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் பரணிதரன் (வயது 39). இவர் தனியார் கம்பெனியில் மெக்கானி க்காக பணிபுரிந்து வரு கிறார்.

    இவர் வேலைக்கு சென்று விட்டு அவினாசியில் இரு ந்து நம்பியூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார். அப்போது அந்தி யூரில் இருந்து கோவைக்கு ஒரு தனியார் பஸ் வந்தது.

    அந்த பஸ் பரணிதரன் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை ஒட்டியபடி சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பரணி தரன் வாகனத்தை ஓரமாக நிறுத்தினார். இதையடுத்து அவர் மொட்ட ணம் அருகே அந்த தனியார் பஸ்சை நிறுத்தினார்.

    இதில் பரணி தரனுக்கும், டிரைவர் மற்றும் கண்டக்டர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பரணிதரன் நான் அடிபட்டு இறந்தால் எனது குடும்பத்தை யார் காப்பாற்றுவது இனிமேல் இது போல் செய்தீர்கள் என பஸ் டிரைவரிடம் கேட்டார். அப்போது அவர்களுக்கள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த பரணிதரன் தான் வைத்து இருந்த கத்தியை எடுத்து டிரைவர் மற்றும் டிரைவரை கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து தனியார் பஸ் டிரைவர் நம்பியூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பரணிதரனை கைது செய்தனர்.

    இதையடுத்து அவரை கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் அவரை கோபி செட்டிபாளையம் மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.

    ×