search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலினம்"

    • மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொள்ள வயிற்றைக் கணவன் கிழித்துப் பார்த்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
    • உத்தரப் பிரதேச மாநிலம் படவுன் பகுதியில் பன்னா லால்- அனிதா தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 2020 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொள்ள வயிற்றைக் கணவன் கிழித்துப் பார்த்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் இந்த வழக்கில் 4 ஆண்டுகள் கழித்து கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

     

    உத்தரப் பிரதேச மாநிலம் படவுன் பகுதியில் பன்னா லால்- அனிதா தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.அனிதா மீண்டும் கர்ப்பமான நிலையில் தனக்கு ஆண் குழைந்தையை பெற்றுத் தர வேண்டும் என்று பன்னா லால் அனிதாவுடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார்.

    ஆண் குழந்தை பிறக்காவிட்டால் அனிதாவை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு திருமணம் செய்து கொள்வேன்தொடர்ந்து மிரட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த கடந்த 2020 செப்டம்பர் மாதத்தில் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த அனிதாவுடன் இதுதொடர்பான வாக்குவாதம் முற்றிய நிலையில் அரிவாளால் அனிதாவின் வயிற்றை அறுத்து, ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை பரிசோதிப்பதாக மிரட்டி, தப்பியோட முயன்ற அனிதாவை பிடித்து அரிவாளால் வயிற்றை வெட்டினார்.

    அனிதாவின் வயிற்றில் குடல்கள் வெளியே வரும் அளவுக்கு வெட்டு ஆழமாக இருந்துள்ளது. அனிதாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த கடையில் வேலை செய்த அவளது சகோதரர் ஓடி வந்து அவளை காப்பாற்றினார். அவரை பார்த்ததும் பன்னா லால் அங்கிருந்து தப்பியோடினார்.

    மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அனிதா உயிர்பிழைத்த நிலையில் வயிற்றில் இருந்த ஆண் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. பன்னா லால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் பன்னா லால், தன் பொய் வழக்குப் பதிவு செய்ய அனிதா தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாக வாதிட்டது குறிப்பிடத்தக்கது. 

    • திருநங்கை சகோதரிகளை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு தேவையான வீட்டு உபயோக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
    • வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிமன்ற பணியாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நீதித்துறை, திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, திருப்பூர் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுகந்தி வரவேற்று பேசினார். கோவை மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர். நிர்மலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் ஸ்வர்ணம் ஜே.நடராஜன் தலைமை தாங்கிபேசினார். அப்போது அவர் பேசியதாவது:- "ஒரு இனத்திற்கான உரிமை மறுக்கப்படும்போது அதனை பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு மீண்டும் உரிமைகள் மீட்கப்பட்டு வரும் காலங்களிலும் அவ்வுரிமைகள் தொடர வேண்டும் என்பதை நமக்கு நினைவு கூறுவதே உலக மகளிர் தின கொண்டாடப்படும் வரலாறு. ஒரு பெண்ணின் விடாமுயற்சியும் தைரியமும் அவர் உழைப்பினால் பெரும் வெற்றியும் அதன் பின்னர் வரும் காலங்களில் அந்த துறை சார்ந்தபெண்கள் சிறந்து விளங்குவதற்கு முதல் வித்தாகும். இனி வரும் காலங்களில் பாலின சமத்துவத்தை முன்னெடுத்து வருங்கால சந்ததியினருக்கு சமத்துவ சமுதாயத்தை தருவோம் என்று இந்த நன்னாளிலே நாம் அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டுகிறேன் என்றார்.

    விழாவில் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீ குமார், விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி பாலு, வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் பழனிசாமி, சிவப்பிரகாசம், ராஜேந்திரன் மற்றும் நிறங்கள் அமைப்பின் நிறுவனர் சங்கரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வின் இறுதியாக முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா நன்றியுரை வழங்கினார்.

    மேலும் இந்நிகழ்வில் மகளிர் தினத்தை முன்னிட்டு நிறங்கள் அமைப்பை சேர்ந்த திருநங்கை சகோதரிகளை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு தேவையான வீட்டு உபயோக மளிகை பொருட்கள் வழங்கப்ப ட்டது. அதனை தொடர்ந்து பாரம்பரிய நாட்டுப்புற கலைகளான பறையாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருப்பூர் மாவட்ட மற்றும் தாலுக்கா சார்பு நீதிபதிகள், நீதித்துறை, நடுவர்கள், வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிமன்ற பணியாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×