search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் குண்டு வெடிப்பு"

    • கவுகா அருகே உள்ள டிம்பா போலீஸ் நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமாக ஒரு கார் நின்றது.
    • போலீஸ் நிலையத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் கார் வெடிகுண்டு வெடித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    கவுகா:

    தென்மேற்கு கொலம்பியாவின் கவுகா அருகே உள்ள டிம்பா போலீஸ் நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமாக ஒரு கார் நின்றது. திடீரென இந்த கார் வெடித்து சிதறியது. அதிகாலையில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 2 பேர் பலியானார்கள்.

    மேலும் 2 பேர் காயம் அடைந்தனர். அருகில் உள்ள ஒரு பள்ளி, மருத்துவமனை, வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சேதமடைந்தன. போலீஸ் நிலையத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் கார் வெடிகுண்டு வெடித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இது பயங்கரவாத தாக்குதல் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என காவல்துறை தெரிவித்து உள்ளது.

    • ரஷிய ஆதரவு எழுத்தாளர் சகர் பெர்லிபினை குறிவைத்து கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
    • கார் குண்டுவெடிப்பில் கார் டிரைவர் உயிரிழந்தார்.

    உக்ரைன்-ரஷியா போர் தொடங்கி ஒரு ஆண்டை தாண்டியும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ரஷிய ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைனின் பல நகரங்கள் சீர்குலைந்தன.

    இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.

    இதற்கிடையே, இந்த போரில் பல்வேறு முக்கிய பிரபலங்களும் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக, போரில் ரஷியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு கருத்து தெரிவித்த நபர்களையும் மர்மான முறையில் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

    இந்நிலையில், ரஷிய ஆதரவு எழுத்தாளர் சகர் பெர்லிபினை குறிவைத்து கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷிய ஆதரவு எழுத்தாளர் பெர்லிபின் நேற்று மாஸ்கோவில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் நிஸ்னி நவ்கொரொட் நகரில் தனது காரில் சென்றுகொண்டிருந்தார்.

    அப்போது, அந்த கார் திடீரென வெடித்து சிதறியது. காரில் வெடிகுண்டு பொறுத்தப்பட்டிருந்தது. இந்த கார் குண்டுவெடிப்பில் கார் டிரைவர் உயிரிழந்தார்.

    எழுத்தாளர் பெர்லிபின் படுகாயமடைந்தார். அவரை மீட்ட போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், எழுத்தாளரை கொல்ல முயன்ற கார் வெடிகுண்டு சம்பவபத்திற்கு உக்ரைனையும் அமெரிக்காவையும் ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

    • இந்த தாக்குதல் சர்வதேச அளவில் கடும் கண்டனத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.
    • குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

    மியான்மரின் கிழக்குப் பகுதியில் புத்த புத்தாண்டை மக்கள் நேற்று கொண்டாடினர். அப்போது, பொது மக்கள் கூட்டம் கூடியிருந்த பகோடா என்ற பகுதியில் நேற்று திடீரென தொடர் கார் குண்டுகள் வெடித்தது. இதில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    2021ம் ஆண்டில் ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பிறகு, நாடு கொந்தளிப்பில் உள்ளது. ராணுவம் மற்றும் ராணுவ எதிர்ப்பு போராளிகள் என இருதரப்பும் அடிக்கடி மோதி வருகின்றனர். இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

    மத்திய மியான்மரில் ராணுவ விமானத் தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்ட சில நாட்களில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    மேலும், இந்த குண்டு வெடிப்பில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

    இந்த தாக்குதல் சர்வதேச அளவில் கடும் கண்டனத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.

    • கார் குண்டு வெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது.
    • கோவையில் போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் வைத்து 5 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

    கோவை:

    கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஜமேசா முபீன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை மாநகரப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையில் முபினுடன் தொடர்பில் இருந்த 6 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் நடத்தினர்.

    கார் குண்டு வெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி மேலும் 5 பேரை கைது செய்தனர். மொத்தம் இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை பூந்தமல்லி என்.ஐ.ஏ. கோட்டில் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முகமது அசாருதீன், பெரோஸ் இஸ்மாயில், நவாஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பெரோஸ்கான் ஆகிய 5 பேரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிக்ள மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை நேற்று வந்தது. வழக்கை விசாரித்து நீதிபதி 5 பேரையும் 7 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார். இதனையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வந்தனர். கோவையில் போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் வைத்து 5 பேரிடமும் விசாரணை நடத்தினர். மேலும் சில இடங்களுக்கும் அவர்களை நேரில் அழைத்துச் சென்று விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    ஏற்கனவே இவர்களிடம் 2 முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தற்போது 3-வது முறையாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    ×