search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாட்டு வெடி"

    • குடிசை வீட்டில் அரசு அனுமதி பெறாமல் நாட்டு வெடிகள் தயாரிப்பது தெரியவந்தது.
    • திரிநூல், நூல்கண்டு, 40 கிலோ அட்டை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் அரசு அனுமதி பெறாமல் நாட்டு வெடிகள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவல் போலீசாருக்கு வந்தது. இதன் அடிப்படையில் சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமெக் தலைமையில், சீர்காழி மண்டல துணை வட்டாட்சியர் பாபு, சீர்காழி தீயணைப்பு அலுவலர் அலுவலர் ஜோதி, கொள்ளிடம் போலீஸார் ஆச்சாள்புரம் வள்ளுவர் தெருவிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் குடிசை வீட்டில் அரசு அனுமதி பெறாமல் நாட்டு வெடிகள் தயாரிப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சிவகுமார் வீட்டில் நடத்திய சோதனையின் போது அங்கு சிவகுமாரின் மனைவி கலா (வயது 26) பழனிச்சாமி மனைவி இந்திரா(56), மச்சராஜ் மனைவி தனுஷ்(50) ஆகிய மூவரும் நாட்டு வெடிகளை தயாரித்து தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து கொள்ளிடம் காவல்நி லையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொ ண்டனர்.

    விசாரணையில் சிவகுமார் பணியாற்றும் பட்டாசு குடோனில் இருந்து வெடி மருந்தை எடுத்து வந்து கொடுத்து இவர்கள் மூவரும் சேர்ந்து பட்டாசு தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் சிவகுமார் வீட்டில் இருந்த 4 கிலோ எடையுள்ள சல்பர், பொட்டு உப்பு, அலுமினிய பவுடர், வெடி மருந்து மற்றும் மைதா மாவு, மிக்ஸிங் கரித்துள், திரிநூல், நூல்கண்டு, 40 கிலோ அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சிவகுமாரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்த வெடி மருந்தை தீயணைப்பு படை வீரர்கள் கைப்பற்றி கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் பாதுகாப்பாக செயல் இழக்க வைத்தனர். மேலும் இது தொடர்பாக வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்ழுகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கோவிந்தன் மாடுகளை வயல்வெளிக்கு ஓட்டிச் சென்று மேய்த்து விட்டு மாலை வீட்டிற்கு மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்தார்
    • வெடி மருந்தினை பசுமாடு கடித்த உடன் வெடித்து வாய் சிதறி ரத்தம் கொட்டியது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகன் கோவிந்தன்(55) இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் தனது மாடுகளை வயல்வெளிக்கு ஓட்டிச் சென்று மேய்த்து விட்டு மாலை வீட்டிற்கு மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்தார். வரும் வழியில் ஒரு கரும்பு தோட்டத்தில் கரும்புகளை நாசம் செய்யும் காட்டு பன்றிகளை ஒழிப்பதற்காக வைத்திருந்த நாட்டு வெடி மருந்தினை பசுமாடு கடித்தது கடித்த உடன் வெடித்து வாய் சிதறி ரத்தம் கொட்டியது. பன்றிகளை கொல்ல வைத்த வெடியை மாடு கடித்த போது மாட்டின் வாய் சிதறி ரத்தம் கொட்டிய சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கோபம் அடைந்த கவுசல்யா, தனது கணவருக்கு சாப்பாடு வைத்து கொடுத்து விட்டு பெற்றோர் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார்.
    • மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த சந்தனகுமார், வயலில் பன்றிகள் அட்டகாசத்தை தடுப்பதற்காக வீட்டில் வைத்து இருந்த நாட்டு வெடியை எடுத்து மனைவி கவுசல்யா மீது வீசினார்.

    தென்காசி மாவட்டம செங்கோட்டை அருகே உள்ள வல்லம் கலைஞர் காலனியை சேர்ந்தவர் சந்தனகுமார்(வயது 33). விவசாயி. இவரது மனைவி கவுசல்யா(25).

    நேற்று வல்லத்தில் முப்புடாதி அம்மன் கோவிலில் கொடை விழா நடைபெற்றது. இதனால் சந்தனகுமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து மதுகுடித்து விட்டு வீட்டிற்கு சாப்பிட வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கும், கவுசல்யாவுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

    இதில் கோபம் அடைந்த கவுசல்யா, தனது கணவருக்கு சாப்பாடு வைத்து கொடுத்து விட்டு பெற்றோர் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். அப்போது மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த சந்தனகுமார், வயலில் பன்றிகள் அட்டகாசத்தை தடுப்பதற்காக வீட்டில் வைத்து இருந்த நாட்டு வெடியை எடுத்து மனைவி கவுசல்யா மீது வீசினார்.

    இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கவுசல்யா அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பின்பக்க தகரம் பிரிக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் திண்டிவனம் திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே கார் ஓர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல கடையை நேற்று இரவு மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றார். அவசர பணிக்காக இரவு 11 மணிக்கு ஓர்க்ஷாப்பை மீண்டும் திறந்தார். உள்ளே சென்ற பார்த்தபோது பின்பக்க தகரம் பிரிக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், கல்லாவில் வைத்திருந்த ரூ.ஒரு லட்சத்து 75 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கபட்டிருந்தது. இது குறித்து திண்டிவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பெரில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

    கொள்ளையர்கள் ஓர்க்ஷாப்பில் இருந்த காருக்கு அடியில் 2 மர்ம பொருளை வைத்து விட்டு சென்றுள்ளனர். இதனை கைப்பற்றிய போலீசார் அது நாட்டு வெடிகுண்டா அல்லது வேறு ஏதேனும் மர்ம பொருளா என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை யர்கள் ஆட்டோவில் வந்து கொள்ளையடித்து சென்றது சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்க ப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    ×